30 வகை ஃபைவ் ஸ்டார் ரெசிப்பி! 30 நாள் 30 வகை சமையல்!!

30 வகை ஃபைவ் ஸ்டார் ரெசிப்பி ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு என்றாலே ஒரு கெத்துதான். அங்கு பரிமாறப்படும் உணவு, அதன் விலை, பரிமாறும் வி...

30 வகை ஃபைவ் ஸ்டார் ரெசிப்பி

ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு என்றாலே ஒரு கெத்துதான். அங்கு பரிமாறப்படும் உணவு, அதன் விலை, பரிமாறும் விதம் ஆகியவற்றைப் பற்றி வியப்புடன் சிலாகிக்காதவர்கள் மிகவும் குறைவு. அத்தகைய ஹோட்டல்களில் பரிமாறப்படும் உணவை, உங்கள் கிச்சனிலேயே சமைத்து, உங்கள் டைனிங் ஹாலில் பரிமாறினால் எவ்வளவு உற்சாகமாக இருக்கும்..!
அந்த மகிழ்ச்சியை உங்களுக்கு அளிக்கும் விதத்தில்... ஸ்டார்டர், மெயின் கோர்ஸ், டெசர்ட் என 30 வகை 'ஃபைவ் ஸ்டார் ரெசிப்பி’களை அள்ளி வழங்குகிறார் 'செஃப்’ பழனி முருகன். ஹோட்டல் மற்றும் கேட்டரிங் துறையில் 14 வருடங்கள் பணியாற்றியிருக்கும் இவர், சொந்த கேட்டரிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

வெஜ் வான்டன் சூப்
தேவையானவை: மைதா - 30 கிராம், கேரட் - 20 கிராம், பீன்ஸ் - 10 கிராம், வெங்காயம் - 5 கிராம், செலரி (கொத்தமல்லி போன்றது - டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 2 கிராம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு -  தலா 5 கிராம், பச்சை மிளகாய் - ஒன்று, சோயா சாஸ் - 2 மில்லி, அஜினோமோட்டோ (விரும்பினால்) - சிறிதளவு, ஸ்பிரிங் ஆனியன் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  பொடியாக நறுக்கிய வெங்காயம், பீன்ஸ், இஞ்சி, பச்சை மிளகாய், பாதி அளவு கேரட், பூண்டு மற்றும் சோயா சாஸ், செலரி, சிறிதளவு உப்பு ஆகியவற்றை எண்ணெயில் நன்கு வதக்கிக்கொள்ளவும். மைதாவை சமோசா மாவு பதத்துக்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும். வதக்கியவற்றை மைதாவினுள் வைத்து சமோசா செய்வது போல் செய்து, இட்லி பானையில் ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அது கிரீடம் போன்ற வடிவில் இருக்க வேண்டும். இப்போது வான்டன் தயார்.
கடாயில் எண்ணெய் ஊற்றி மீதமுள்ள பூண்டு, கேரட், சேர்த்து வதங்கியதும் தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்தவுடன், தயார் செய்து வைத்துள்ள வான்டனை போட்டு, தேவையான உப்பு சேர்த்து, (விரும்பினால்) அஜினோமோட்டோ சேர்த்து இறக்கி, நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.

வெஜ் ஹரபரா கபாப்
தேவையானவை: வேகவைத்த உருளைக்கிழங்கு - 100 கிராம், வேகவைத்த கேரட், பீன்ஸ் - தலா 25 கிராம், பனீர் - 50 கிராம், புதினா - 20 கிராம், கொத்தமல்லி - 30 கிராம், பச்சை மிளகாய் - 2.  இஞ்சி, பூண்டு - தலா 10 கிராம், சாட் மசாலா - 2 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, முந்திரி, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:  புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நன்கு நறுக்கிக்கொள்ளவும். இவற்றை வேகவைத்த உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் ஆகியவற்றோடு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். இதனுடன் சாட் மசாலா, துருவிய பனீர், உப்பு சேர்த்து பதமாக வட்டமான வடிவில் தட்டி, அதன் நடுவில் முந்திரியைப் பதித்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து, சூடாகப் பரிமாறவும்.

