மிக்ஸ்டு வெஜிடபிள் ஜூஸ் !
மிக்ஸ்டு வெஜிடபிள் ஜூஸ் ! தேவையானவை: கேரட், தக்காளி - தலா 3, பீட்ரூட் - 1, பாகற்காய் - சிறியது 1, சுரைக்காய் - சிறியது 1, முட்ட...
https://pettagum.blogspot.com/2015/04/blog-post_2.html?m=0
மிக்ஸ்டு வெஜிடபிள் ஜூஸ் !
தேவையானவை: கேரட், தக்காளி - தலா 3, பீட்ரூட் - 1, பாகற்காய் - சிறியது 1, சுரைக்காய் - சிறியது 1, முட்டைகோஸ் - 25 கிராம், இஞ்சி - மிகச் சிறிய துண்டு, ஓமம் - அரை டீ ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், மிளகுத் தூள் - அரை டீஸ்பூன், உப்பு, ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை: ஒரு சிறிய பாத்திரத்தில்
சிறிதளவு தண்ணீர் விட்டு, ஓமத்தை ஊறவைக்கவும். கேரட், தக்காளி,
பீட்ரூட், பாகற்காய், சுரைக்காய், முட்டைகோஸ், இஞ்சி ஆகியவற்றை சிறிய
துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் ஜூஸாக அரைக்கவும். இதனுடன், ஓமம் தண்ணீர்,
எலுமிச்சைச் சாறு, மிளகுத் தூள், உப்பு சேர்த்து, மீண்டும் மிக்ஸியில்
அரைக்கவும். தேவைப்பட்டால், ஐஸ் துண்டுகள் சேர்க்கலாம்.
பலன்கள்: கேரட், தக்காளியில் வைட்டமின் ஏ இருக்கிறது. மேலும், பீட்ரூட், முட்டைகோஸ், பாகற்காய் போன்றவற்றில் இருந்து பீட்டாகரோட்டின், நார்ச்சத்து, ஃபோலேட் (Folate), வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகியவை கிடைக்கும். இதய நோயாளிகளுக்கு ஏற்ற ஜூஸ். சுரைக்காய் இருப்பதால், உடல் பருமன் இருப்பவர்கள், இந்த ஜூஸைக் குடிக்கலாம்.
புற்றுநோய் வராமல் தடுக்க, இந்த ஜூஸ் அருந்தலாம். எலுமிச்சைச் சாறு மூலம் வைட்டமின் சி, கே கிடைக்கும். மலச்சிக்கல், ஜீரணக்கோளாறு உள்ளவர்கள், சளியால் அவதிப்படுபவர்கள் (ஐஸ் இல்லாமல்) இந்த ஜூஸைப் பருகலாம். எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, இந்த ஜூஸ் ஏற்றது.

Post a Comment