சமையல் குறிப்புகள்! அருமையான கத்தரிக்காய் கடைசல்!
கத்தரிக்காய் கடைசல் தேவையானவை: கத்தரிக்காய் - 2, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, உருளைக்கிழங்கு - தலா 1, பூண்டு - 4 பல், மஞ்சள்தூள்...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_9403.html?m=0
கத்தரிக்காய் கடைசல்
தேவையானவை: கத்தரிக்காய் - 2, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, உருளைக்கிழங்கு - தலா 1, பூண்டு - 4 பல், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு - தலா கால் டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து, ஒரு விசில் வரும் வரை வேக விடவும். பிறகு வெளியே எடுத்து லேசாக மசிக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
கத்தரிக்காய் கடைசல் சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.
Post a Comment