வலிகளை விரட்டும் ஒத்தடம்!
வலிகளை விரட்டும் ஒத்தடம்! பத்மப்ரியா சித்த மருத்துவர் த ண்ணீர் ஒத்தடம், வெந்நீர் ஒத்தடம், தவிட்டு ஒத்தடம் என ஏராளமான வகை ஒத்த...
https://pettagum.blogspot.com/2015/06/blog-post_26.html?m=0
வலிகளை விரட்டும் ஒத்தடம்!
சித்த மருத்துவ முறையில் 64 வகையான மருத்துவ சிகிச்சைகள் உள்ளன. இதில்
32 சிகிச்சைகள், உடலின் உட்புறப் பகுதிக்கும் 32 உடலின் வெளிப்புறப்
பகுதிக்கும் அளிக்கப்படுகின்றன. வெளிப்புற சிகிச்சையில் மிக முக்கியமானது
ஒத்தடம்.
குளிர்ச்சி, சூடு என இரண்டு வகையில் ஒத்தடங்கள் கொடுக்கப்படுகின்றன.
குளிர்ச்சி முறையில் செய்யும் ஒத்தடம் குறைவாகத்தான் பயன்படுத்தப்படுகிறது. அடிபட்ட காயங்கள், கொழுப்புக் கட்டிகளுக்கு குளிர்ச்சி ஒத்தடம் கொடுக்கலாம்.
விபத்தில் காயம் அடைந்ததும், காயம்பட்ட இடம் மிகவும் சூடாக இருக்கும். ரத்த நாளங்கள் வீக்கம் அடைந்து வெப்பம் தகிக்கும். இதில், சூடாக ஒத்தடம் கொடுத்தால், ரத்த நாளங்கள் மேலும் வீக்கமடைந்து, காயம்பட்ட இடத்திலிருந்து ரத்தம் அதிகம் வெளியேற ஆரம்பித்து, பாதிப்பை அதிகப்படுத்திவிடும். துணியில் ஐஸ்கட்டிகளைப் போட்டு, காயம்பட்ட இடத்தில் மெதுவாக ஒத்தி எடுக்கலாம். கொழுப்புக் கட்டிக்கு ஐஸ் ஒத்தடம் கொடுக்கும்போது, அந்த இடத்தில் வலியை மறையச் செய்யும்.
காயம், கட்டிகளைச் சுத்தப்படுத்தவும் இந்த ஐஸ் ஒத்தடம் உதவுகிறது.
வாதப் பிரச்னைகளால்தான் வலி வரும். வாதப் பிரச்னை உள்ளவர்களுக்கு காற்றானது, உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் நகர்ந்துகொண்டே இருப்பதால், அந்த இடங்களில் வலி அதிகமாக இருக்கும். இதற்கு, சூடான ஒத்தடம் சிறந்த தீர்வு.
நீரை நன்றாகக் கொதிக்கவைத்து, கம்பளி அல்லது பருத்தித் துணியை அதில் முக்கி எடுத்து ஒத்தடம் கொடுக்கலாம். மேலும், சுண்ணாம்புக் காரைத் தூள், செங்கல்தூளை சூடு செய்து, ஒத்தடம் தருவதால், வாதப் பிரச்னை தீரும்.
ஆமணக்கு எண்ணெய், நொச்சி இலை, எருக்கு இலை, தழுத்தாழை, ஆமணக்கு ஆகியவற்றைப் போட்டு சூடாகக் காய்ச்சி, ஒத்தடம் கொடுத்தால், வாதத்தினால் ஏற்படும் வலி குறையும்.
இடுப்பு, மார்புப் பகுதியில் ஏற்படும் வலிகளைப் போக்க, அரிசி தவிடு, சுண்ணாம்புக் காரை, செங்கல் தூள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நன்றாக வறுத்து, சூடாக இருக்கும்போது, துணியில் கட்டி வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.
நெல், ஓமம், கொள்ளு மாவு, முட்டை ஓடு இவற்றை வறுத்து, சூடாக இருக்கும்போது துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். மண் பானை ஓட்டை சூடுசெய்து ஒத்தடம் தரலாம்.
குழந்தைகளுக்கு நெஞ்சில் சளி இருந்தால், வெற்றிலையில் எண்ணெயைத் தடவி, வாட்டிவிட்டு மிதமான சூட்டில் ஒத்தடம் கொடுக்கலாம். சளி சட்டென இளகும்.
குழந்தைகளுக்கு நெஞ்சில் கபம் இருந்தால், உடல் சில்லிட்டுப்போகும். சுவாசிக்கச் சிரமப்படும். இதற்கு அரிசித் தவிட்டை நன்கு வறுத்து, மிதமான சூடாகத் துணியில் கட்டி, நெஞ்சுப் பகுதியில் ஒத்தி எடுக்கலாம். கருங்கல்பாறைத் தூளை வாங்கி சூடு செய்தும் ஒத்தடம் கொடுக்கலாம். கை கால் வலி, குடைச்சலுக்கு இந்த ஒத்தடம் நல்ல பலனைத் தரும்.
மார்புப் பகுதிக்கு கோதுமைத் தவிடு, வயிற்றுவலிக்கு ஆமணக்கு, கட்டிகளுக்கு வெந்நீர் ஒத்தடம், ஜில்லிட்டுப் போன கை, கால், குதிகாலுக்கு ஓமம், செங்கல் தூள் ஒத்தடம் கொடுக்கலாம்.
