பொன் நிற மேனிக்கு ஆவாரம்பூ! அழகு குறிப்புகள்!!
''ஆ வாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ’ என தமிழில் ஒரு சொலவடை உண்டு. சாலையோரங்களில் உதிர்ந்துகிட...
https://pettagum.blogspot.com/2014/01/blog-post.html?m=0
''ஆவாரை
பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ’ என தமிழில் ஒரு சொலவடை உண்டு.
சாலையோரங்களில் உதிர்ந்துகிடக்கும் ஆவாரம்பூவில் பல மருத்துவக் குணங்கள்
நிரம்பியுள்ளன. அழகுக்காக பல கிரீம்கள் பயன்படுத்தும் தேவையினைக் குறைத்து
எளிய அழகூட்டியாக இயற்கையிலேயே அமைந்திருக்கிறது. அழகு விஷயத்தில்
ஆவாரம்பூவின் மகிமையை விளக்குகிறார் கோவை ஆர்.வி.எஸ் மருத்துவமனையின் சித்த
மருத்துவர், ஜூலியட் ரூபி.
''ஆவாரம்பூ, உடலுக்குக் குளிர்ச்சி. அந்தக் காலத்தில்
நீண்ட தூரம் பயணம் மேற்கொள்பவர்கள், உடலின் வெப்பத்தைக் குறைக்க ஆவாரம்பூ
இலைகளைத் துணியில் கட்டி, தலையில்வைத்துக்கொண்டு செல்வார்கள். இதனால் உடல்
அதன் வெப்பச் சமநிலையை இழக்காமல் சக்தியைத் தக்கவைத்துக்கொள்வதோடு,
உடலுக்குக் குளிர்ச்சியையும் தரும். சருமத்தைப் பொன் நிறமாக மாற்றக்கூடிய
ஆற்றலும்கொண்டது.
இந்த மாவை மாஸ்க் போலப் பூசி, 15 நிமிடங்கள் கழித்துக்
கழுவினால் நல்ல பொலிவையும் குறைந்த செலவில் ஃபேஷியல் செய்த பலனையும்
உடனடியாகப் பெற முடியும். மேலும், பார்லரில் செய்யப்படும் ஸ்க்ரப்பிங்,
ஷைனிங் போன்றவையும் இதிலுள்ள துகள்கள் மூலம் இயற்கையாகவே
கிடைத்துவிடுவதால், வேறு எந்த அழகு சிகிச்சையுமே முகத்துக்கும், உடலுக்கும்
தேவை இல்லை.
இனி, ஆவாரம்பூவைப் பார்த்தால் விடுவோமா?
ஆரோக்கியம் காக்கும் ஆவாரை!
பெண்களுக்கு வெள்ளைப்படுதல், உஷ்ணம் ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணி.
மல்லிகைப்பூ, ஆவாரம்பூ, சிறுகம்பிழை ஆகியவற்றைச்
சேர்த்து கஷாயமாக தயாரித்து பருகிவந்தால் சிறுநீரகக்கற்கள் கரையும். இதன்
பிசினை 10 கிராம் அளவுக்கு எடுத்து தினமும் நீரில் கலந்து பருகி வந்தால்
சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் குணமடையும்.

Post a Comment