பேபி கார்ன் பெப்பர் அண்ட் சால்ட்
தேவையானவை: பேபி கார்ன் - 200 கிராம், கார்ன்ஃப்ளார் - 20 கிராம், மிளகு (பொடித்தது) - 10 கிராம், மைதா - 20 கிராம், பொடியாக நறுக்கிய இஞ்சி - பூண்டு - தலா 10 கிராம், செலரி - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, வெங்காயம் - 20 கிராம், சோயா சாஸ் - 5 மில்லி, நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் - சிறிதளவு, அஜினோமோட்டோ (விரும்பினால்) - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை:  தோல் உரித்த பேபி கார்னை கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து, துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இதனுடன் கார்ன்ஃப்ளார், மைதா, சிறிதளவு உப்பு சேர்த்துப் பிசிறி எண்ணெயில் பொரித்தெடுத்து தனியாக வைக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், செலரி, பொரித்த பேபி கார்ன், தேவையான உப்பு, சோயா சாஸ், மிளகுத்தூள், அஜினோமோட்டோ (விரும்பினால்) சேர்த்துக் கிளறினால், பேபி கார்ன் பெப்பர் அண்ட் சால்ட் ரெடி. இதனை நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் கொண்டு அலங்கரிக்கவும்.

ஹனி க்ளேஸ்டு பெப்பர் மஷ்ரூம்
தேவையானவை: பட்டன் மஷ்ரூம் - 150 கிராம், நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா 20 கிராம், தேன் - 50 மில்லி, சோயா சாஸ் - 5 மில்லி, கார்ன்ஃப்ளார் - 20 கிராம், மைதா - 10 கிராம், பழுப்பு சர்க்கரை - 10 கிராம், மிளகு (பொடி செய்தது) - 10 கிராம், அஜினமோட்டோ (விரும்பினால்) - சிறிதளவு, ஸ்பிரிங் ஆனியன் - சிறிதளவு, எண்ணெய், உப்பு  - தேவைக்கேற்ப.
செய்முறை:  மஷ்ரூம், மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.  பிறகு, கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு சேர்த்து வதங்கியதும், தேன், பழுப்பு சர்க்கரை, சோயா சாஸ், உப்பு, (விரும்பினால்) அஜினோமோட்டோ சேர்த்து, பொரித்து வைத்த மஷ்ரூமை அதனுடன் சேர்த்துப் புரட்டி, மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும். நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் கொண்டு அலங்கரிக்கவும்.

அமெரிக்கன் கார்ன் - சீஸ் பால்ஸ்
தேவையானவை: வேகவைத்த உருளைக்கிழங்கு - 50 கிராம், சீஸ் - 50 கிராம் (துருவிக்கொள்ளவும்), அமெரிக்கன் கார்ன் - 25 கிராம், பச்சை மிளகாய் - 2, கார்ன்ஃப்ளார் - 10 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  சிறிதளவு சீஸை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வும். உருளைக்கிழங்கு, அமெரிக்கன் கார்ன், மீதமுள்ள சீஸ், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, எலுமிச்சை அளவில் உருண்டைகளாக உருட்டி, கார்ன்ஃப்ளாரில் புரட்டி வைக்க வும். கடாயில் எண்ணெய் ஊற்றி, உருண்டைகளைப் பொரித்தெடுக்கவும். பொரித்ததை தட்டில் வைத்து, துருவிய சீஸ் தூவி அலங்கரிக்கவும்.

க்ரிஸ்பி ஃப்ரைடு வெஜிடபிள்ஸ்
தேவையானவை: குடமிளகாய் - 25 கிராம், முட்டைகோஸ், கேரட், பொடியாக நறுக்கிய பூண்டு - தலா 20 கிராம், வெங்காயம் - 25 கிராம், செலரி - ஒரு சிட்டிகை, மைதா, கார்ன்ஃப்ளார் - தலா 20 கிராம், சோயா சாஸ் - 2 மில்லி, நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் - சிறிதளவு, அஜினோமோட்டோ (விரும்பினால்) - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிக்கத் தேவை யான அளவு, உப்பு - தேவைக் கேற்ப.
செய்முறை:  காய்கறிகள் அனைத்தையும்  சதுரமாக நறுக்கிக்கொள்ளவும். மைதா, கார்ன் ஃப்ளார் உடன் தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்துக்கொள்ளவும். இதனுடன் மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.  இந்தக் கலவையை சூடான எண்ணெயில் பக்கோடா போல் கிள்ளிப் போட்டு நன்கு மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும். பின்னர் தட்டில் வைத்து, நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் கொண்டு அலங்கரிக்கவும். இதனை சுடச் சுட பரிமாறவும்.

