காய் கொத்து இடியாப்பம்...சமையல் குறிப்பு
காய் கொத்து இடியாப்பம் தேவையான பொருள்கள் : இடியாப்பம் - 3 கப் (நூடுல்ஸ் போல லூஸானதாக) பட்டை, கிராம்பு, ஏலம் - தலா ஒன்று, காரட் - 1 கப், பீ...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_6902.html?m=0
காய் கொத்து இடியாப்பம்
தேவையான பொருள்கள் :
இடியாப்பம் - 3 கப் (நூடுல்ஸ் போல லூஸானதாக)
பட்டை, கிராம்பு, ஏலம் - தலா ஒன்று,
காரட் - 1 கப்,
பீன்ஸ் - 1 கப்,
காலி·பிளவர் - 1 கப்,
பட்டாணி - 1 கப் (சிறிதாக வெட்டி உப்பு சேர்த்து வேகவைத்தது)
கொத்துமல்லி - 3 டீஸ்பூன் (சிறிது சிறிதாக வெட்டியது),
கொங்கு மசாலா - 4 டேபிள் ஸ்பூன், (கொங்கு காளான் வறுவலில் உள்ளது போல)
தேங்காய் எண்ணெய் - 100 மில்லி.
காய் மசாலா இடியாப்பம் செய்முறை :
1. வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில், கொத்துமல்லி, வெந்த காய்கறிகள், கொங்குமசால், உப்பு அனைத்தையும் போட்டு, மிதமான தீயில் வேகவிடவும். அவ்வப்போது தண்ணீர் தெளிக்கலாம்.
2. நன்றாக வெந்ததும், இறக்கி ஆறவிடவும்.
3. மீண்டும் வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டுப் பொரிக்கவும்.
4. அதில் காய்கறி மசாலாவைப் போட்டு வதக்கி, செய்து வைத்துள்ள இடியாப்பத்தைப் போட்டுக் கிளறவும்.
5. நன்றாக மசாலா கலந்தவுடன், இறக்கிப் பா¢மாறவும்.
6. இதற்குத் தொட்டுக் கொள்ள சட்னியோ, குழம்போ தேவையில்லை.
Post a Comment