உருளைக்கிழங்கு பாகற்காய் பொரியல் --- சமையல் குறிப்புகள்,

பாகற்காயை கழுவி, அதனை வட்டமாக நறுக்கி, அத்துடன் உப்பு சேர்த்து 3-4 மணிநேரம் சூரியவெப்பத்தில் வைக்க வேண்டும். இதனால் பாகற்காயில் உள்ள அ...



பாகற்காயை கழுவி, அதனை வட்டமாக நறுக்கி, அத்துடன் உப்பு சேர்த்து 3-4 மணிநேரம் சூரியவெப்பத்தில் வைக்க வேண்டும். இதனால் பாகற்காயில் உள்ள அதிகப்படியான கசப்பானது குறைந்துவிடும். பின் அதனை மீண்டும் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். (நீரிழிவு நோயுள்ளவர்கள் என்றால், அதனை நறுக்கிய உடனே பயன்படுத்த வேண்டும்.) ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு, பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை நறுக்கிய தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடேற்றி, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமானதும், அதில் வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து, சிறிது நேரம் கிளற வேண்டும்.  பின்னர் நறுக்கிய வைத்துள்ள பாகற்காயை சேர்த்து, மூடி வைத்து, 2 நிமிடம் வேக வைக்க வேண்டும். அடுத்து மூடியை திறந்து, உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள், மாங்காய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளற வேண்டும். பின்பு அதனை தட்டை வைத்து மூடி, 5 நிமிடம் வேக வைத்து அடுப்பிலிருந்து இறக்கி, அதன்மேல் கொத்தமல்லியை தூவி அலங்கரித்து பரிமாற வேண்டும்.



Related

சமையல் குறிப்புகள் 6034951460168656962

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item