கேன்சரை தடுக்கும் கேரட்! உணவே மருந்து!!
கேன்சரை தடுக்கும் கேரட் ஆ ரஞ்சு நிறத்தில், லேசான இனிப்புச் சுவை கலந்து இருக்கும் கேரட்டைப் பார்த்ததுமே, 'வெடுக்’ எனக் கடித்துச் ...
https://pettagum.blogspot.com/2014/03/blog-post_9570.html?m=0
கேன்சரை தடுக்கும் கேரட்
ஆரஞ்சு
நிறத்தில், லேசான இனிப்புச் சுவை கலந்து இருக்கும் கேரட்டைப் பார்த்ததுமே,
'வெடுக்’ எனக் கடித்துச் சாப்பிடத் தோன்றும். குழந்தைகளின் ஆல்டைம்
ஃபேவரைட்!
கேரட்டின் முக்கியப் பயன்கள் மற்றும் சத்துக்கள் குறித்து ஊட்டச் சத்து நிபுணர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது...
''கேரட்டில் இருக்கும் ஒரு முக்கியமான சத்து...
பீட்டாகரோட்டின். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆன்டி
ஆக்ஸிடன்ட். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேரட்டை உணவில் சேர்த்துக்
கொள்ளலாம். குறிப்பாக, உடல் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு எண்ணெயில்
பொரித்த கேரட் உணவைத் தருவது நல்ல பலனைத் தரும்.
கேரட்டில் மாவுச் சத்தும், நார்ச் சத்தும் அதிகமாகவே
உள்ளன. மேலும் இதில் இருக்கும் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று
'கரையக்கூடிய நார்ச் சத்து’. நம் உடலில் இருந்து கொலஸ்ட்ராலைக் குறைக்கும்
தன்மைகொண்டது கேரட்.
நல்ல நிறத்தில் காணப்படும் புதிதான கேரட்களை வாங்கிப்
பயன்படுத்த வேண்டும். கேரட் வெகு எளிதில் கெட்டுப் போகாது. எனவே இரண்டு,
மூன்று நாட்கள் வரைகூட ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். கேரட்டை
வேகவைத்து உண்பது ரொம்பவே பயன் தரும். கேரட்டுடன், கொஞ்சம் பால் சேர்த்து
மிக்ஸியில் அரைத்து முகத்தில் தடவுவதால் முகம் புத்துணர்ச்சியாகவும்
இளமையாகவும் இருக்கும். கேரட் சாப்பிடுவதன் மூலம் பொலிவான தோற்றத்தையும்
பெறலாம்.'' என்றார்.
உடலில் எதிர்ப்பு சக்திக்கென கலர் கலரான பல மருந்துகளை
எடுத்துக்கொள்வதைக் காட்டிலும், அவ்வப்போது கேரட்டை உணவில் சேர்த்துக்
கொண்டால் போதுமே!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
தேவையானவை: கேரட், கோதுமை பிரட், வெள்ளரிக்காய்.
செய்முறை: பிரட்டை
விரும்பிய வடிவில் வெட்டிக்கொள்ளவும். கேரட் துருவல், நறுக்கிய
வெள்ளரிக்காய் துண்டுகளை இரண்டு பிரட்களுக்கு நடுவில் வைத்துப் பரிமாறலாம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
கேரட் சூப்
தேவையானவை: கேரட், உப்பு, மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழை.
செய்முறை: கேரட்டில்
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக மசியும் அளவுக்கு வேகவைக்கவும்.
வெங்காயத்தை வதக்கி, உப்பு, வெந்த கேரட் சேர்த்து தண்ணீர்விட்டு மிக்ஸியில்
அரைக்கவும். இதில் பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை, மிளகுத்தூள் தூவி
அருந்தலாம்.
அப்படியே சாப்பிடலாமா?
கேரட்டை முடிந்தவரை பச்சையாக உண்பதைத் தவிர்ப்பது
நல்லது. ஏனெனில், கேரட் மண்ணுக்கு அடியில் வளரும் காய் என்பதால்,
உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளால் தாக்கப்படும் வாய்ப்பு
உண்டு. அப்படியே பச்சையாகச் சாப்பிட்டாலும் அதன் மேல்பரப்பை மேலாகச்
சீவிவிட்டு, ஓடும் நீரில் கழுவிச் சாப்பிடலாம்.

Post a Comment