``கொரோனாவை எதிர்க்க இவற்றையெல்லாம் சாப்பிடுங்க..!’’ - ஊட்டச்சத்து நிபுணர் அட்வைஸ்...! கொரோனா எதிர்ப்பு சக்திஉணவுகள் ..!

 ``கொரோனாவை எதிர்க்க இவற்றையெல்லாம் சாப்பிடுங்க..!’’ - ஊட்டச்சத்து நிபுணர் அட்வைஸ் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கான உணவுகள் குறித்த...

 ``கொரோனாவை எதிர்க்க இவற்றையெல்லாம் சாப்பிடுங்க..!’’ - ஊட்டச்சத்து நிபுணர் அட்வைஸ்

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கான உணவுகள் குறித்து விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் என்றால், கொரோனா வந்துபோனதே தெரியாமல் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியால் மீண்டவர்கள் பலர். இதுகுறித்து ஊட்டச்சத்து ஆலோசகர் மீனாட்சி பஜாஜ் பேசுகையில், `` `ஒருமுறை கொரோனா வந்தவர்களுக்கு மறுபடியும் வராது’ என்கிறது ஓர் ஆராய்ச்சி, `இல்லையில்லை, வருவதற்கு வாய்ப்பிருக்கிறது’ என்கிறது இன்னோர் ஆராய்ச்சி. ஒருமுறை கொரோனா வந்ததால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி எத்தனை மாதங்கள் நம் உடலில் இருக்கும் என்பதும் இன்னும் சரிவர தெரியவில்லை. அதனால், நம் தினசரி உணவுகளின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வதுதான் இப்போதைய தீர்வு. அதே நேரம் நாம் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். உணவுகளால் கொரோனாவை சரி செய்ய முடியாது. ஆனால், கொரோனா வைரஸின் தாக்கத்தைக் குறைக்க முடியும்’’ என்றவர் அவற்றைப் பட்டியலிட்டார்.

* `வைட்டமின் ஏ’ சத்து நிறைந்த பால், பால் பொருள்கள், ஈரல், பப்பாளி, கேரட், மாம்பழம், போன்ற உணவுப் பொருள்களில் ஒன்றிரண்டாவது தினமும் சாப்பிட வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்படி காட்லிவர் ஆயில் மாத்திரையும் சாப்பிடலாம்.

* `வைட்டமின் டி’ செறிவூட்டப்பட்ட பால், எண்ணெய் வகைகளை சாப்பிடுங்கள். சீஸ் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவிலும் இந்த வைட்டனின் இருக்கிறது. தினமும் முற்பகல் 11 மணியில் இருந்து 2 மணிக்குள்ளாக 15 - 20 நிமிடங்கள் சூரியஒளியில் நின்றால், உங்கள் உடம்பு தனக்குத் தேவையான `வைட்டமின் டி’யை தானே உருவாக்கிக்கொள்ளும்.

* `வைட்டமின் சி’ நிறைந்த தக்காளி, நெல்லிக்காய், கொய்யா, குடைமிளகாய் ஆகியவற்றைப் பச்சையாக சாப்பிட வேண்டும். ஃபிரெஷ் முருங்கைக்கீரை சாறும் குடிக்கலாம். நன்கு வளர்ந்தவர்களுக்கு நாளொன்றுக்கு 40 முதல் 80 மில்லி கிராம் வரைக்கும் `வைட்டமின் சி’ தேவைப்படும். நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்ட வேண்டுமென்றால், நாளொன்றுக்கு 500 மில்லிகிராம் `வைட்டமின் சி’ எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு ஒரு கொய்யாப்பழம், ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டாலே போதும். ஒரு கொய்யாவில் மட்டும் 200 மில்லிகிராமுக்கு மேலே `வைட்டமின் சி’ சத்து இருக்கிறது. நெல்லிக்காயைப் பச்சையாகவும் சாப்பிடலாம், ஜூஸாக குடிக்கலாம். சட்னியுடன் போட்டு அரைக்கலாம், ஆனால், அரைத்த சட்னியை, தாளித்துக் கொதிக்க வைத்து விட்டீர்களென்றால், `வைட்டமின் சி’ ஆவியாகிவிடும், கவனம்.

