கூந்தல் பராமரிப்பு தவிர்க்க வேண்டிய தவறுகள்! ஹெல்த் ஸ்பெஷல்,
பெண்ணுக்கே உரிய நளினத்தைத் தருவது நீண்ட கூந்தல்தான். சிலருக்கு நீளமான முடி இருந்தும் போதிய நேரமின்மை கார...
https://pettagum.blogspot.com/2013/11/blog-post_4765.html?m=0
பெண்ணுக்கே உரிய நளினத்தைத் தருவது நீண்ட கூந்தல்தான்.
சிலருக்கு நீளமான முடி இருந்தும் போதிய நேரமின்மை காரணமாக, பார்லருக்கு
சென்று வெட்டிக்கொள்கின்றனர். குதிரை வால் அளவில் முடி இருக்கும் பலரும்,
நீண்ட கூந்தலுக்கு ஆசைப்பட்டு, விளம்பரங்களில் வரும் வளர்ச்சிக்கான
ஷாம்பு, கண்டிஷனர்கள் என அனைத்தையும் பயன்படுத்துகின்றனர். முடி வளர
வேண்டும் என்ற ஆசையில் செய்யும் இந்த அழகு விஷயங்கள், முடி வளர்ச்சியை
அடியோடு நிறுத்திவிடுவதுடன், முடி உதிர்வதற்கான வாய்ப்பை
அதிகப்படுத்திவிடும்.
முடி வளராமல் போவதற்கு என்ன காரணம்?
திருச்சியைச் சேர்ந்த தோல் நோய் மருத்துவர் ராஜசேகரனிடம் கேட்டோம்.
'பொதுவாக முடியின் வாழ்க்கைச் சுழற்சியை ஆனஜென்,
கேட்டஜென், டெலோஜென் (anagen, catagen, telogen) என மூன்றாகப்
பிரிப்பார்கள். 'ஆனஜென்’ பருவத்தில் முடி தடிமனாக, ஆரோக்கியமாக இருக்கும்.
'கேட்டஜென்’ காலத்தில் முடி வலுவிழந்து, உதிரக்கூடிய நிலையில் இருக்கும்.
'டெலோஜென்’ காலத்தில், முடி உதிரும். அந்த நேரத்தில் மீண்டும் முடியின்
வேர்க்காலில் முடி முளைக்க ஆரம்பிக்கும்.
அந்தக் காலத்தில் மக்கள், தலைக்கு சீயக்காய்
பயன்படுத்தினர். அதனால் முடியும் கருகருவென நீளமாக இருந்தது. இன்று 99
சதவிகிதம் பேர், ஷாம்பு, கண்டிஷனர் பயன்படுத்துவதால்தான் முடி அதிகமாக
உதிர்கிறது.
செயற்கை ரசாயனங்களைப் பயன்படுத்தாமல், கவலைகளுக்கு இடம்
கொடுக்காமல், எப்போதும் சந்தோஷமான மனநிலையில் இருந்தாலே முடி கொட்டாமல்,
ஆரோக்கியமாக இருக்கும்.'' என்றவர், முடி உதிர்வதை விரைவுபடுத்தும் நாம்
செய்யும் தவறுகளைப் பட்டியலிட்டார்.

Post a Comment