கட்டா மீட்டா சப்போட்டா --- சமையல் குறிப்புகள்,
கட்டா மீட்டா சப்போட்டா தேவையானவை: செங்காய் பதத்தில் இருக்கும் சப்போட்டா துண்டுகள் - ஒரு கப், சர்க்கரை - அரை கப், புளி - பெரிய நெல்லிக...
https://pettagum.blogspot.com/2013/05/blog-post_3067.html?m=0
கட்டா மீட்டா சப்போட்டா
தேவையானவை: செங்காய் பதத்தில்
இருக்கும் சப்போட்டா துண்டுகள் - ஒரு கப், சர்க்கரை - அரை கப், புளி -
பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப),
வெந்தயம் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயம் - சிறிதளவு, எண்ணெய்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சப்போட்டாவை தோல்
சீவி, வெந்நீரில் போட்டு மூடி வைக்கவும். அரை மணி நேரம் கழித்து வெளியில்
எடுத்து, துண்டுகளாக்கி (ஒரு கப் அளவு போதும்), மிக்ஸியில் கொஞ்சம்
கரகரப்பாக அரைக்கவும். அத்துடன் மஞ்சள்தூள், உப்பு, புளிக்கரைசல்
சேர்த்து ஊற வைக்கவும். மறுநாள், கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்
அரைத்து, ஊற வைத்துள்ள சப்போட்டா விழுதை போட்டு, மிதமான தீயில் வதக்கவும்.
சுமார் 15 நிமிடங்கள் கழித்து சர்க்கரையைப் போட்டு நன்கு கரையும் வரை
கரண்டியால் அடிபிடிக்காமல் கிளறவும். புளி, சர்க்கரை கலந்து நல்ல மணம்
வரும்போது... வறுத்து பொடித்த வெந்தயம், காய்ந்த மிள காய், பெருங்காயம்
சேர்த்து இறக்கி, ஆற விட்டு, பாட்டிலில் சேமித்துக் கொள்ளவும்.
மிகவும் மணமுள்ள, சுவையான இந்த கட்டா - மீட்டா
சப்போட்டா... ரொட்டி, நான், சப்பாத்தி, பூரி, தயிர்சாதம் வெஜி டபிள்
புலாவ், தேங்காய் சாதம் போன்ற வற்றுக்கு தொட்டுக்கொள்ள வெகு ஜோராக
இருக்கும்.
Post a Comment