30 வகை தீபாவளி பட்சணங்கள்!
30 வகை தீபாவளி பட்சணங்கள் தீ பாவளி கொண்டாட்டங்கள் களைகட்டி, கண்களையும் மனதையும் ஒருசேர உற்சாகத் துள்ளலில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் ...
https://pettagum.blogspot.com/2015/07/30_11.html?m=0
30 வகை தீபாவளி பட்சணங்கள்
தீபாவளி
கொண்டாட்டங்கள் களைகட்டி, கண்களையும் மனதையும் ஒருசேர உற்சாகத் துள்ளலில்
ஆழ்த்திக்கொண்டிருக்கும் நேரம் இது. இந்த ஆனந்த பரவசத்தை முழுமையாக்க
உங்களுக்கு உதவ ஓடோடி வருகிறார் சமையல்கலை நிபுணர் வசந்தா விஜயராகவன்.
உங்கள் வீட்டிலேயே மிகச் சுலபமாகவும், விரைவாகவும் செய்து பரிமாறி...
குடும்பம், உறவு, நட்பு என அனைத்து தரப்பினரின் 'அப்ளாஸ்’களை நீங்கள்
அள்ளிக்கொள்ள வழிசெய்யும் 30 வகை ஈஸி அண்ட் டேஸ்ட்டி தீபாவளி பட்சணங்களை,
அனுபவத்தையும், அன்பையும் அடிப்படையாக வைத்து, மிகவும் சிரத்தையுடன்
தயாரித்து வழங்கியிருக்கிறார் வசந்தா. ''கரண்டி எடுங்க... கொண்டாடுங்க!''
என்று உற்சாகப்படுத்தும் அவர், ''விஷ் யூ எ ஹேப்பி அண்ட் பிராஸ்பரஸ்
தீபாவளி!'' என மனதார வாழ்த்துகிறார்.
ஓட்ஸ் பேரீச்சை பர்ஃபி
தேவையானவை: ஓட்ஸ் ஒரு கப், காய்ந்த திராட்சை, பேரீச்சை (விதை நீக்கியது) தலா கால் கப், டார்க் சாக்லேட் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) தேவையான அளவு.
செய்முறை: பேரீச்சையை
பொடியாக நறுக்கி. அதனுடன் காய்ந்த திராட்சையை கலந்துகொள்ளவும். ஓட்ஸை,
கடாயில் லேசாக வறுத்துக் கொள்ளவும். சாக்லேட்டை அடுப்பில் வைத்து, உருக்கி,
இதனுடன் ஓட்ஸ், பேரீச்சை துண்டுகள் காய்ந்த திராட்சை கலவை ஆகியவற்றை
நன்கு கலந்து, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஃப்ரிட்ஜில் வைத்து, நன்றாக செட்
ஆனதும் துண்டுகள் போடவும்.
டேட்ஸ் வால்நட் பர்ஃபி
தேவையானவை: விதை நீக்கிய பேரீச்சை கால் கிலோ, பால் 100 மில்லி, வால்நட் (அக்ரூட்) 50 கிராம், நெய் ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை 2 டேபிள்ஸ்பூன், டெஸிகேட்டட் கோகனட் (உலந்த தேங்காய்த் துருவல் டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பாத்திரத்தில்
பாலை விட்டு, துண்டுகளாக்கிய பேரீச்சம்பழத்தைப் போட்டு ஒரு மணி நேரம்
ஊறவைக்கவும். பின்பு, அதை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.
வால்நட்டையும் கொரகொரப்பாக பொடித்துக்
கொள்ளவும். அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து, பேரீச்சை விழுது, பொடித்த வால்நட் தூள், சர்க்கரை சேர்த்து, நெய் விட்டு கெட்டியாக வரும் வரை கிளறி இறக்கவும். ஒரு தட்டில் உலர்ந்த தேங்காய்த் துருவலை பரப்பவும். பேரீச்சை கலவை ஆறியவுடன், சிறிய சிறிய உருளைகளாக செய்து, அவற்றை தட்டில் வைத்திருக்கும் தேங்காய்த் துருவலில் நன்றாக புரட்டி எடுத்து வைக்கவும்.
கோவா ஜிலேபி
தேவையானவை: சர்க்கரை இல்லாத கோவா 200 கிராம், மைதா மாவு கால் கப் (3 4 டேபிள்ஸ்பூன்), சர்க்கரை 300 கிராம், பால், மஞ்சள் ஃபுட்கலர் சிறிதளவு, ரோஸ் எசன்ஸ் (விருப்பப்பட்டால்) சில துளிகள்.
