பெற்றோரின் மெடிக்ளைம்... பிள்ளைகள் கவனத்துக்கு...! உபயோகமான தகவல்கள்!!

பெற்றோரின் மெடிக்ளைம்... பிள்ளைகள் கவனத்துக்கு... த ன் அப்பாவுக்கு சீனியர் சிட்டிசன் மெடிக்ளைம் பாலிசி எடுத்திருந்தார் கோயம்புத்தூரை...

பெற்றோரின் மெடிக்ளைம்...
பிள்ளைகள் கவனத்துக்கு...
ன் அப்பாவுக்கு சீனியர் சிட்டிசன் மெடிக்ளைம் பாலிசி எடுத்திருந்தார் கோயம்புத்தூரைச் சேர்ந்த செந்தில். மூன்று வருடங்கள் ஒழுங்காகப் பிரீமியம் கட்டிவந்தார். அப்பாவுக்குத் திடீர் என்று லேசாக நெஞ்சு வலிக்கவே, 'நம்மிடம்தான் மெடிக்ளைம் பாலிஸி இருக்கிறதே’ என்ற தைரியத்தில் மருத்துவமனையில் சேர்த்தார்.

மருத்துவமனை நிர்வாகமும் உடனடியாகப் பணம் எதுவும் கட்டச் சொல்லாமல், சில நாட்கள் சிகிச்சை அளித்தது. கடைசியில், 'பில் தொகையில் பாதிதான் இன்ஷூரன்ஸ் நிறுவனம் தரும். மீதியை நீங்கள்தான் கொடுக்க வேண்டும்’ என்று கூறி, இன்ஷூரன்ஸ் நிறுவனம் பிடித்தம் செய்து கொடுத்த வரிகளுக்கும் சேர்த்து வசூலித்துவிட்டது மருத்துவமனை நிர்வாகம்.
ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காமின் இன்ஷூரன்ஸ் ஆலோசகர் எஸ்.ஸ்ரீதரனிடம், மூத்த குடிமக்களுக்கு மெடிக்ளைம் பாலிஸி எடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பாலிஸி புதுப்பித்தலில் நிகழக்கூடிய தவறுகள் பற்றிக் கேட்டோம்.

'பல நிறுவனங்கள் மூத்த குடிமக்களுக்கு மெடிக்ளைம் பாலிசிகளை வழங்குகின்றன. இதில் சில நிறுவனங்கள், மருத்துவப் பரிசோதனை கட்டாயம் என்கின்றன. இதனால், ஏற்கனவே உள்ள நோய்களுக்கு க்ளைம் கிடைப்பதில் சிக்கல் இருக்கும். மேலும், அதிகபட்சம் சுமார் 5 லட்சம் ரூபாய் வரைதான் கவரேஜ் கிடைக்கும். பிரீமியமும் அதிகம். அதிலும் சிகிச்சைக்கு ஆன செலவில் குறிப்பிட்ட சதவிகிதத் தொகையை மட்டுமே இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அளிக்கும். மீதியை பாலிஸிதாரர்தான் கொடுக்க வேண்டும். அதாவது, ஒரு லட்சம் ரூபாய் செலவாகிறது என்றால், அதில் 50 ஆயிரம் ரூபாயை பாலிஸிதாரர் செலுத்த வேண்டியிருக்கும். இந்த சதவிகிதம் என்பது 15 முதல் 50 சதவிகிதம் வரை இருக்கும். மூத்த குடிமக்களுக்கு அதிக ரிஸ்க் என்பதால், இந்தத் தொகையைச் செலுத்தச் சொல்கிறார்கள். எனவே, மூத்த குடிமக்களுக்கான இன்ஷ§ரன்ஸ் எடுக்கும்போது, கூடுதல் கவனம் தேவை.
மூத்த குடிமக்களுக்குப் பெரும்பாலும் அவர்களின் பிள்ளைகள்தான் பாலிஸி எடுக்கிறார்கள். இவர்கள் பாலிஸியைப் புதுப்பிக்கும் தேதியை மறந்துவிடுவதும் உண்டு. எனவே பாலிஸியைப் புதுப்பிக்கும் தேதியைக் குறித்துவைத்துக் கொள்ளுங்கள்' என்றார்.
இதையே பாலிஸியா வெச்சுக்கங்க!

குரூப் பாலிசி எடுக்கலாம்
மூத்த குடிமக்களின் பிள்ளைகள் வேலைபார்க்கும் நிறுவனங்களில் குரூப் இன்ஷூரன்ஸ் இருந்தால், அதில் அவர்களின் பெயரைச் சேர்த்துக்கொள்வது நல்லது. குரூப் இன்ஷூரன்ஸில் பெரும்பாலும் காத்திருப்புக் காலம் இருக்காது. அதேபோல, ஏற்கனவே உள்ள நோய்களுக்குச் சிகிச்சை பெறுவதிலும் பெரிய சிக்கல் இருக்காது. சிகிச்சை எடுக்கும்போது குறிப்பிட்ட சதவிகிதத் தொகை செலுத்த வேண்டிய சிக்கல் இருக்காது.

Related

உபயோகமான தகவல்கள் 5654138523083335283

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item