சமையல் குறிப்புகள் ! காஷ்மீரி ஆப்பிள் சட்னி- - நூடுல்ஸ் மஷ்ரூம்-- காலிஃப்ளவர் சூப்
காஷ்மீரி ஆப்பிள் சட்னி தேவையான பொருட்கள் : காஷ்மீரி ஆப்பிள் (தோலுடன் துருவியது _ ஒன்று, சீரகத்தூள், தனியாத்தூள், பட்டைத் தூள், ஏலக்காய்த் ...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_2313.html?m=0
காஷ்மீரி ஆப்பிள் சட்னி
தேவையான பொருட்கள் :
காஷ்மீரி ஆப்பிள் (தோலுடன் துருவியது _ ஒன்று, சீரகத்தூள், தனியாத்தூள், பட்டைத் தூள், ஏலக்காய்த் தூள் _ தலா ஒரு சிட்டிகை, ஜாதிபத்ரி _ சிறிதளவு, மிளகாய்த்தூள் _ ஒரு டீஸ்பூன், ஆரஞ்சு (அல்லது) ஆப்பிள் ஜூஸ் _ ¼ கப், சர்க்கரை _ ஒரு கப், ஆலிவ் எண்ணெய் _ 2 டீஸ்பூன்.
செய்முறை :
ஆலிவ் எண்ணெயில் மசாலா சாமான்களை வதக்கி அதில் ஆப்பிள், சர்க்கரை இரண்டையும் சேர்க்கவும். சர்க்கரை நன்றாக மெல்ட் ஆகி, எண்ணெய் பிரியும் வரை வதக்கி அத்துடன் ஷ¨ஸை சேர்க்க காஷ்மீரி ஆப்பிள் சட்னி ரெடி!
நூடுல்ஸ் மஷ்ரூம்
தேவையான பொருட்கள் : கோதுமை நூடுல்ஸ் _ ½ கப், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் _ ¼ கப், பொடியாக நறுக்கிய பூண்டு _ ¼ டீஸ்பூன், மைதா _ ஒரு டீஸ்பூன், பால் _ ¾ டேபிள் ஸ்பூன், ஆலிவ் ஆயில் _ 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய சீஸ் _ ஒரு டீஸ்பூன், மஷ்ரூம் (பொடியாக நறுக்கியது) _ ஒரு கப், உப்பு, மிளகு _ தேவையான அளவு.
செய்முறை : ஆலிவ் ஆயிலில், வெங்காயம், பூண்டு, சீஸ், மஷ்ரூம் ஆகியவற்றை வதக்கிக் கொள்ளவேண்டும். நூடுல்ஸைக் கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து, நீரை சுத்தமாக வடித்துக் வைக்கவும். மைதாவை பாலில் தூவினாற் போல போட்டு கலக்கவும். அத்துடன் உப்பு, மிளகு, வதக்கிய கலவை, நூடுல்ஸ் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து முள் கரண்டியால் கலக்க சுவையான நூடுல்ஸ் மஷ்ரூம் சாப்பிடத் தயார்!
காலிஃப்ளவர் சூப்
தேவையான பொருட்கள் : ஆலிவ் எண்ணெய், பொடியாக நறுக்கிய வெங்காயம், சீரகம் _ தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி பூண்டு, மஞ்சள் தூள் _ தலா ¼ டீஸ்பூன், கொத்துமல்லி இலை (நறுக்கியது) _ 2 டீஸ்பூன், காலிஃப்ளவர் (துருவியது) _ 4 டீஸ்பூன், உருளைக்கிழங்கு அல்லது சர்க்கரைவள்ளிக் கிழங்கு வட்டமாக வெட்டியது _ 5 துண்டுகள்.
செய்முறை: ஆலிவ் எண்ணெயைச் சூடாக்கி அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்துமல்லி, காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் நன்கு சிவக்கும் வரை வதக்கவும். அதில் 2 கப் தண்ணீரையும், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மூன்றையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, இறக்கும்போது சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் குடிக்கவும்.
Post a Comment