நலம் தரும் நாட்டு வைத்தியம்! --- பொடுகு, பேன் கிட்டே நெருங்காது
நலம் தரும் நாட்டு வைத்தியம்! எனக்குச் சொந்த ஊர் திருநெல்வேலி. சின்ன வயதிலிருந்து தினமும் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரில்தான் குளிப்பேன். ஊர...
https://pettagum.blogspot.com/2012/09/blog-post_9406.html?m=0
நலம் தரும் நாட்டு வைத்தியம்!
ஒரு நாட்டு வைத்தியரிடம் அழைத்துப் போய் என் தலையைக் காட்டினார்கள். அந்த வைத்தியர், 'சின்ன வெங்காயத்தைச் சின்னதாக அரிந்து, அதில் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவை உடைத்து ஊற்றி, அந்தக் கலவையை மிக்ஸியில் நன்றாக அடித்து ஷாம்பு மாதிரியாக்கி, தலையில தேய்த்து, அரை மணி நேரம் கழித்து, சீயக்காயைத் தலையில தேய்த்து, வெந்நீரில் முடியை அலச வேண்டும். வாரம் இரு நாட்கள் இப்படிச் செய்தால், பொடுகு, பேன் கிட்டே நெருங்காது. முடியும் நன்றாக வளரும்’ என்றார். நானும் அப்படியே செய்தேன். இப்போது, பொடுகு சுத்தமாக இல்லை. முடியும் நன்றாக வளர்ந்துவிட்டது. நாட்டு வைத்தியத்தின் நன்மையைப் புரிந்து வியந்துபோனேன் நான்!

Post a Comment