டிப்ஸ்.. டிப்ஸ்..வீட்டுக்குறிப்புக்கள்,
...
https://pettagum.blogspot.com/2013/07/blog-post_8572.html?m=0
========================================================
பஞ்சு போன்ற
இட்லி வேண்டுமா? கிரைண்டரில் உளுத்தம்பருப்பை அரைக்கும்போது, அது பாதி
மசிந்ததும், ஏழெட்டு ஐஸ் கியூப்களைப் போட்டு¢ அரையுங்கள். மாவும் அதிகம்
வரும். இட்லியும் மெத்தென்று மென்மையாக இருக்கும்.
=======================================================
நான்-ஸ்டிக்
கல்லில் தோசை வார்க்கும்போது எண்ணெய் சீராக பரவ ஒரு வழி.. மாவைக் கல்லில்
வட்டமாக ஊற்றி பரப்பி, ஏதேனும் ஒரு ஓரத்தில் மட்டும் எண்ணெயை விடவும்.
தோசைக் கல்லின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு லேசாகச் சரித்தால், எண்ணெய்
தோசையின் எல்லா இடங்களிலும் பரவி விடும்.
============================================================
சுண்டல்
செய்வதற்குமுன் கடலையை ஊற வைக்க மறந்து விட்டாலும் கவலை இல்லை. வெறும்
கடாயை சூடாக்கி, அதில் கடலையைப் போட்டு ஐந்தாறு நிமிடங்கள் நன்றாக
வறுங்கள். இருமடங்கு தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் சூடான கடலையைப் போட்டு
குக்கரில் வைத்தால் கடலை நன்றாக வெந்து விடும்.
============================================================
============================================================
=================================================
காபி மேக்கரில்
(அ) ஃபில்ட்டரில் சீரகத்தைப் போட்டு, வெந்நீரை விடுங்கள். சில
நிமிடங்களில் அருமையான சீரகத் தண்ணீர் ரெடி! சீரகத்தை வடிகட்ட வேண்டியதும்
இல்லை. வயிற்றுப்
================================================
ஹெல்த்தியான
சப்பாத்தி செய்ய.. கோதுமை மாவுடன், நான்கில் ஒரு பங்கு சத்து மாவு, ஒரு
டீஸ்பூன் வெந்தயப்பொடி கலந்து கொள்ளுங்கள். இதில் சிறிது வெந்தயக்கீரையை
வதக்கியும் சேர்க்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது இந்த சப்பாத்தி!
Post a Comment