உங்கள் மொபைலில் எத்தனை ஆப்ஸ் வரை இன்ஸ்டால் செய்யலாம் தெரியுமா? MobileTips!

ஸ்மார்ட்போன் வாங்கியதும் டெளன்லோடு செய்ய வேண்டிய ஆப்ஸ்..! கடந்த சில ஆண்டுகளில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் ஒரு துறை மொபைல் ஆப்ஸ். த...

ஸ்மார்ட்போன் வாங்கியதும் டெளன்லோடு செய்ய வேண்டிய ஆப்ஸ்..!

கடந்த சில ஆண்டுகளில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் ஒரு துறை மொபைல் ஆப்ஸ். தொட்டதுக்கெல்லாம் ஆப்ஸ் வந்துவிட்டன. நடந்து முடிந்த ஐ.பி.எல்.லுக்காக மட்டும் ஒவ்வொருவரின் மொபைலிலும் குறைந்தது இரண்டு ஆப்ஸ் புதிதாக வந்திருக்கும். சென்ற ஆண்டு வரை 2 ஜிபி ரேம் கொண்ட மொபைல்களே அதிகம் விற்றன. இந்த ஆண்டு, 3 ஜிபி அல்லது 4 ஜிபி வரை வளர்ந்திருக்கிறது. 2 ஜிபி ரேம் கொண்ட மொபைலில் எத்தனை ஆப்ஸ் இன்ஸ்டால் செய்யலாம்? ஹேங் ஆகாமல், பெர்ஃபார்மென்ஸ் குறையாமல் இருக்க எத்தனை ஆப்ஸ்தான் எல்லைக்கோடு?

நம் மொபைலில் எத்தனை ஆப்ஸ் இருக்கலாம் என்பதை முடிவு செய்யும் முக்கியமான காரணி ரேம் அல்ல. இன்டெர்னல் மெமரிதான் என்பதை மறக்க வேண்டாம். ஆப்ஸ் இயங்கும்போதுதான் ரேம் தேவைப்படும். ஃபேஸ்புக் போன்ற ஆப்ஸ் பேக்கிரவுண்டில் இயங்கும். அவை தவிர மற்ற ஆப்ஸ் ரேம் மெமரியைச் சாப்பிடாது. எனவே, இன்டெர்னல் மெமரிதான் எத்தனை ஆப்ஸை இன்ஸ்டால் செய்யலாம் என்பதை முடிவு செய்யும் மேல் அதிகாரி.

8ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மொபைலில் 2ஜிபி வரை ஆப்ஸுக்காக ஒதுக்கலாம். ஆப்ரேட்டிங் சிஸ்டமே 2 ஜிபி வரை எடுத்துக் கொள்ளும். மீதமிருக்கும் 4 ஜிபியை ஃபைல்கள் ஸ்டோர் செய்ய ஒதுக்கலாம். அப்படியென்றால், 2 ஜிபியில் எத்தனை ஆப்ஸ் இன்ஸ்டால் செய்வது? தாராளமாக 40 அப்ளிகேஷன்கள் வரை இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.
பொதுவாக ஆப் ஒன்றின் அளவு 10 எம்.பி.யில் இருந்து 200 எம்பி வரை இருக்கும். சில ஹெச்.டி. கிராபிக்ஸ் கொண்ட கேம்ஸ் 1 ஜிபி கூட இருக்கும். அது தனிக்கதை. சராசரியாக, 2 ஜிபி மெமரிக்கு 40 ஆப்ஸ் இன்ஸ்டால் செய்யலாம்.

எக்ஸ்டெர்னல் மெமரி கார்டு உதவியுடன் கூடுதல் ஆப்களை இன்ஸ்டால் செய்பவர்களும் உண்டு. அதில் இரண்டு சிக்கல்கள் உண்டு. ஒன்று, மெமரி கார்டை மாற்றினால், அதில் இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆப்ஸ் இயங்காது. இரண்டாவது அனைத்து ஆப்ஸும் மெமரி கார்டில் இன்ஸ்டால் செய்ய முடியாது. சில ஆப்ஸ் ஃபோன் மெமரியில் மட்டுமே இயங்கும்.

இப்போது வரும் பல ஸ்மார்ட்போன்கள் ஆப்பிள் காட்டிய வழியிலே பயணிக்கின்றன. அதாவது, இன்டெர்னல் மெமரியை அவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். மெமரி கார்டு போடும் ஆப்ஷனைத் தர மறுக்கிறார்கள். அல்லது, இரண்டாவது சிம் போடும் ஸ்லாட்டிலே மெமரி கார்டு ஆப்ஷனை தருகிறார்கள். அதாவது, இரண்டு சிம்கள் போடலாம். அல்லது ஒரு சிம் ஒரு மெமரி கார்டு மட்டுமே போடலாம் என்கிறார்கள். கூடுதல் மெமரி கொண்ட மொபைல்களை வாங்கினால் விலை அதிகமாக வைத்து விற்கிறார்கள்.

ஆனால், எதிர்கால வளர்ச்சியை மனதில் கொண்டால், நிச்சயம் ஒரு ஸ்மார்ட்போனுக்கு 32 ஜிபி மெமரியாவது தேவைப்படும். இதுவும் அவ்வப்போது லேப்டாப்பில் இணைத்து, தேவையான ஃபைல்களை பேக்கப் எடுத்து வைத்துவிட்டு, மொபைலில் அழிக்கும் வாய்ப்பிருப்பவர்களுக்கே.

மொபைல் மட்டும்தான் பயன்படுத்துபவர் என்றால், 64ஜிபி கூட போதாது.
8ஜிபி மெமரி, 2ஜிபி ரேம் கொண்ட மொபைல் யூஸர்ஸ் தயங்காமல் 40 ஆப்ஸ் வரை இன்ஸ்டால் செய்யுங்கள். அது போதாது என்பவர்களுக்கு மெமரி கார்டுதான் தீர்வு. அடுத்த முறை மொபைல் வாங்கும்போது, இன்டெர்னல் மெமரியை மனதில் வைத்து முடிவெடுங்கள்.

Related

கணிணிக்குறிப்புக்கள் 2132406140807709409

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item