இஞ்சி புலாவ் --- சமையல் குறிப்புகள்,
என்னென்ன தேவை? உதிரியாக வடித்த சாதம் - 1 கப், துருவிய இஞ்சி - 1 கப், பச்சை மிளகாய் - 4, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது, கடுகு - 1 டீ...
https://pettagum.blogspot.com/2013/09/blog-post_2281.html?m=0
என்னென்ன தேவை?
உதிரியாக வடித்த சாதம் - 1 கப்,
துருவிய இஞ்சி - 1 கப்,
பச்சை மிளகாய் - 4,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
கடாயை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெயை ஊற்றிக் காய்ந்த பின் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய் போட்டுத் தாளிக்கவும். அதில் துருவிய இஞ்சியைப் போட்டு வதக்கவும். மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், தேவையான உப்பு சேர்த்துக் கிளறி அடுப்பை அணைக்கவும். அதில் உதிரியாக வடித்த சாதத்தைச் சேர்த்து நன்கு கிளறவும். எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.
Post a Comment