மினிஸ்ட்ரோன் சூப்
தேவையானவை: வெங்காயம் - 10 கிராம், பொடியாக நறுக்கிய பூண்டு - 10 கிராம், நறுக்கிய தக்காளி - 20 கிராம்,   விதை நீக்கிய தக்காளியின் சாறு - 100 மில்லி, கேரட் - 20 கிராம், நறுக்கிய செலரி - 20 கிராம், பீன்ஸ் - 10 கிராம், கறுப்பு மிளகு - 10 கிராம், பாஸ்தா - 20 கிராம், தைம் - ஒரு சிட்டிகை, வெண்ணெய் - 20 கிராம், துருவிய சீஸ் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:  கடாயில் வெண்ணெய் சேர்த்து,  பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயத்தை வதக்கி, பின்னர் தக்காளி சாறு, நறுக்கிய தக்காளி, கேரட், செலரி, பீன்ஸ், தைம், உப்பு, கறுப்பு மிளகு ஆகிய அனைத்தும் சேர்த்து 15 நிமிடம் வேகவைக்கவும். பிறகு பாஸ்தா சேர்த்து மீண்டும் 15 நிமிடம் வேகவைக்கவும் (பாஸ்தா நன்கு வேகும் வரை). பிறகு, துருவிய சீஸ் சேர்த்து அலங்கரிக்கவும்.

வெஜ் ஜால் ஃப்ரைஸி
தேவையானவை: வெண்ணெய் - 25 கிராம், சீரகம் - 5 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா 3 கிராம், மிளகாய்த்தூள் - 5 கிராம், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - ஒரு சிட்டிகை, நறுக்கிய கேரட், குடமிளகாய், பீன்ஸ், தக்காளி, வெங்காயம் - தலா 20 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - 20 கிராம், நறுக்கிய காலிஃப்ளவர் - 10 கிராம், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி - சிறிதளவு, எலுமிச்சை - ஒன்று, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  கடாயில் வெண்ணெயை சேர்த்து... உருகியதும் சீரகம், இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், வெங்காயம், குடமிளகாய், தக்காளி, கொத்தமல்லி, உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், எலுமிச்சைச் சாறு, கஸ¨ரி மேத்தி சேர்த்து வதக்கி எடுத்துப் பரிமாறவும்.

வெஜிடபிள் மேன்சோ சூப்
தேவையானவை: பட்டன் மஷ்ரூம் - 20 கிராம், கேரட் - 10 கிராம், முட்டைகோஸ் - 10 கிராம், சைனீஸ் பிளாக் மஷ்ரூம் - 10 கிராம், குடமிளகாய் - 10 கிராம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா 10 கிராம், மூங்கில் குருத்து - 10 கிராம், பச்சை மிளகாய் - ஒன்று, ரெட் சில்லி சாஸ் - 5 மில்லி, சோயா சாஸ் - 5 மில்லி, நூடுல்ஸ் - 10 கிராம், கார்ன்ஃப்ளார் - 20 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நூடுல்ஸை தண்ணீரில் வேகவைத்து, உலர்த்தி, எண்ணெயில் பொரித்தெடுத்து, தனியாக வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி,  நறுக்கிய பட்டன் மஷ்ரூம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கேரட், குடமிளகாய், முட்டைகோஸ், சேர்த்து வதக்கி, பின்னர் பிளாக் மஷ்ரூம், சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய மூங்கில் குருத்து, 200 மில்லி தண்ணீர் சேர்க்கவும். இதனுடன் சோயா சாஸ்,      ரெட் சில்லி சாஸ், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதித்ததும், அதில் கார்ன்ஃப்ளாரை தண்ணீரில் கரைத்து சேர்த்துக் கிளறவும். கடைசியாக பொரித்த நூடுல்ஸ்  கொண்டு அலங்கரிக்கவும்.

