கொள்ளு சட்னி --- சட்னிகள்,
கொள்ளு சட்னி / Horsegram dip தேவையான பொருட்கள்; கொள்ளு - 50 கிராம் பச்சை மிளகாய் - 4 - 6 வெங்காயம் -1 தக்காளி -1 பூண்டு - 5 ப...
https://pettagum.blogspot.com/2013/11/blog-post_5197.html?m=0
கொள்ளு சட்னி / Horsegram dip
கொள்ளு - 50 கிராம்
பச்சை மிளகாய் - 4 - 6
வெங்காயம் -1
தக்காளி -1
பூண்டு - 5 பல்
மல்லி,கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
புளி - சிறிது தேவைக்கு
உப்பு - தேவைக்கு
கொள்ளுபயறை மணம் வருமாறு வறுத்து இரவே ஊறவைத்து காலையில் குக்கரில் தேவைக்கு தண்ணீர் வைத்து நான்கு விசில் விட்டு வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
கொள்ளுபயறை மணம் வருமாறு வறுத்து இரவே ஊறவைத்து காலையில் குக்கரில் தேவைக்கு தண்ணீர் வைத்து நான்கு விசில் விட்டு வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி,பூண்டு நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் பூண்டு மிளகாய் போட்டு சிறிது வதக்கவும்.மிளகாய் அவரவர் தேவைக்கு கூட்டி குறைத்து கொள்ளலாம்.
அத்துடன் தக்காளியும் சேர்த்து வதக்கவும்.சிறிது புளி,வேக வைத்த கொள்ளு,கருவேப்பிலை,மல்லி இலை சேர்க்கவும்.கலந்து கொள்ளவும்.தேவைப்பட்டால் கொள்ளு வேக வைத்த தண்ணீர் அரைக்கும் பொழுது சேர்க்கவும்.
வதக்கியவற்றை மிக்ஸியில் போட்டு சிறிது தேவைக்கு உப்பும் சேர்த்து சட்னி பதத்தில் அரைத்து எடுக்கவும்.
சுவையான சத்தான கொள்ளு சட்னி ரெடி.
விரும்பினால்
தாளிப்பு கர்ண்டியில் சிறிது நல்லெண்ணெய் காயவைத்து
கடுகு,உளுத்தம்பருப்பு,மிளகாய் வற்றல்,கருவேப்பிலை தாளித்து சட்னியில்
சேர்க்கலாம்.
இதனை இட்லி,தோசையுடன் பரிமாறலாம்.
விரும்பினால் சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.கொள்ளு வேக வைத்த தண்ணீரை பயன்படுத்தி கொள்ளு ரசம் தயாரிக்கலாம்.
Post a Comment