சிக்கன் டிக்கா---சமையல் குறிப்புகள்-அசைவம்!,
'வீர் தரா’ ஹோட்டலில் பரிமாறப்படும் சிக்கன் டிக்கா மசாலாவுக்கான ரெசிபி இதோ... தேவையான பொருட்கள்: வெட்டிய சிக்கன் துண்டுகள் - அரை ...
https://pettagum.blogspot.com/2013/04/blog-post_3546.html?m=0
'வீர் தரா’ ஹோட்டலில் பரிமாறப்படும் சிக்கன் டிக்கா மசாலாவுக்கான ரெசிபி இதோ...
தேவையான பொருட்கள்: வெட்டிய சிக்கன்
துண்டுகள் - அரை கிலோ, பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 3, வெண்ணெய் - 2
டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, மஞ்சள் - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் -
தேவையான அளவு, கொத்தமல்லித்தூள் - 1 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது 2
டீஸ்பூன், கொத்தமல்லி, புதினா - ஒரு கைப்பிடி அளவு, பட்டை, லவங்கம்,
ஏலக்காய் - தலா 2, தயிர் - அரை கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு
டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
ரெசிபியை தந்த 'வீர் தரா' மேனேஜர், கூடவே தந்த ஆரோக்கிய டிப்ஸ்...
''சிக்கனை எண்ணெய் சேர்க்காமல் வேகவைப்பதால், எந்தக்
கெடுதலும் இல்லை. காரத்துக்காக சேர்க்கப்படும் மிளகுத்தூள், உடம்பில்
கொழுப்பை கரைக்க உதவுகிறது. பசி உணர்வைத் தூண்டுகிறது. மிளகாய் காரம்
அதிகமானால், கண்களில் நீர் வருவதோடு உடம்பும் எரிய ஆரம்பித்துவிடும்.
ஆனால், மிளகு அப்படியில்லை. நாக்கிலிருந்து உணவு உள்ளே சென்றதும் கார உணவு
மறைந்துவிடும். சளிக்கு சிறந்த மருந்து. சீரகம் வயிற்று மந்தத்தை போக்கி,
சுத்தமாக்குகிறது.
பொதுவாக வெண்ணெய் கொழுப்பு நிறைந்தது என பலரும்
தவிர்ப்பார்கள். ஆனால், கால்சியம் சத்து நிறைந்தது. வெண்ணெய். மீன், இறால்
போன்ற கடல் உணவுகளுக்கு இணையான கால்சியம் கொண்டது வெண்ணெய். உணவிலுள்ள
அத்தியாவசியமான தாது உப்புக்களை உடல் கிரகித்துக் கொள்ள, இந்த வெண்ணெய்
உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் 'ஏ’, கண்கள் மற்றும் தோல்
ஆரோக்கியத்துக்கு ஏற்றது.''

Post a Comment