பனீர் - பெப்பர் சூப்
தேவையானவை: வெங்காயம் - 20 கிராம், கறிவேப்பிலை, மிளகு, மிளகுத்தூள் - தலா 5 கிராம், பொடியாக நறுக்கிய பூண்டு - 10 கிராம், பனீர் - 50 கிராம், பால் - 100 மில்லி, மைதா - 25 கிராம், வெண்ணெய் - 20 கிராம், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  கடாயில் வெண்ணெய் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், பூண்டு, பனீர், கறிவேப்பிலை, மிளகு சேர்த்து வதக்கவும். வதங்கியதும், மைதா சேர்த்து மேலும் வதக்கவும். அதில் பால் சேர்த்து, தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டியில் வடிகட்டி, மிளகுத்தூள் தூவி, உப்பு சேர்த்து, துருவிய பனீர் கொண்டு அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.

கேஸ்பாச்சோ கோல்டு சூப்
தேவையானவை: பச்சை மெலன் - 25 கிராம், தோல் நீக்கிய வெள்ளரி - 100 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 25 கிராம், அவகேடோ - 25 கிராம், ஜெலபினோ (பஜ்ஜி மிளகாய் - விதை நீக்கி பொடியாக்கியது) - 10 கிராம், மிளகுத்தூள் - சிறிதளவு, வினிகர் - 5 மில்லி, எலுமிச்சைச் சாறு - 5 மில்லி, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் (மிளகுத் தூள் தவிர) ஒன்றுசேர்த்து, 50 மில்லி நீர் விட்டு, நன்கு அரைத்து, அதன் மேல் மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

ஹாங்காங் வெஜ் ஃப்ரைடு நூடுல்ஸ்
தேவையானவை: நூடுல்ஸ் - 150 கிராம், வெங்காயம் - 25 கிராம், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், குடமிளகாய் - தலா 20 கிராம், இஞ்சி, பூண்டு - தலா 10 கிராம், சோயா சாஸ், சில்லி சாஸ், வினிகர் - தலா 10 மில்லி, பழுப்பு சர்க்கரை - 5 கிராம், செலரி, நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் - சிறிதளவு, மிளகுத்தூள் - 10 கிராம், சிவப்பு மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நூடுல்ஸை தண்ணீரில் வேகவைத்து அதனுடன் வினிகர், உப்பு சேர்த்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.  கடாயில் எண்ணெய் ஊற்றி, சிவப்பு மிளகாய், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், குடமிளகாய், நூடுல்ஸ் சேர்த்து வதக்கவும். இதனுடன் சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகுத்தூள், பழுப்பு சர்க்கரை, உப்பு, செலரி சேர்த்துக் கிளறி இறக்கவும். இதனை ஸ்பிரிங் ஆனியன் கொண்டு அலங்கரிக்கவும்.

வெஜ் சாப்ஸி
தேவையானவை: கேரட், முட்டைகோஸ், வெங்காயம், குடமிளகாய் - தலா 20 கிராம், பூண்டு - 10 கிராம், நூடுல்ஸ் - 150 கிராம், சோயா சாஸ் - 10 மில்லி, கார்ன்ஃப்ளார் - 10 கிராம், சர்க்கரை - சிறிதளவு, டொமேட்டோ கெட்சப், அஜினோமோட்டோ (விரும்பினால்) - சிறிதளவு, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.
செய்முறை: நூடுல்ஸை வேகவைத்து, உப்பு, வினிகர் சேர்க்கவும். இதில் 5 கிராம் கார்ன்ஃப்ளார் சேர்த்துப் பிசிறி, உலரவிட்டு எண்ணெயில் பொரித் தெடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, முட்டை கோஸ், கேரட், குடமிளகாய், சேர்த்து வதக்கவும். பின்னர் சோயா சாஸ், சர்க்கரை, உப்பு, டொமேட்டோ கெட்சப், (விரும்பினால்) அஜினோமோட்டோ சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு 50 மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். மீதமுள்ள கார்ன்ஃப்ளாரை சிறிதளவு நீரில் கரைத்து அதில் ஊற்றவும். பொரித்து வைத்துள்ள நூடுல்ஸை சேர்த்துக் கிளறி, சூடாகப் பரிமாறவும்.

