சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு - டெங்கு காய்ச்சல் - சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்
சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு-22 சி க்குன்குன்யா ஒருவகை வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றவருக்க...
https://pettagum.blogspot.com/2013/11/blog-post_2450.html?m=0
சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு-22
சிக்குன்குன்யா
ஒருவகை வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து
மற்றவருக்கு, 'ஏடிஸ் ஏஜிப்டி’ (Ades aegypti) என்ற கொசுவால் பரவுகிறது.
டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுவும் இதுதான்.
அறிகுறிகள்:
மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்து காய்ச்சல்,
மூட்டுகளில் கடுமையான வலி, வீக்கம், உடல் வலி, தலைவலி, வாந்தி, உடலில்
சிவந்த தடிப்புகள் ஆகிய பிரச்னைகள் ஏற்படும். காய்ச்சல் நின்ற பிறகும், சில
வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை மூட்டுகளில் வலி, வீக்கம் இருக்கும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
30 மி.லி. நிலவேம்புக் கஷாயத்தை காலை, மாலை அருந்தலாம்.
பப்பாளி இலைச்சாறு 20 மி.லி. காலை, மாலை அருந்தலாம்.
அமுக்ரா இலைப்பொடி, கிழங்குப்பொடி இரண்டையும் அரை ஸ்பூன் எடுத்து, அவற்றில் நீர் சேர்த்துக் காய்ச்சி அருந்தலாம்.
கோரைக்கிழங்கு,
சுக்கு, சிறுவழுதலை வேர், கண்டங்கத்திரி, கண்டுபரங்கி சம அளவு எடுத்து,
இரண்டு டம்ளர் நீர் சேர்த்து, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
கால் ஸ்பூன் கிச்சிலி கிழங்குப்பொடியில் தேன் சேர்த்து அருந்தலாம்.
சிறுகுறிஞ்சான் இலைப்பொடி கால் ஸ்பூன் எடுத்து, நீரில் கலந்து உண்ணலாம்.
தூதுவளை, இம்பூறல், சங்கன்வேர், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
சிற்றாமுட்டி, சீந்தில், பற்படாகம் சம அளவு எடுத்து நீர் சேர்த்துக் காய்ச்சி அருந்தலாம்.
கால் ஸ்பூன் ஈச்சர மூலி வேர்ப்பொடியைத் தேன் கலந்து உண்ணலாம்.
ஒரு டேபிள்ஸ்பூன் குதிரைவாலி சிறுதானியத்தை அரைத்து இளநீரில் கலந்து உண்ணலாம்.
வெள்வேல் இலைப்பொடி கால் ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து உண்ணலாம்.
பொன்முசுட்டை வேர்ப்பொடி கால் ஸ்பூன் எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம்.
முருங்கை வேர், மூங்கில் வேர், அருகம்புல் வேர் சம அளவு பொடித்து அவற்றை கால் ஸ்பூன் அளவு நீரில் கலந்து உண்ணலாம்.
நொச்சி இலை அரைக் கைப்பிடி அளவு எடுத்து, அதில் இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
வேப்பம்பட்டையின் உள்பாகம் எட்டு கிராம், திப்பிலி நான்கு கிராம் எடுத்து நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
மருதம்பட்டைப்பொடி கால் ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து உண்ணலாம்.
சதாவேரிக்கிழங்குப் பொடி கால் ஸ்பூன் எடுத்து பாலில் கலந்து உண்ணலாம்.
30 மி.லி. ஆடாதொடை இலைச்சாறைத் தேன் கலந்து உண்ணலாம்.
வீக்கம் உள்ள இடங்களில், சிவப்புக்குக்கில் தைலத்தைத் தடவலாம்.
உணவு:
சேர்க்க வேண்டியவை:
காய்கறி
சூப், கோதுமைக் கஞ்சி, இளநீர், பப்பாளி, ஆரஞ்சு, அன்னாசி, வால்நட்,
பாதாம், திராட்சை, கோஸ், அதிக அளவு நீர்ச் சத்துப் பொருட்கள்.
தவிர்க்க வேண்டியவை:
எண்ணெய், மசாலா சேர்ந்த உணவுகள், காபி, தேநீர், கோலா பானங்கள், சிகரெட், மதுபானம்.
தடுப்பு முறைகள்:
கொசுவலை, கொசு விரட்டி, ஜன்னல் வலை பயன்படுத்தவும்.
தண்ணீர்த்தொட்டி, தண்ணீர் இருக்கும் பாத்திரங்கள் ஆகியவற்றை மூடிவைக்கவும்.
சிரட்டை, டயர்கள், நீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்தவும்.
பூந்தொட்டிகள் மற்றும் வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும்.
2 comments
Very Very useful matters! Thanks!
வணக்கம், தங்களது தளம் "மின்னல்வரிகள்" பாலகணேஷ் அவர்களால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான சுட்டி:
http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_5.html
Post a Comment