குல்கந்து ரோஸ் குக்கி!--சமையல் குறிப்புகள்
குல்கந்து ரோஸ் குக்கி! தேவையான பொருட்கள்: மைதா - 200 கிராம் ரோஜா குல்கந்து - 4 தேக்கரண்டி சீரகப் பொடி - அரை தேக்கரண்டி பால் - 50 மி.லி., எண...
https://pettagum.blogspot.com/2011/12/blog-post_6238.html?m=0
குல்கந்து ரோஸ் குக்கி!
தேவையான பொருட்கள்:
மைதா - 200 கிராம்
ரோஜா குல்கந்து - 4 தேக்கரண்டி
சீரகப் பொடி - அரை தேக்கரண்டி
பால் - 50 மி.லி.,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
மைதா, உப்பு, சீரகம், பால், ரோஜா குல்கந்து ஆகியவற்றை சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும். கடாயில், எண்ணெயை ஊற்றி, காய வைக்கவும். காய்ந்த எண்ணெயில், குக்கி அச்சை நனைத்து, திரும்பவும் எண்ணெயில் முக்கவும். வெந்தவுடன் அச்சு தனியாக வந்து விடும். குல்கந்து ரோஸ் குக்கி, எண்ணெயில் தங்கி விடும். நன்றாக வெந்தவுடன், எடுத்து விடவும். குல்கந்து ரோஸ் குக்கி ரெடி. குல்கந்து ரோஸ் குக்கியை, தேன், பனை வெல்லம் அல்லது கருப்பட்டி கொண்டும், தயார் செய்யலாம்.
Post a Comment