தோசை வகைகள் 1 ....சமையல் குறிப்புகள்-சைவம்!
தோசை வகைகள் 1 தினமும் இட்லி , தோசை என்று போர் அடிக்கிறதா.... வீட்டில் இட்லி மாவு இருந்தால் போதும், தினமும் வகை வகையாக சத்தான ...
https://pettagum.blogspot.com/2014/09/1.html?m=0
தோசை வகைகள் 1
தினமும் இட்லி ,
தோசை என்று போர் அடிக்கிறதா....
வீட்டில் இட்லி
மாவு இருந்தால் போதும், தினமும் வகை வகையாக சத்தான தோசை மிக எளிமையான முறையில்
செய்யலாம்.
வெள்ளை சோளம்,
கேழ்வரகு, கம்பு, கோதுமை இவற்றை தலா 1
கிலோ வாங்கி, மாவு மெசினில் கொடுத்து தனித்தனியாக அரைத்து வைத்து கொள்ளவும்.
தேவைப்படும்
பொழுது இட்லி மாவில் கலக்கி சுடலாம்.
அணைத்து
மாவுகளிலும் தலா ¼ கப் எடுத்து, இட்லி மாவுடன் கலந்தால் சத்துமாவு தோசை ரெடி.
இங்கே நாம் சுவையான
தோசைகளை ,எளிமையான செய்முறையை பார்க்கலாமா......
சோள தோசை
தேவையான
பொருட்கள்
இட்லி மாவு – ½ லிட்டர்
வெள்ளை சோள மாவு –
(200 மி.லி கப்பில்) 1 ½ கப்
உப்பு
சின்ன வெங்காயம் –
10
கறிவேப்பிலை –
சிறிது
சீரகம் – ¼ டீ.ஸ்பூன்
செய்முறை
புளித்த இட்லி
மாவுடன் , சோள மாவை உப்பு சேர்த்து கரைக்கவும்.
குறிப்பு:
இரவு தோசை செய்ய
வேண்டும் என்றால், 2 மணி நேரத்திற்கு முன் கரைத்து வைத்தால் போதும்.
மாவை கரைத்த
உடனேயும் செய்யலாம், ஆனால் சிறிது ஊறவைத்து செய்தால் சுவை கூடும்.
கலக்கி வைத்த
மாவில் சின்ன வெங்காயம் ,கறிவேப்பிலை, சீரகத்தை மிக்சியில் அரைத்து சேர்க்கவும்.
பின் லேசாகவோ ,
மெத்தெனவோ தோசை சுட்டு, தக்காளி கடைசல் மற்றும் தேங்காய் சட்னியுடன் பறிமாறவும்.
விருப்பப்பட்டால்
பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து செய்யலாம்.
இதே மாவை பணியாரமாகவும் செய்யலாம்.
==================================================================================
ராகி ( கேழ்வரகு
) தோசை
தேவையான
பொருட்கள்
இட்லி மாவு – ½ லிட்டர்
ராகி மாவு – (200
மி.லி கப்பில்) 1 ½ கப்
உப்பு
செய்முறை
புளித்த இட்லி
மாவுடன் , ராகி மாவை உப்பு சேர்த்து கரைக்கவும்.
குறிப்பு:
இரவு தோசை செய்ய
வேண்டும் என்றால், 2 மணி நேரத்திற்கு முன் கரைத்து வைத்தால் போதும்.
மாவை கரைத்த
உடனேயும் செய்யலாம், ஆனால் சிறிது ஊறவைத்து செய்தால் சுவை கூடும்.
கலக்கி வைத்த
மாவில் விருப்பப்பட்டால், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, சீரகத்தை மிக்சியில்
அரைத்து சேர்க்கவும்.
பின் லேசாகவோ ,
மெத்தெனவோ தோசை சுட்டு, தக்காளி கடைசல் மற்றும் தேங்காய் சட்னியுடன் பறிமாறவும்.
விருப்பப்பட்டால்
பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து செய்யலாம்.
இதே மாவை
பணியாரமாகவும் செய்யலாம்.
===================================================================================
கோதுமை தோசை
கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து கரைத்து, தோசை சுடவும்.
லேசாகவோ ,
மெத்தெனவோ தோசை சுட்டு, தக்காளி கடைசல் மற்றும் தேங்காய் சட்னியுடன் பறிமாறவும்.
விருப்பப்பட்டால்
பொடியாக நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து
செய்யலாம்.
Post a Comment