ட்ரைஃபிள் புட்டிங்
தேவையானவை: பிளெய்ன் ஸ்பான்ச் கேக் - 250 கிராம், நறுக்கிய அன்னாசிப்பழம் - 50 கிராம், நறுக்கிய ஆப்பிள் - 50 கிராம், செர்ரி - 25 கிராம், கஸ்டர்டு பவுடர் - 20 கிராம், சர்க்கரை - 100 கிராம், ஃப்ரெஷ் க்ரீம் - 50 மில்லி, ஃப்ரூட் ஜாம் - 50 கிராம், பால் - அரை லிட்டர்.
செய்முறை: பாலில் கஸ்டர்டு பவுடர், சர்க்கரை, சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும். ஒரு ட்ரேயில் பிளெய்ன் ஸ்பான்ச் கேக் வைத்து, ஜாம் தடவி, அதன்மேல் பழங்களை வைத்து, அதன் மேல் இன்னொரு ஸ்பான்ச் கேக் வைத்து, பால் கலவையை அதில் ஊற்றி, செர்ரி சேர்த்து... ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்திருந்து எடுத்து பரிமாறவும்.

பனீர் புலாவ்
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கிலோ, பனீர் - 200 கிராம், நெய் - 100 கிராம், பட்டை, ஏலக்காய், சீரகம், கிராம்பு - தலா 5 கிராம், பிரியாணி இலை -  சிறிதளவு, புதினா - 25 கிராம், கொத்தமல்லித் தழை - 50 கிராம், பால் - 100 மில்லி, பச்சை மிளகாய் - சிறிதளவு, இஞ்சி, பூண்டு - தலா 50 கிராம், சர்க்கரை - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், சீரகம், கிராம்பு, பிரியாணி இலை, புதினா, கொத்த மல்லித் தழை, இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அரிசியின் அளவில் ஒன்றரை பங்கு தண்ணீர் ஊற்றி, பால், சர்க்கரையையும் சேர்த்து, கொதிக்க வைக்கவும். ஊற வைத்த அரிசியைச் சேர்த்து வேகவிட்டு, தண்ணீர் வற்றியதும், துருவிய பனீர், உப்பு சேர்க்கவும். பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, தண்ணீர் தெளித்து, புலாவ் இருக்கும் பாத்திரத்தை தோசைக்கல் மீது வைத்து மூடி வைக்கவும் (அடுப்பை சிறு தீயில் வைக்கவும்). 20 நிமிடம் கழித்து இறக்கும்போது நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

டிங்கிரி துல்மா
தேவையானவை: பட்டன் மஷ்ரூம் - 150 கிராம், பனீர் - 100 கிராம், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள் - தலா 5 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - 20 கிராம், முந்திரி - 10 கிராம், சீரகம் - 5 கிராம், நறுக்கிய தக்காளி, வெங்காயம் - தலா 20 கிராம், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) ஒரு சிட்டிகை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், நெய் - தலா 25 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  பனீரை நறுக்கி எண்ணெயில் பொரித்து எடுத்து மிதமான சுடுநீரில் போட்டு  எடுத்து பிழிந்து வைக்கவும். கடாயில் நெய் ஊற்றி சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி,  இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பச்சை வாசனை போனதும் தக்காளி, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, ஊற வைத்து அரைத்த முந்திரி, கஸ¨ரி மேத்தி சேர்க்கவும். பொரித்த பனீர், இரண்டாக நறுக்கிய மஷ்ரூம்களை சேர்த்துக் கிளறி இறக்கவும். கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.

தம் ஆலு
தேவையானவை: சின்ன உருளைக்கிழங்கு, வெங்காயம், பெங்களூர் தக்காளி - தலா 50 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - 20 கிராம், முந்திரி - 25 கிராம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2 கிராம், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள், சோம்புத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா 5 கிராம், தயிர் - 50 மில்லி, கொத்தமல்லி - சிறிதளவு, கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  சின்ன உருளைக்கிழங்கை வேகவைத்து எண்ணெயில் பொரிக்கவும். முந்திரியை ஊறவைத்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி, முந்திரி விழுது, தயிர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சோம்புத்தூள், கரம் மசாலாத்தூள், கஸ¨ரி மேத்தி, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். கொத்தமல்லித்தழை கொண்டு அலங்கரிக்கவும்.

