இல்லத்தரசிகளுக்கு இனிப்பான டிப்ஸ்! வீட்டுக்குறிப்புக்கள்!!
இல்லத்தரசிகளுக்கு இனிப்பான டிப்ஸ் நான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடு...
https://pettagum.blogspot.com/2014/01/blog-post_2180.html?m=0
இல்லத்தரசிகளுக்கு இனிப்பான டிப்ஸ்
முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில்
சமையல் செய்ய ரொம்ப ஈசியா இருக்கும். நேரமும் மிச்சமாகும்.
இதைப்பார்த்த எனக்குத் தெரிஞ்சவங்க சிலர்,”வேலைக்கு போறவங்க
தான் இந்த மாதிரி செஞ்சு பாத்திருக்கேன். வீட்டுல இருக்கறவங்க
கூடவா இப்படி செய்வதுன்னு” கேப்பாங்க. வீட்டுல இருந்தாலு
நேரத்துல எல்லா வேலையும் முடிக்கணும்னு இவங்களுக்கு புரியாது.
காலை 6.30 மணிக்குள்ள டிபன், சமையல் எல்லாம் ரெடி
ஆகணும்னா கொஞ்சம் ப்ளானிங் அவசியம்ல. அவங்களை
விடுங்க.
நான் டப்பர்வேர் டப்பாக்கள் பத்தி பதிவு போட்டிருந்தேன்ல.
அதுக்கு தேவையான போட்டோக்கள் எடுக்க இணையத்துல தேடும்பொழுது
ஒரு டப்பர்வேர் கன்சல்டண்ட் டப்பர்வேருக்காகன்னே ஒரு
வலைப்பு வெச்சிருக்காருன்னு லிங்க் கொடுத்திருந்தேன்.
அவங்களுடைய சமீபத்திய பதிவு ரொம்ப பிடிச்சிருந்தது.
அவங்ககிட்ட பர்மிஷன் வாங்கி இங்க நம்ம தோழிகள்
எல்லாருக்கும் உதவும்னு பதியறேன். இனி நேரம்
நம் கையில். :))
அவங்க தன்னுடைய அந்த பதிவுக்கு வைத்திருக்கும் பெயர்
I Save Time, Eat Fresh and Feel Organized. Thanks to… டப்பர்வேர்.
இவங்க கொடுத்திருக்கும் டிப்ஸ் நான் கடைபிடிப்பதுதான்.
ஆனா எனக்குத் தெரியாததும் இங்க கத்துகிட்டேன்.
வாரத்துக்கு ஒரு தடவை காய்கறிகள் வாங்கி வந்து டப்பர்வேர் டப்பாவில்
போட்டு வெச்சிடுவாங்களாம். ஃப்ரெஷ்ஷா இருக்கும். இது என்னுடைய
அனுபவமும்.
இந்த டப்பாவுக்கு பேர் ஃப்ரிட்ஜ் ஸ்மார்ட். பேருக்கேத்த மாதிரியே
ஸ்மார்ட்தான். ஃப்ரெஷ்ஷா வெச்சிருக்கும். கேரட், பீன்ஸ்
இப்படி எல்லாத்தையும் அழகா உள்ள வெச்சிடலாம்.
தனித்தனியா வெச்சிடறதால தேடாம எடுத்து உடன் சமையலை
முடிக்கலாம். இன்னொரு ஐடியா சொல்லியிருக்காங்க பாருங்க.
தக்காளியை தோலுரிச்சு
இந்த க்ரேட்டரில் துருவினா டொமட்டோ ப்யூரி ரெடி.
கால நேரத்துல மிக்சி போட்டு சுத்தி கஷ்டப்பட்டுகிட்டு
இருக்க வேணாம் பாருங்க
சாம்பார், ரசம், காரக்குழம்பு எல்லாத்துக்கும்
உபயோகப்படுத்தலாம். டக்குன்னு சூப் கூட செய்யலாம். இதப்பாத்து
நானும் செஞ்சு வெச்சிருந்தேன். பசங்களுக்கு காலை அவசரத்துல
அசத்தலா டொமாட்டோ ஸ்பாகட்டி செஞ்சு கொடுக்க முடிஞ்சது. :))
மேலே சொல்லியிருக்கற பீலர் சூப்பர் கிச்சன் கில்லாடி.
எப்படிங்கறீங்களா? அதை வெச்சு கோஸ் நறுக்கிடலாம்.
வெங்காயத்தை வேக வெச்சு அரைச்சு டப்பாவில் போட்டு
வெச்சிட்டா, நம்ம கிட்ட டொமாட்டோ ப்யூரி இருக்கு.
வெங்காய பேஸ்ட் இருக்கு. நார்த் இண்டியன் டிஷ் டக்குன்னு
செஞ்சு அசத்தலாம்.
இப்படி தேவையானதை கட் செஞ்சு ரெடியா வெச்சுக்கிட்டா
வேலை ஈசியாகுது. இஞ்சி தட்டிப்போட்டு டீ கூட அடிக்கடி
செஞ்சுக்கலாமே.
பாகற்காய், பட்டானியை எம்புட்டு அழகா வெச்சிருக்காங்க பாருங்க.
கொத்துமல்லி, கறிவேப்பிலை, புதினா, பாலக் எல்லாம்
இந்த மாதிரி சுத்தமாக்கி எடுத்து வெச்சுகிட்டா வேலை ரொம்ப
சுளுவா முடிஞ்சிடும்.
பொதுவா ஃப்ர்டிஜ்ல எல்லாம் நீட்டா மூடி வைக்கணும். அடச்சு
வைக்க கூடாதுன்னு சொல்வாங்க.
இப்படி வைப்பதால நாம காசு போட்டு வாங்கும் சாமான்களும்
பாழாகாது. நம்ம வேலையும் சீக்கிரம் முடியும்.
இதனால அடிக்கடி மார்க்கெட்டுக்கு போகும் வேலை இல்லை.
என்ன இருக்கு. என்ன இல்லைன்னு தெரிஞ்சிக்கவும் வாய்ப்பு
இருக்கு. எத்தனை வாட்டி ஃப்ரிட்ஜில் காய்கறி கூடையில்
காய்ஞ்சு போன எலுமிச்சம்பழம், ப.மிளகாய், சுண்டிப்போன
கேரட்னு குப்பை கூடையில் போட்டிருப்போம். இனி
நாம அழகா அடுக்கி வெச்சு, ஆனந்தமா சமைக்கலாம்.
2 comments
veetu kurippukal supe!
அன்புள்ள சாரதா அவர்களுக்கு! தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்! தொடர்ந்து தங்களின் கருத்துக்களை தெரிவிக்க விழைகின்றேன்.
பெட்டகம் A.S. முஹம்மது அலி
Post a Comment