ஆலூ சுஜி பீட்டா --சமையல் குறிப்புகள்
அசத்துது... ஆலூ சுஜி பீட்டா ! ஆலூ சுஜி பீட்டா தே வையானவை: உருளைக்கிழங்கு, ச...
ஆலூ சுஜி பீட்டா
தேவையானவை: உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு - தலா கால் கிலோ, மைதா மாவு - 2 டீஸ்பூன், ரவை, தேங்காய் துருவல் - தலா ஒரு கப், பொடித்த வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு இரண்டையும் நன்கு வேக வைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். அதனுடன் மைதா மாவு சேர்த்து நன்கு பிசையவும். கடாயில் 2 கப் தண்ணீர் விட்டு, அரை டீஸ்பூன் நெய் சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் ரவையை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கிளறி, அடுப்பை 'சிம்’மில் வைத்து, 5 நிமிடம் மூடி வைத்து இறக்கவும். இதை, பிசைந்த கிழங்கு - மைதா கலவையுடன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். சிறிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து சிறு சிறு கிண்ணம் போல் செய்யவும்.
தேங்காய் துருவல், வெல்லம் இரண்டையும் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறி, அரை டீஸ்பூன் நெய்விட்டு சுருண்டு வரும் பதத்தில் இறக்கி, ஏலக்காய்த்தூள் தூவி கலக்கவும். ஆறிய பிறகு சிறு சிறு உருண்டையாக உருட்டி வைக்கவும். கிண்ணம் போல் செய்த மாவின் நடுவில் தேங்காய் - வெல்லம் உருண்டையை வைத்து நன்கு மூடிவிடவும். இதேபோல் ஒவ்வொரு உருண்டை யையும் தயார் செய்யவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து, உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான ஆலூ சுஜி பீட்டா ரெடி!
ஆலூ சுஜி பீட்டா: தேங்காய் துருவலுக்குப் பதிலாக, கொஞ்சம் கோவா மற்றும் முந்திரித் துண்டுகள் சேர்த்தால் 'ரிச்’சான சுவையுடன் இருக்கும்.
Post a Comment