மசாலா பருப்பு - சமையல் குறிப்புகள்,
தேவையான பொருட்கள் துவரம் பருப்பு - ஒரு ஆழாக்கு (100 கிராம்) பெரிய பூண்டுப் பல் - 6 பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 1 சீரகம் - 1/2 தேக்கரண்ட...
https://pettagum.blogspot.com/2012/04/blog-post_1635.html?m=0
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - ஒரு ஆழாக்கு (100 கிராம்)
பெரிய பூண்டுப் பல் - 6
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை :
துவரம் பருப்பை குக்கரில் நன்கு வேக வைத்து பருப்பில் உள்ள தண்ணீரை வடித்து தனியாக எடுத்து வைத்துவிட்டு பருப்பு சூடாக இருக்கும்போதே மசிக்கவும். பூண்டுப்பல், வெங்காயம், தக்காளி மூன்றையும் பொடியாக தனித்தனியாக நறுக்கி வைக்கவும். இண்டாலியம் சட்டியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு லேசாக வறுத்துவிட்டு, பூண்டைப் போட்டு பொன்னிறமாக வதக்கி வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் போட்டு, எல்லாம் வதங்கியதும் மசித்து வைத்த பருப்பைப் போட்டு கொதிக்க வைக்கவும். தேவையானால் பருப்பிலிருந்து எடுத்து வைத்த தண்ணீரை கலந்து கொதிக்க வைக்கவும். தேவை இல்லையென்றால் அந்த தண்ணீரை ரசத்துக்கு உபயோகிக்கவும்.
Post a Comment