சம்பா--சமையல் குறிப்புகள்
நீங்களும் செய்யலாம் சம்பா! தேவையானவை வாளக்கருவாடு - 100 கிராம் காய்ந்த இறால் - 50 கிராம் பெரிய வெங்காயம் - 1/4 கிலோ பூண்டு - 50 கிராம் மஞ்...
https://pettagum.blogspot.com/2011/11/blog-post_1363.html?m=0
நீங்களும் செய்யலாம் சம்பா!
தேவையானவை
வாளக்கருவாடு - 100 கிராம்
காய்ந்த இறால் - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 1/4 கிலோ
பூண்டு - 50 கிராம்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 25 கிராம்
உப்பு, எண்ணை - தேவைக்கேற்ப
செய்முறை
* கருவாடை சிறிய துண்டுகளாக்கி மிக்சியில் போட்டு ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ள வேண்டும். இறாலை தேவைப்பட்டால் முழுதாகப் போடலாம். அல்லது ஒன்றிரண்டாக பொடித்துப் பயன்படுத்தலாம்.
* முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி, எண்ணெயில் பொரித்தெடுக்க வேண்டும்.
* அடுத்து பூண்டுவை சிறுசிறு துண்டுகளாக்கி பொரித்தெடுக்க வேண்டும்.
* தொடர்ந்து வாணலியில் சிறிது எண்ணைவிட்டு கருவாடு, இறால் ஆகியவற்றை வதக்க வேண்டும். அப்படியே மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கிளறி கருவாடு வதங்கியதும் இறக்க வேண்டும்.
* பிறகு பொரித்த வெங்காயம், பூண்டு ஆகியவற்றையும் கருவாட்டுடன் சேர்த்து கிளறினால் சம்பா தயார்.
குறிப்பு
* விற்பனை செய்ய விரும்புபவர்கள், இறக்கி சிறிது நேரத்தில் பாக்கெட் செய்து கடைகளுக்கு அனுப்பிவிடலாம்.
* இதை ஒரு மாத காலத்திற்கு வீட்டில் வைத்து சாப்பிடலாம். வாளக் கருவாட்டிற்குப் பதில் வஞ்சிர மீன் சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும். வெங்காயத்தை வெட்டி காயவைத்த பிறகு தயார் செய்தால் எண்ணை அதிகமாகத் தேவைப்படாது.
Post a Comment