சிங்கப்பூர் வெஜ் ஃப்ரைடு ரைஸ்
தேவையானவை: பாசுமதி அரிசி - 100 கிராம், நறுக்கிய கேரட், முட்டைகோஸ், குடமிளகாய், பூண்டு - தலா 20 கிராம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 5 கிராம், சோயா சாஸ் - 5 மில்லி, சில்லி கார்லிக் சாஸ் - 10 மில்லி, கீரை - 10 கிராம், நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் - 10 கிராம், மிளகுத்தூள் - 10 கிராம், வினிகர் - 10 மில்லி, அஜினோமோட்டோ (விரும்பினால்) - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசுமதி அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும்.  பின்னர் வேகவைத்து, முக்கால் பங்கு வெந்ததும் அதோடு வினிகர், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு, வடிகட்டி உலர வைத்து, ஆறவைக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு, கேரட், குடமிளகாய், கீரை, முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும். இதனுடன், வடிகட்டி வைத்திருக்கும் சாதம் சேர்த்து, பச்சை மிளகாய், சோயா சாஸ், சில்லி கார்லிக் சாஸ், உப்பு, மிளகுத்தூள், (விரும்பினால்) அஜினோமோட்டோ அனைத்தையும் சேர்த்து 2 நிமிடம் புரட்டவும். பிறகு, நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் கொண்டு அலங்கரிக்கவும்.

மலாய் கோஃப்தா கறி
தேவையானவை: பனீர் - 50 கிராம், வேகவைத்த உருளைக்கிழங்கு - 50 கிராம், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, மிளகாய்த்தூள்- சிறிதளவு, கரம் மசாலாத்தூள் - 3 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - 20 கிராம், ஃப்ரெஷ் க்ரீம் - 50 மில்லி, முந்திரி - 50 கிராம், வெங்காயம் - 100 கிராம், கார்ன்ஃப்ளார் - 20 கிராம், பச்சை மிளகாய் - 5 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: துருவிய பனீர், வேகவைத்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி, கார்ன்ஃப்ளாரில் புரட்டி எண்ணெயில் பொரிக்கவும். பின்பு ஒரு பாத்திரத்தில் வெங்காயம், முந்திரி, பச்சை மிளகாய் சேர்த்து வேகவைத்து, வடிகட்டி, ஆறவிட்டு அரைக்கவும். சிறிதளவு ஃப்ரெஷ் க்ரீமை தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
கடாயில் நெய் ஊற்றி இஞ்சி - பூண்டு விழுது, வெங்காய விழுது சேர்த்து, நெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். இதில் 50 மில்லி தண்ணீர், ஃப்ரெஷ் க்ரீம், கரம் மசாலாத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். இதை பொரித்து வைத்திருக்கும் உருண்டைகள் மீது ஊற்றவும். தனியே எடுத்து வைத்த ஃப்ரெஷ் க்ரீம் கொண்டு அலங்கரிக்கவும்.

அச்சாரி தஹி பிந்தி
தேவையானவை: வெண்டைக்காய் - 200 கிராம், கடுகு, சோம்பு - தலா 5 கிராம், வெந்தயம் - 3 கிராம், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - 10 கிராம், எலுமிச்சை ஊறுகாய் - 10 கிராம், தயிர் - 100 மில்லி, எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:  வெண்டைக்காயை நீளமாக வெட்டி எண்ணெயில் வறுத்துக்கொள்ளவும். சோம்பு, கடுகு, வெந்தயம் ஆகியவற்றை தனியாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த விழுது, வெண்டைக்காய் சேர்த்துப் புரட்டி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு, எலுமிச்சை ஊறுகாய், தயிர், 50 மில்லி தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