* பேரீச்சம் பழத்தில் இருக்கிற இரும்புச்சத்தைவிட, முருங்கைக்கீரை, கொள்ளு, கேழ்வரகு, பொட்டுக்கடலை, எள், கறுப்பு கொண்டைக்கடலை, ஓட்ஸ், ஆட்டு ரத்தம் மற்றும் ஈரலில் இரும்புச்சத்து அதிகம். இவற்றில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

* ஓரக் வேல்யூ (orac value ) என்பது நம் உடலில் எதிர்ப்பு சக்தி கூட்டுகிற தன்மை. இந்தத் தன்மை முருங்கைக்கீரை, கோகோ, சீரகம், பட்டை, மஞ்சள்தூள் ஆகியவற்றில் அதிகம் இருக்கிறது. கோகோவை சாக்லேட்ஸ் வழியாக எடுத்துக்கொள்ளலாம். குழம்பு வகைகளில் பட்டை தாளித்துப் பயன்படுத்தலாம். பாலில் மஞ்சள் தூள் சேர்த்துக் குடிக்கலாம். ஒருநாளைக்கு அதிகபட்சமாக 4 சிட்டிகை மஞ்சள்தூள்தான் பாலுடன் கலந்து குடிக்க வேண்டும்.

* `வைட்டமின் பி 6’ சத்து எல்லா கடலை வகைகளிலும், வாழைப்பழத்திலும் உண்டு. இவற்றையும் சாப்பிட மறந்துவிடாதீர்கள்.

* பால், முட்டை, கோழியில் தரமான புரதம் கிடைக்கும். அரிசியையும் பருப்பையும் சேர்த்து இட்லியாகவோ, தோசையாகவோ சாப்பிடும்போது ஓரளவுக்குத் தரமான புரதச்சத்து கிடைத்துவிடும். பயறு வகைகள், நட்ஸ் வகைகள், சோயாவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட புரதம், பட்டாணியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட புரதம் ஆகியவை சைவம் சாப்பிடுபவர்களுக்கான புரத சாய்ஸ்.

* கறுப்பு கொண்டைக்கடலை, மொச்சை, பச்சைப்பயறு, ராஜ்மா போன்றவற்றை முளைக்கட்டி அல்லது ஊறவைத்தால், அதிலிருக்கிற பைடேட் (phytate ) எனும் ஆன்ட்டி நியூட்ரிஷியன்ஸ் ஃபேக்டர் இன்ஆக்டிவ் ஆகும். அப்போதுதான், நமக்கு ஸிங்க் சத்து கிடைக்கும். ஸிங்க் பாதாம் பருப்பிலும் இருக்கிறது. அது நமக்கு முழுமையாகக் கிடைக்க வேண்டுமென்பதற்காகதான் பாதாமை ஊறவைத்துச் சாப்பிடச் சொல்கிறோம். தவிர, கோதுமையிலும், சாக்லேட்டில் இருக்கிற கோகோவிலும் நிறைய ஸிங்க் உண்டு.

* கீரைகள், சுண்டல் வகைகள், ஆளிவிதை, வெந்தயம், மீன், வால்நட், உளுந்தங்களி போன்றவற்றில் ஓமேகா த்ரீ ஃபேட்டி ஆசிட் இருக்கிறது.

* குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், இதற்கு புரோ பயாட்டிக் மற்றும் ப்ரீபயாட்டிக் வேண்டும். ஓட்ஸ், வாழைப்பழம், வெங்காயம், பூண்டு ஆகியவற்றில் இருக்கிற ப்ரீபயாட்டிக் குடலில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்குபவை. புளித்தத் தயிரில் புரோ பயாட்டிக் இருக்கிறது. புரோபயாட்டிக் தயிர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது. இவையிரண்டும் சேர்ந்து குடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். குடல் ஆரோக்கியமாக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். எண்ணெயில் பொரித்த, நிறைய நெய், வெண்ணெய் சேர்த்த உணவுகள், டால்டா, மைதா, சர்க்கரை அதிகம் சேர்த்த உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

* முட்டை, காளான், கடல் சிப்பி, பூண்டு, பிரேசில் நட்ஸ் ஆகியவற்றில் செலினியம் சத்து இருக்கிறது.

* தக்காளி ரசத்தில் லைகோபீன் கிடைக்கும். இதுவும் நோய் எதிர்ப்பு சக்திக்கானதுதான்.

* 12 வயதுக்குக் கீழ் இருக்கிற குழந்தைகளுக்கு ஒரு நாள் விட்டு ஒருநாள் ஒரு டீஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெய் கொடுக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

* நாளொன்றுக்கு கருஞ்சீரகம் 2 முதல் 4 சிட்டிகை அளவு உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

* 3 முதல் 5 துளசியிலைகளைத் தினமும் சாப்பிடுங்கள்.

* இந்தக் காலகட்டத்தில் விரதம் இருப்பது, டயட் இருப்பது போன்றவற்றைச் செய்யக் கூடாது. லிக்விட் டயட், க்ராஸ் டயட் கூடவே கூடாது. உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்றால், நடைப்பயிற்சி செய்யுங்கள். டயட் வேண்டாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.


Related

கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் 8496870014590013296

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item