இளமை ஆரோக்கியம்! கசகசா உருண்டை
இளமை ஆரோக்கியம்! கசகசா உருண்டை தேவையானவை சுத்தம் செய்த கசகசா - ஒரு கப், நெய் - கால் கப், வெல்லம் - ஒரு கப், தண்ணீர் - சிறிதளவு, ஏலக்...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_5333.html?m=0
இளமை ஆரோக்கியம்!
கசகசா உருண்டை
தேவையானவை
சுத்தம் செய்த கசகசா - ஒரு கப்,
நெய் - கால் கப்,
வெல்லம் - ஒரு கப்,
தண்ணீர் - சிறிதளவு,
ஏலக்காய் - 3,
தூளாக்கிய முந்திரிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு, அதில் கசகசாவை போட்டு வறுக்கவும். வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றிக் கரையவிட்டு வடிகட்டவும். வடிகட்டிய வெல்லக் கரைசலை அடுப்பில் வைத்துக் காய்ச்சி, கம்பிப்பதம் வந்ததும் வறுத்த கசகசாவைப் போட்டு, ஏலக்காய்தூளையும் வறுத்த முந்திரியையும் சேர்த்து, மீதியிருக்கும் நெய்யை சிறிது சிறிதாக விட்டு, நன்றாக சுருண்டுவரும் பக்குவத்தில் இறக்கி, சூடாக இருக்கும் போதே சின்னச்சின்ன உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். பிரமாதமான சுவை கொண்ட இந்த கசகசா உருண்டையை செய்வதும் சுலபம். உடம்புக்கும் நல்லது.
கசகசா உருண்டை: தேங்காயை சிறு சிறு பல்லாக நறுக்கி, நெய்யில் வறுத்துச் சேர்த்து உருண்டை பிடித்தால் இன்னும் நன்றாக இருக்கிறது.
-------------------------------------------------------------
Post a Comment