ஹாண்டுவா -- சமையல் குறிப்புகள்,
தேவையானவை: துவரம்பருப்பு - கால் கப், அரிசி - அரை கப், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சைப் பயறு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் - கா...
https://pettagum.blogspot.com/2013/09/blog-post_6607.html?m=0
தேவையானவை:
துவரம்பருப்பு - கால் கப், அரிசி - அரை கப், கடலைப்பருப்பு,
உளுத்தம்பருப்பு, பச்சைப் பயறு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் - கால் கப்,
சுரைக்காய் (துருவியது) முக்கால் கப், கடுகு, எள், ஓமம், பெருங்காயம் -
தாளிக்க தேவையான அளவு, சர்க்கரை - ஒன்றரை டீஸ்பூன், மிளகாய்த்தூள்,
மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது - அரை
டீஸ்பூன், சமையல் சோடா - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி,
பருப்புகள் மற்றும் பச்சைப் பயறு ஆகியவற்றை களைந்து 4 மணி நேரம் ஊற
வைத்து, நீரை வடித்து, மிக்ஸியில் அரைக்கவும். இத்துடன் தயிரை ஊற்றிக்
கலக்கவும். பிறகு துருவிய சுரைக்காய், 2 டீஸ் பூன் எண்ணெய், சமையல் சோடா,
சர்க்கரை, மிளகாய்த் தூள், மஞ்சள்தூள், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது,
உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். 3 டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, எள், ஓமம்,
பெருங்காயம் தாளித்து, இதில் பாதியை மாவில் கொட்டி, மீதியை தனியே எடுத்து
வைத்துக் கொள்ளவும். மாவு கலவையை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு நான்ஸ்டிக் ஃப்ரை பேனில் சிறிது எண்ணெய் விட்டு,
மாவு கலவையை எல்லா இடங்களிலும் நன்கு பரவும்படி செய்து, அடுப்பை மிதமான
தீயில் வைக்கவும். பிரவுன் கலராக மாறி மேலே உப்பி வரும்... அப்போது, 2
மரக்கரண்டியை பயன்படுத்தி, மெதுவாக உடையாமல் திருப்பிப் போட்டு, அடுத்த
பக்கமும் பிரவுன் ஆகி மொறுமொறு என்று வந்தவுடன், தாளித்து வைத்ததில் மீதியை
பரவலாக அதன்மேல் போட்டு துண்டுகளாக 'கட்’ செய்யவும். சட்னி அல்லது
தயிருடன் பரிமாறவும்.
Post a Comment