செய்முறை: மைதா
மாவை நீர் விட்டு கெட்டியாக கரைத்துக்கொள்ளவும். இதை ஒன்று முதல் இரண்டு
மணி நேரம் ஊறவைக்கவும். கோவாவை சிறிது பால் விட்டு கரண்டியால் நன்றாக
மசித்துக்கொள்ளவும். இதை குழைத்து வைத்திருக்கும் மைதா பேஸ்ட்டுடன் நன்றாக
கலந்து, மேலும் ஒரு மணி நேரம் ஊறவிடவும். வாணலியில் சர்க்கரையை சேர்த்து,
அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, பிசுக்கு பதத்தில் பாகு தயார்
செய்துகொள்ளவும். இதில் மஞ்சள் ஃபுட் கலர், ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு (அடுப்பை மிதமான தீயில் வைத்து), பால்
கவரில் ஒரு மூலையில் ஓட்டை போட்டு, மாவை கவரில் போட்டு, சூடான எண்ணெயில்
வட்டமாக பிழிந்து, இருபுறமும் திருப்பி விட்டு எடுக்கவும். இந்த ஜிலேபிகளை
சர்க்கரைப் பாகில் போட்டு சிறிது நேரம் கழித்து வெளியே எடுத்து பரிமாறவும்
(இது சட்டென்று ஊறிவிடும்).
ரிப்பன் பக்கோடா
தேவையானவை: கடலை மாவு 2 கப், அரிசி மாவு ஒரு கப், நெய் 3 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை: ஒரு
பாத்திரத்தில் எண்ணெயைத் தவிர, மற்ற பொருட்களை சேர்த்து, தண்ணீர் விட்டு
கெட்டியாக பிசைந்துகொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவை
கையில் எடுத்து உருண்டையாக்கி, ரிப்பன் அச்சில் போட்டு பிழிந்து
எடுக்கவும்.
உருளைக்கிழங்கு கார முறுக்கு
தேவையானவை: வேகவைத்து, தோல் உரித்து, மசித்த உருளைக்கிழங்கு ஒரு கப், கடலை மாவு, அரிசி மாவு தலா ஒரு கப், நெய் 3 டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை: ஒரு
பாத்திரத்தில் எண்ணெயைத் தவிர, மற்ற பொருட்களைச் சேர்த்து, நீர் விட்டு
கெட்டியாகப் பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து
எடுக்கவும்.
மில்க் கேஷ்யூ ஸ்வீட்
தேவையானவை: பால் 2 கப், சர்க்கரை ஒரு கப், ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன், பொடித்த முந்திரி 2 டீஸ்பூன், நெய் ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பாலையும்
சர்க்கரையும் சேர்த்துக் கலந்து அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில்
வைத்துக் கிளறவும், கெட்டியாக வரும்போது, ஏலக்காய்த்தூள், நெய், முந்திரி
சேர்த்து கிளறி கீழே இறக்கவும் (கடைசி வரை அடுப்பில் வைத்து கிளற
வேண்டாம்). பிறகு சிறிது நேரம் கிளறி, கையில் தொட்டால் ஒட்டாமல் இருக்கும்
பதம் வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி, சமப்படுத்தி, கொஞ்சம் ஆறியவுடன்
துண்டுகள் போடவும்.
கோதுமை மாவு பர்ஃபி
தேவையானவை: கோதுமை மாவு, சர்க்கரை தலா ஒரு கப், நெய், சர்க்கரை இல்லாத கோவா தலா அரை கப், தண்ணீர் அரை கப்.
செய்முறை: அடிகனமான
கடாயில் நெய்யை ஊற்றி, சூடானதும் கோதுமை மாவை பொன்னிறமாக
வறுத்துக்கொள்ளவும். இதனுடன் கோவாவை கலந்து வைக்கவும். வேறொரு கடாயில்
சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து 2 கம்பி பதத்தில் பாகு
தயாரிக்கவும். இப்போது, கோவா கலந்த மாவை சிறிது சிறிதாக தூவிக் கிளறவும்.
கடாயில் ஒட்டாமல், மேலே நெய் பிரிந்து வரும்போது இறக்கி, நெய் தடவிய
தட்டில் கொட்டி, கொஞ்சம் ஆறியதும் துண்டுகள் போடவும்.