பத்மப்ரியா
சித்த மருத்துவர்
தண்ணீர்
ஒத்தடம், வெந்நீர் ஒத்தடம், தவிட்டு ஒத்தடம் என ஏராளமான வகை ஒத்தடங்கள்
உள்ளன. உடல் உறுப்புக்களும் தசைகளும் போதிய அசைவு இல்லாமல் போகும்போது,
உடலில் ஆங்காங்கே தசைகள் முறுக்கிக்கொண்டு, வலியை ஏற்படுத்தும். முழங்கால்
வலி என்றால் வெந்நீர் ஒத்தடம், நெஞ்சில் சளி அதிகம் இருந்தால் தவிட்டு
ஒத்தடம் என்று வீட்டிலேயே பாரம்பரிய பாட்டி வைத்தியம் செய்துகொண்டனர் நம்
முன்னோர்கள். மாத்திரைகள் சாப்பிடுவதைக் காட்டிலும், உடனடித் தீர்வைத்
தரக்கூடியது ஒத்தடம்.சித்த மருத்துவர்
குளிர்ச்சி, சூடு என இரண்டு வகையில் ஒத்தடங்கள் கொடுக்கப்படுகின்றன.
குளிர்ச்சி முறையில் செய்யும் ஒத்தடம் குறைவாகத்தான் பயன்படுத்தப்படுகிறது. அடிபட்ட காயங்கள், கொழுப்புக் கட்டிகளுக்கு குளிர்ச்சி ஒத்தடம் கொடுக்கலாம்.
விபத்தில் காயம் அடைந்ததும், காயம்பட்ட இடம் மிகவும் சூடாக இருக்கும். ரத்த நாளங்கள் வீக்கம் அடைந்து வெப்பம் தகிக்கும். இதில், சூடாக ஒத்தடம் கொடுத்தால், ரத்த நாளங்கள் மேலும் வீக்கமடைந்து, காயம்பட்ட இடத்திலிருந்து ரத்தம் அதிகம் வெளியேற ஆரம்பித்து, பாதிப்பை அதிகப்படுத்திவிடும். துணியில் ஐஸ்கட்டிகளைப் போட்டு, காயம்பட்ட இடத்தில் மெதுவாக ஒத்தி எடுக்கலாம். கொழுப்புக் கட்டிக்கு ஐஸ் ஒத்தடம் கொடுக்கும்போது, அந்த இடத்தில் வலியை மறையச் செய்யும்.
காயம், கட்டிகளைச் சுத்தப்படுத்தவும் இந்த ஐஸ் ஒத்தடம் உதவுகிறது.
வாதப் பிரச்னைகளால்தான் வலி வரும். வாதப் பிரச்னை உள்ளவர்களுக்கு காற்றானது, உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் நகர்ந்துகொண்டே இருப்பதால், அந்த இடங்களில் வலி அதிகமாக இருக்கும். இதற்கு, சூடான ஒத்தடம் சிறந்த தீர்வு.
நீரை நன்றாகக் கொதிக்கவைத்து, கம்பளி அல்லது பருத்தித் துணியை அதில் முக்கி எடுத்து ஒத்தடம் கொடுக்கலாம். மேலும், சுண்ணாம்புக் காரைத் தூள், செங்கல்தூளை சூடு செய்து, ஒத்தடம் தருவதால், வாதப் பிரச்னை தீரும்.
ஆமணக்கு எண்ணெய், நொச்சி இலை, எருக்கு இலை, தழுத்தாழை, ஆமணக்கு ஆகியவற்றைப் போட்டு சூடாகக் காய்ச்சி, ஒத்தடம் கொடுத்தால், வாதத்தினால் ஏற்படும் வலி குறையும்.
இடுப்பு, மார்புப் பகுதியில் ஏற்படும் வலிகளைப் போக்க, அரிசி தவிடு, சுண்ணாம்புக் காரை, செங்கல் தூள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நன்றாக வறுத்து, சூடாக இருக்கும்போது, துணியில் கட்டி வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.
நெல், ஓமம், கொள்ளு மாவு, முட்டை ஓடு இவற்றை வறுத்து, சூடாக இருக்கும்போது துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். மண் பானை ஓட்டை சூடுசெய்து ஒத்தடம் தரலாம்.
குழந்தைகளுக்கு நெஞ்சில் சளி இருந்தால், வெற்றிலையில் எண்ணெயைத் தடவி, வாட்டிவிட்டு மிதமான சூட்டில் ஒத்தடம் கொடுக்கலாம். சளி சட்டென இளகும்.
குழந்தைகளுக்கு நெஞ்சில் கபம் இருந்தால், உடல் சில்லிட்டுப்போகும். சுவாசிக்கச் சிரமப்படும். இதற்கு அரிசித் தவிட்டை நன்கு வறுத்து, மிதமான சூடாகத் துணியில் கட்டி, நெஞ்சுப் பகுதியில் ஒத்தி எடுக்கலாம். கருங்கல்பாறைத் தூளை வாங்கி சூடு செய்தும் ஒத்தடம் கொடுக்கலாம். கை கால் வலி, குடைச்சலுக்கு இந்த ஒத்தடம் நல்ல பலனைத் தரும்.
மார்புப் பகுதிக்கு கோதுமைத் தவிடு, வயிற்றுவலிக்கு ஆமணக்கு, கட்டிகளுக்கு வெந்நீர் ஒத்தடம், ஜில்லிட்டுப் போன கை, கால், குதிகாலுக்கு ஓமம், செங்கல் தூள் ஒத்தடம் கொடுக்கலாம்.
கவனம்!
சருமத்தைத் தாங்கக்கூடிய அளவுக்கு, சூடு இருக்க வேண்டும். அதிக வெப்பம்,
சருமத்தைப் பாதிக்கும். குழந்தைகளுக்கு ஒத்தடம் கொடுக்கும்போது, கவனமாகக்
கொடுக்க வேண்டும்.
Post a Comment