கார்ன் - வெஜ் சாலட்
தேவையானவை:  நீளவாக்கில் நறுக்கிய பச்சை குடமிளகாய், சிவப்பு குடமிளகாய் - தலா 10 கிராம், அமெரிக்கன் கார்ன் (உதிர்த்தது) - 100 கிராம், எலுமிச்சை - ஒன்று, சாலட் ஆயில் - 20 மில்லி, நறுக்கிய தக்காளி - 20 கிராம், மிளகுத் தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

க்ரீன் பீன்ஸ் சாலட்
தேவையானவை: பச்சை பீன்ஸ் - 150 கிராம், பூண்டு - 10 கிராம், வெண்ணெய் - 20 கிராம், மிளகுத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: பீன்ஸை நறுக்கி கொதிக்கும் நீரில் போட்டு எடுத்துக்கொள்ளவும். கடாயில் வெண்ணெய் ஊற்றி, பூண்டை வதக்கி, அதை பீன்ஸோடு சேர்த்து... உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

பாஸ்தா சாலட்
தேவையானவை: வெஜ் மயோலைஸ் சாஸ் - 50 கிராம், பாஸ்தா - 100 கிராம்,  செலரி - 5 கிராம், பார்சலே - சிறிதளவு, சாலட் ஆயில் - 20 மில்லி, உப்பு - சிறிதளவு.
செய்முறை:  பாஸ்தாவை தண்ணீரில் வேகவைத்து எடுத்து, அதன் மேல் வெஜ் மயோலைஸ் சாஸ், செலரி, பார்சலே, சாலட் ஆயில், உப்பு சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

மக்ரோனி - பேபி கார்ன் சல்சா சாலட்
தேவையானவை: பேபி கார்ன் - 50 கிராம், வேகவைத்த மக்ரோனி - 100 கிராம், நறுக்கிய தக்காளி, கேரட், வெங்காயம் - தலா 25 கிராம், விதை நீக்கிய தக்காளி (அரைத்தது) - 25 கிராம், ஜலபினோ (பஜ்ஜி மிளகாய்)  - ஒன்று, மிளகுத்தூள் - 5 கிராம், எலுமிச்சை - ஒன்று, பார்சலே - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வேகவைத்த மக்ரோனியுடன் வட்டமாக நறுக்கிய பேபி கார்ன், நறுக்கிய தக்காளி, கேரட், வெங்காயம், தக்காளி சாறு, பொடியாக நறுக்கிய ஜலபினோ, எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து, 2 நிமிடம் கலக்கி, பார்சலே தூவி பரிமாறவும்.

ராட்டடூல் சாலட்
தேவையானவை: சாலட் ஆயில் - 20 மில்லி, நறுக்கிய வெங்காயம் - 20 கிராம், பெரிய கத்திரிக்காய் - 100 கிராம் (நறுக்கவும்), நறுக்கிய குடமிளகாய் - 20 கிராம், ஜகுனி ஸ்குவாஷ் - 20 கிராம், விதை நீக்கிய தக்காளி - 20 கிராம், தைம் - சிறிதளவு, பார்சலே - சிறிதளவு, பூண்டு, மிளகுத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: கடாயில் சாலட் ஆயில் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, கத்திரிக்காய், குடமிளகாய், தக்காளி, ஜகுனி ஸ்குவாஷ், தைம், பார்சலே, மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

மஷ்ரூம் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கிலோ, பட்டன் மஷ்ரூம்  - 400 கிராம், வெங்காயம் - 250 கிராம், தக்காளி - 200 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - 200 கிராம், பச்சை மிளகாய் - 25 கிராம், புதினா - 50 கிராம், மிளகாய்த்தூள் - 20 கிராம், கொத்தமல்லித் தழை - 100 கிராம், எலுமிச்சைப் பழம் - ஒன்று, பூண்டு - 100 கிராம், நெய் - 100 மில்லி, எண்ணெய் - 100 மில்லி, கிராம்பு, பட்டை - தலா 10 கிராம், ஏலக்காய் - 5 கிராம், பிரியாணி இலை - 5 கிராம், தயிர் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும். பாதியளவு பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய் ஆகியவற்றைப் பொடித்துக்கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, மீதியுள்ள பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் கிராம்பு தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். இதோடு இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து... புதினா, தயிர், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, அரிசியின் அளவில் ஒன்றரை பங்கு தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும். ஊறவைத்த அரிசியைப் போட்டு வேகவிட்டு, தண்ணீர் வற்றியதும், மஷ்ரூம் சேர்த்துக் கிளறவும். பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, தண்ணீர் தெளித்து, அதன்மீது பிரியாணி இருக்கும் பாத்திரத்தை வைத்து மூடி வைக்கவும் (அடுப்பை சிறு தீயில் வைக்கவும்). 20 நிமிடம் கழித்து இறக்கும்போது, நெய் சேர்த்துக் கிளறி, சிறிதளவு வறுத்த வெங்காயம் கொண்டு அலங்கரிக்கவும்.

