சாம்பார் பொடி! பொடி வகைகள்!!
தேவையான பொருட்கள்: தனியா - ஒரு கப் கடலை பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு - ஒரு...
https://pettagum.blogspot.com/2013/11/blog-post_317.html?m=0
தேவையான பொருட்கள்:
- தனியா - ஒரு கப்
- கடலை பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
- துவரம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - ஒரு டீ ஸ்பூன்
- மிளகாய் வற்றல் - எட்டு
- மிளகு - ஒரு டீ ஸ்பூன்
- சீரகம் - ஒரு டீ ஸ்பூன்
- பெருங்காயம் தூள் - ஒரு டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து (தேவைப்பட்டால்)
- வெந்தயம் - ஒரு டீ ஸ்பூன்
- எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
- கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காயவைத்து பருப்பு வகைகளை முதலில் சேர்த்து சிவக்க வறுக்கவும்.
- பருப்புகள் நன்றாக வறுபட்டதும் மீதம் உள்ள பொருட்களைச் சேர்த்து வறுத்து ஆறவிடவும்.
- நன்றாக ஆறியதும் மிக்சியில் பொடி செய்து மேலும் ஒரு இரண்டு நிமிடம் வெளியில் வைத்தால் மணக்கும் சாம்பார் பொடி தயார்.
- பின்பு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் இரண்டு மாதம் வரை வாசனையுடன் இருக்கும்.
Post a Comment