சமையல் குறிப்புகள்! பஞ்சவர்ண மினி இட்லி
பஞ்சவர்ண மினி இட்லி தேவையான பொருட்கள் இட்லி மாவு - 1 கப் தக்காளி சட்னி - 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி சட்னி - 2 டேபிள் ஸ்பூன் வெங்காயத் துவை...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_04.html?m=0
பஞ்சவர்ண மினி இட்லி
தேவையான பொருட்கள்
இட்லி மாவு - 1 கப்
தக்காளி சட்னி - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி சட்னி - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயத் துவையல் - 2 டேபிள் ஸ்பூன்
பலப் பழ ஜாம் - 2 டேபிள் ஸ்பூன்
வெல்லத் தேங்காய்ப் பூரணம் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணை - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
* இட்லி மாவை 5 கிண்ணங்களில் ஊற்றவும்.
* ஒவ்வொரு கிண்ணத்தில் உள்ள இட்லி மாவில் ஒன்றில் தக்காளி சட்னி, இரண்டாவதில் கொத்தமல்லி சட்னி, மூன்றாவதில் வெங்காயத் துவையல், நான்காவதில் பலப் பழ ஜாம், ஐந்தாவதில் வெல்லத் தேங்காய் பூரணம் போட்டு ஒவ்வொரு கிண்ணத்தில் உள்ள இட்லி மாவைண்ம் அதில் போட்ட கலவையுடன் நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
* ஒவ்வொரு கிண்ணத்தில் உள்ள மாவுக்கலவையை எண்ணை தடவிய இட்லித் தட்டில் மினி இட்லிகளாக ஒரு மினி இட்லிக்கு 2 டேபிள்ஸ்பூன் என்ற கணக்கில் ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
* கண்ணைக் கவரும் வண்ணம் மிகுந்த சத்தான சுவையான பஞ்சவர்ண மினி இட்லி தயார்.
* பரிமாறுகையில் ஐந்து சுவைகளுடன் கூடிய மினி இட்லிகளை வரிசையாக அடுக்கி பரிமாறவும்.
உபயோகமான குறிப்பு
* காய்கறி ஊறுகாய், பூண்டுத் தொக்கு, இட்லி மிளகாய்ப்பொடி, பைன் ஆப்பிள் ஜாம் என்று அவரவர்கள் விருப்பத்திற்கேற்ப பஞ்சவர்ண மினி இட்லிகளின் சுவையை மாற்றி மாற்றிச் செய்யலாம்.
கையடக்கமான குறிப்பு
* சிறிய குழந்தைகளுக்கு இனிப்பு சுவையும், பெரியவர்களுக்கு கார சுவையும் நிறைந்த மினி இட்லிகளை அவரவர் கற்பனைக் குதிரைகளை தட்டிவிட்டு தயாரித்து அசத்தலாம்.
Post a Comment