ஷாஹி துக்ரா
தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 4, பால் - 100 மில்லி, சர்க்கரை - 50 கிராம், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, முந்திரி, திராட்சை - சிறிதளவு, நெய் - பொரிக்கத் தேவையான அளவு, எண்ணெய் - 10 மில்லி, கஸ்டர்டு பவுடர் - 20 கிராம்.
செய்முறை: முந்திரி, திராட்சையை எண்ணெயில் வறுக்கவும். பிரெட்டை அரை துண்டுகளாக்கி, நெய்யில் பொரிக்கவும். பாலை கொதிக்கவைத்து அதில் சர்க்கரை, குங்குமப்பூ, கஸ்டர்டு பவுடர் சேர்க்கவும். இந்தக் கலவையை பொரித்த பிரட் ஸ்லைஸ்கள் மீது ஊற்றி, முந்திரி, திராட்சையால் அலங்கரிக்கவும். இதனை அரை மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பரிமாறவும்.

பிர்னி
தேவையானவை: ரவை - 25 கிராம், பால் - 200 மில்லி, சுகர்லெஸ் கோவா - 25 கிராம், பாதாம், முந்திரி, ஆல்மண்ட் - தலா 20 கிராம், சர்க்கரை - 100 கிராம், முந்திரி, திராட்சை (வறுக்க) - சிறிதளவு, நெய் - 25 மில்லி.
செய்முறை: பாதாம் பருப்பை வேகவைத்து தோல் நீக்கவும். முந்திரி, பாதாம், ஆல்மண்ட் ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். நெய்யில் ரவையை வறுத்து, முந்திரி, திராட்சை சேர்த்து வறுக்கவும். பாலைக் கொதிக்க வைத்து... அதில் கோவா, அரைத்த முந்திரி விழுது, சர்க்கரை சேர்த்துக் கொதித்ததும், ரவை கலவையைச் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

ஸ்ரீகந்த்
தேவையானவை: கெட்டித் தயிர் - 200 மில்லி, மேங்கோ பல்ப் (மாம்பழ விழுது) - 100 மில்லி, சர்க்கரை, சாரைப்பருப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: தயிருடன் சர்க்கரை, மேங்கோ பல்ப் சேர்த்து அரைத்து, சாரைப்பருப்புச் சேர்த்து அலங்கரித்து, ஃப்ரிட்ஜில் வைத்து அரை மணி நேரம் கழித்து பரிமாறவும்.

ரோஸ் குல்கந்த்
தேவையானவை: துருவிய பூசணிக்காய் - 200 கிராம், ரவை - 50 கிராம், ரோஜா இதழ்கள் - 100 கிராம், சர்க்கரை - 150 கிராம், சுகர்லெஸ் கோவா - 50 கிராம், நெய் - 25 மில்லி, முந்திரி, திராட்சை - தேவைக்கேற்ப.
செய்முறை: கடாயில் நெய் ஊற்றி ரவை, முந்திரி, திராட்சை, சேர்த்து வறுத்துக் கொள்ளவும். மற்றொரு கடாயில் நெய் ஊற்றி, பூசணிக்காய், சர்க்கரை, கோவா, ரோஜா இதழ்கள் சேர்த்து வறுக்கவும். இத்துடன் வறுத்த ரவை கலவையை சேர்த்து மேலும் வறுத்து, பிறகு பரிமாறவும்.

Related

30 நாள் 30 வகை சமையல் 7068842058846680883

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item