அழகு குறிப்புகள்!
தினமும் ஒரு டம்ளர் ஆரஞ்சுப் பழ ஜுஸ் சாப்பிட வேண்டும். நிறையச் சாப்பிடக்கூடாது. ஸ்வீட் தயிர் பால் முட்டை நெய் வெண்ணெய் மாமிசம் தேங...
https://pettagum.blogspot.com/2015/11/blog-post_64.html?m=0
தினமும் ஒரு டம்ளர் ஆரஞ்சுப் பழ ஜுஸ் சாப்பிட வேண்டும். நிறையச் சாப்பிடக்கூடாது. ஸ்வீட் தயிர் பால் முட்டை நெய் வெண்ணெய் மாமிசம் தேங்காய் கிழங்கு வகைகள் சாப்பிடக்கூடாது. அடிக்கடி வெயிலில் சுற்றக் கூடாது. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நாற்பது வயதாகிவிட்ட பெண்களும்கூட இளமையுடன் அழகாக இருக்கலாம்.
காலையில் எழுந்ததும் எலுமிச்சம்பழச் சாற்றைத் தண்ணீரில் கலந்து
சாப்பிடுவது நல்லது. இது இரத்தத்தில் உள்ள கழிவுப் பொருள்களை
வெளிப்படுத்துகிறது. இரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது. இரத்தம்
சுத்தமாகிவிட்டால் உடம்பு பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
பெண்கள் தொடர்ந்து வெயிலில் இருக்கக் கூடாது. கால்மணி நேரத்துக்கு ஒரு தடவை எங்கேயாவது நிழலில் கொஞ்ச நேரம் நின்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து வெயிலில் நின்றால் பெண்களின் அழகு கெட்டுப் போகும். முகம் கருங்கும். உடம்பின் பளபளப்பும் போய்விடும்.
அடிக்கடி குளிர்ந்த பானங்களைக் குடிப்பவர்களும் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறவர்களும் சாக்லேட் தின்பவர்களும் பருமனாகி விடுகிறார்கள். உடம்பு பெருக்க கூடாது என்று நினைக்கிறவர்கள் இவற்றையெல்லாம் தொடக்கூடாது.
வயதான பெண்கள் அவசியம் கண்களுக்கு மை தீட்டிக் கொள்ள வேண்டும். மை தீட்டிக் கொள்வதால் கண்களில் உள்ள வயதான தோற்றம் போகும். இளமையான தோற்றம் வரும்.
மூக்குக் கண்ணாடி அணியும் பெண்கள் கொஞ்சம் பட்டையாக தங்கள் கண் இமைகளுக்கு மை தீட்டிக் கொள்ள வேண்டும்.

2 comments
நல்ல குறிப்புகள்...
நண்பர் பரிவை சே.குமார் அவர்களின் வருகைக்கு வாழ்த்துக்கள்! நன்றி! பெட்டகம் A.S. முஹம்மது அலி
Post a Comment