சர்க்கரையை குணமாக்கும் நித்திய கல்யாணி! நித்தியகல்யாணி முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது.
எளிதில் நோயை குணமாக்கும் ஆற்றல் கொண்ட மூலிகைகளில் முக்கியமானது, நித்திய கல்யாணி. முக்கியமாக மனிதர்களின் இன்றைய பெரும் சவாலான ச...
https://pettagum.blogspot.com/2020/04/blog-post.html?m=0
எளிதில் நோயை குணமாக்கும் ஆற்றல் கொண்ட மூலிகைகளில் முக்கியமானது, நித்திய கல்யாணி. முக்கியமாக மனிதர்களின் இன்றைய பெரும் சவாலான சர்க்கரை நோய் அளவைக் குறைக்கும் தன்மை கொண்டது இந்த மூலிகை. புற்று நோய்க்கும் அருமருந்தாக அமைந்திருப்பதே அதன் ஆச்சர்ய குணம். மேலும், உயர் ரத்த அழுத்தங்களை குறைக்க வல்லது. புண்களை விரைந்து ஆற்றும் தன்மை கொண்டது.
நித்திய கல்யாணியின் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களை பயன்படுத்தியும். சர்க்கரை நோய்க்கான மருந்துகளை தயாரிக்கலாம்.
சர்க்கரை நோய் மருந்து: ஐந்து முதல் 10 வரை நித்திய கல்யாணி பூக்களையும், தேவைக் கேற்ப சீரகத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டையும் கலந்து, ஒரு டம்ளர் நீர் விட்டுக் கொதிக்க விட வேண்டும். இதை வடிகட்டி குடித்து வர, சர்க்கரை நோயின் அளவு குறையும்; ரத்த அழுத்தம் இருந்தாலும் சீராகும். நாள்பட்ட சீழ் வடியும் புண்கள் கூட குணமாகி விடும்.
புற்றுநோய் மருந்து: நித்திய கல்யாணி இலை, பூ ஆகியவற்றில் இருந்து, புற்றுநோய்க்கான மருந்தை தயாரித்துக் கொள்ள முடியும். குறிப்பாக, பெண்களின் மார்பகப் புற்றுநோய்க்கான நல் மருந்தாகவும் நித்திய கல்யாணி பயன்படுகிறது. நெறிக்கட்டிகளை கரைக்கும் தன்மையும் இதற்கு உண்டு.
தயாரிப்பு முறை: நித்திய கல்யாணி பூக்களை, 10 வரையில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் கால் ஸ்பூன் சீரகத்தை சேர்க்க வேண்டும். இதை, 2 டம்ளர் அளவிலான நீரில் கொதிக்க வைத்து, பின்னர் ஆறவிட்டு பயன்படுத்தலாம். சீழ்பிடித்த புண்களில் தடவலாம். புற்று நோயாளிகள் இந்த நீரைத் தொடர்ந்து குடித்துவந்தால் குணமாகும். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது கருஞ்சீரகம். அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. அதை நித்திய கல்யாணி பூக்களுடன் கலந்தால் சர்க்கரை நோய் குணமாவதோடு மட்டுமின்றி, சர்க்கரை நோயினால் ஆறாமல் நீண்ட காலம் நீடித்திருக்கும் புண்களும் குணமாகும்.
இலைகளை கொண்டு மருந்து தயாரிக்கும் முறை:
நித்திய கல்யாணி செடியிலிருந்து தேவையான அளவு இலைகளை பறித்துக்கொள்ள வேண்டும். அத்தோடு, தேவையான அளவிற்கு தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும். அதை தைலப்பதத்திற்கு வரும் வரை நன்கு காய்ச்ச வேண்டும். அதை ஆறவைத்தும் வடிகட்டியும் ஆறாத புண்கள் மேல் பூசலாம். இதைப் பூசினால், சீழ் பிடித்த, நாள்பட்ட, புரையோடிய, ரத்தம் கசியும் புண்கள் விரைவில் குணமாகும்.
எங்கு கிடைக்கும்: நித்திய கல்யாணி, பொதுவாக செழிப்பான இடங்களில் வளரும் செடியாகும். விவசாய நிலங்கள், மலைப்பாங்கான பகுதிகளில் இந்தச் செடிகள் நிரம்பக் காணப்படும்.
நமது முன்னோர், சித்தர் பரம்பரையில் வந்தவர்கள், இது போல பல்வேறு செடிகொடிகளைக் கண்டறிந்து, இயற்கையோடு இணைந்து வாழ்ந்தனர். இவற்றின் அருங்குணங்களை கண்டறிந்து பயன்பெற்றனர். நித்திய கல்யாணி செடிகளை கண்டறிய இயலாதவர்கள், சித்த மருத்துவ மற்றும் தமிழ் மருத்துவ கடைகளில் நித்திய கல்யாணிப் பொடியினை கேட்டு வாங்கலாம்.
நித்தியகல்யாணி முழுத் தாவரமும்
மருத்துவப் பயன் கொண்டது. பூ, வேர் ஆகியவை அதிகமாக மருத்துவத்தில்
பயன்படுபவை. நித்திய கல்யாணியின் இலை முதல் வேர் வரை அனைத்தும் மருத்துவ
குணம் கொண்டதாகும்.
நித்திய கல்யாணி வெள்ளை அணுக்களின் அதிகரிப்பால் ஏற்படும். இரத்தப் புற்றுநோயை எதிர்க்கும் மருத்துவப் பயன் கொண்டது.
சிறுநீர் தாரை நோய்கள் சரியாக
நித்தியகல்யாணி பூக்களை கஷாயம் தினமும் நான்கு வேளைகள் 25 மிலி அளவு
சாப்பிடவேண்டும் அல்லது வேரை காயவைத்து தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு
தேக்கரண்டி அலவு சாப்பிட்டு வெந்நீர் குடித்து வரவேண்டும்.
உடல் அசதி குணமாக 5 நித்தியகல்யாணி பூக்களை அரை லிட்டர் நீரில் இட்டு பாதியாகக் சுண்டக் காய்ச்சி குடிக்கவேண்டும்.
நீரிழிவு கட்டுபட நித்திய கல்யாணி
வேர்த்தூள் 1 சிட்டிகை அளவு சுடுநீரில் கலந்து உள்ளுக்குச்
சாப்பிடவேண்டும். ஒரு நாளைக்கு 3 முறை என ஒரு வாரம் வரை தொடர்ந்து
சாப்பிடலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகிறது,
இதன் மருத்துவ குணம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. நித்ய கல்யாணி
வேர் சூரணத்தை ஒரு தேக்கரண்டி எடுத்து வெந்நீரில் கலந்து நாளைக்கு மூன்று
முறை அருந்தி வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
நித்ய கல்யாணியில் இருந்து எடுக்கப்படும் மூலப் பொருட்கள் கொண்டு புற்று நோய்க்கு மருந்து தயாரிக்கப்படுகிறது.
4 comments
அருமையான பதிவு
Nice blog.
Download Tradeinsta Demat Account App
You’re so interesting! I don’t believe I’ve truly read something like this before. So great to find someone with genuine thoughts on this issue. Really.. many thanks for starting this up. This website is something that’s needed on the internet, someone with some originality!
CBSE Schools In Junagadh
CBSE Schools In Kheda
CBSE Schools In Kutch
CBSE Schools In Mehsana
CBSE Schools In Morbi
CBSE Schools In Narmada
CBSE Schools In Navsari
CBSE Schools In Panchmahal Godhra
CBSE Schools In Patan
CBSE Schools In Porbandar
parrots for sale uk
cockatoo for sale
african grey parrots for sale
Post a Comment