சுக்கு குழம்பு--சமையல் குறிப்பு
சுக்கு குழம்பு தே.பொருட்கள்: சுக்கு - 1 அங்குலத்துண்டு சின்ன வெங்காயம் -15 தக்காளி - 1 கறிவேப்பில்லை -சிறிது புளி - 1 எலுமிச்சை பழ அளவு தேங...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_3017.html?m=0
சுக்கு குழம்பு
தே.பொருட்கள்:
சுக்கு - 1 அங்குலத்துண்டு
சின்ன வெங்காயம் -15
தக்காளி - 1
கறிவேப்பில்லை -சிறிது
புளி - 1 எலுமிச்சை பழ அளவு
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
கலந்த மிளகாய்த்தூள் - 11/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டுபல் - 10
செய்முறை:
*வெங்காயம்+பூண்டு+ அனைத்தையும் பொடியாக கட் செய்யவும்.சுக்கை நசுக்கிக் கொள்ளவும்.
*புளியை ஒரு கோப்பையளவு கரைத்து உப்பு+தக்காளி+மிளகாய்த்தூள் கலந்து வைக்கவும்.
*ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சுக்கை வறுத்து தனியாக வைக்கவும்.
*வறுத்த சுக்கு+தேங்காய் சேர்த்து மைய அரைக்கவும்.
*பின் வடகம்+கறிவேப்பில்லை போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டு சேர்த்து வதக்கவும்.
*வதங்கிய பின் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.
*நன்கு கொதித்த பிறகு தேங்காய் விழுது சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
பி.கு:
இந்த குழம்பு மறுநாள் சாப்பிட சூப்பரா இருக்கும்.
Post a Comment