ஹைதராபாத் சிக்கன் 65---சமையல் குறிப்புகள்
ஹைதராபாத் சிக்கன் 65 தேவையானப் பொருட்கள்: எலும்பில்லாத கோழி இறைச்சி – அரைக் கிலோ முட்டை – 2 தயிர் – அரை கப் கற...
https://pettagum.blogspot.com/2011/10/65_16.html?m=0
தேவையானப் பொருட்கள்: - எலும்பில்லாத கோழி இறைச்சி – அரைக் கிலோ
- முட்டை – 2
- தயிர் – அரை கப்
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- பச்சை மிளகாய் – 2
- ஆரஞ்சு, சிகப்பு கேசரி கலர் – இரண்டு சிட்டிகை
- சோள மாவு – 2 தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
- இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
- சீரகத்தூள் – ஒரு தேக்கரண்டி
- மிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டி
- கரம் மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி
- உப்பு – தேவைக்கு
- எலுமிச்சை – 1
- கொத்தமல்லி – சிறிது
- எண்ணெய் – பொரிக்க
|
செய்முறை: முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டும் பிரித்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். அதில் ஆரஞ்சு கலர், இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு,
எலுமிச்சை சாறு, மிளகாய்த்தூள், உப்பு போட்டு கலக்கி, அதில் நறுக்கின சிக்கன் துண்டுகளைப் போட்டுப் பிரட்டி 1 மணி நேரம் ஊறவிடவும். |
மற்றொரு கிண்ணத்தில் தயிர், சிகப்பு கலர், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம்
மசாலா,
உப்பு சேர்த்து, நன்றாக கலந்து வைக்கவும். |
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மசாலாவில் ஊற வைத்துள்ள
சிக்கன் துண்டங்களைப் போட்டு பொரித்து எடுக்கவும். |
அதிகம் சிவக்கவிடாமல் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
அவற்றை ஒரு தட்டில் வைத்து எண்ணெய் வடியவிடவும். |
பின்னர் ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, பச்சை
மிளகாய் போட்டு வதக்கவும். |
அத்துடன் கரைத்து வைத்துள்ள தயிர் கலவையினை சேர்க்கவும். |
பின்னர் பொரித்து வைத்துள்ள சிக்கன்
துண்டங்களையும் சேர்த்து வேகவிடவும். |
மசாலா சுண்டி சிக்கன் துண்டங்கள் நன்றாக வெந்தபிறகு இறக்கி,
மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும். |
Post a Comment