வெல்ல அதிரசம்
தேவையானவை: பதப்படுத்திய பச்சரி மாவு (பச்சரிசியை தண்ணீரில் கழுவி, நிழலில் உலர்த்தி அரைத்த மாவு) ஒரு கப், வெல்லம் முக்கால் கப், ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன், எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை: கடாயில்
சிறிதளவு நீர் விட்டு, பொடித்த வெல்லத்தை சேர்த்து கொதிக்கவிட்டு,
வடிகட்டவும். இதை மீண்டும் அடுப்பிலேற்றி பாகு தயாரிக்கவும். (சிறிது பாகை
எடுத்து நீரில் போட்டு, கையில் எடுத்தால் உருட்ட வர வேண்டும். அதுதான்
பதம்). பிறகு, பாகை அடுப்பிலிருந்து இறக்கி, பச்சரிசி மாவின் மேல்
சிறிதுசிறிதாக ஊற்றிக் கலக்கவும். ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். வாழை
இலையில் சிறிது எண்ணெய் தடவி, ஒரு சிறிய உருண்டை மாவை எடுத்து வைத்து
வட்டமாக தட்டி, காயும் எண்ணெயில் போட்டு, இருபுறமும் திருப்பி போட்டு
பொரித்து எடுக்கவும் (இரண்டு கரண்டிகளுக்கு நடுவே வைத்து அழுத்தி
எடுக்கவும்).
சர்க்கரை அதிரசம்
தேவையானவை: பதப்படுத்திய பச்சரிசி மாவு (பச்சரிசியை தண்ணீரில் கழுவி, நிழலில் உலர்த்தி அரைத்த மாவு) 2 கப், சர்க்கரை ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன், எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை: கடாயில்
சர்க்கரையைப் போட்டு, அது மூழ்கும் வரை நீர் விட்டு பாகு காய்ச்சவும்.
கொதித்துக்கொண்டிருக்கும் பாகை சிறிது நீரில் விட்டு எடுத்தால் தள தள என்று
இருக்கும் பதம் வந்ததும் (தக்காளி பதம்) அடுப்பிலிருந்து இறக்கி,
பதப்படுத்திய பச்சரிசி மாவில் சிறிது சிறிதாக ஊற்றிக் கலக்கவும்.
ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், வாழை
இலையில் சிறிது எண்ணெய் தடவி, சிறிதளவு மாவை வட்டமாக தட்டி, எண்ணெயில்
போட்டு பொரித்து எடுக்கவும் (2 கரண்டிகளுக்கு நடுவில் வைத்து அழுத்தி
அதிரசத்தை எடுக்கவும்).
முந்திரி மூங்தால் ஸ்வீட்
தேவையானவை: பொட்டுக்கடலை மாவு, வறுத்து அரைத்த பயத்தம்பருப்பு மாவு தலா ஒரு கப், முந்திரி பவுடர், பால் பவுடர் தலா கால் கப், நெய் ஒரு கப்பில் இருந்து ஒன்றரை கப் வரை, சர்க்கரைத் தூள் இரண்டரை கப், ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன், வறுத்த முந்திரி திராட்சை 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: ஒரு
பாத்திரத்தில் நெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் நன்றாக கலந்துகொள்ளவும்.
பிறகு வாணலியில் நெய்யை ஊற்றி, சூடாக்கி, மாவு கலவையில் ஊற்றி நன்கு
கலக்கவும். இதை அடி ஆழமான ஒரு தட்டில் கொட்டி, கரண்டியினால் நன்றாக
அழுத்திவிடவும். ஃப்ரிட்ஜில் 2 (அ) 3 மணி நேரம் வைத்து எடுத்தால் நன்றாக
செட் ஆகி இருக்கும். பிறகு, துண்டுகள் போடவும்.
தக்காளி பர்ஃபி
தேவையானவை: தக்காளி விழுது 2 கப், மைதா பேஸ்ட் (சிறிது தண்ணீரில் குழைக்கவும்) ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை ஒன்றரை கப், நெய் ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன்.
செய்முறை: சர்க்கரை
மூழ்கும் அளவு நீர் விட்டு, ஒரு கம்பி பதத்தில் பாகு வைக்கவும். இப்போது
தக்காளி விழுது, மைதா பேஸ்ட் இரண்டையும் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில்
வைத்து, கிளறவும். கெட்டியாக வரும்போது நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்துக்
கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகள் போடவும்.
கடலைப்பருப்பு டிலைட்
தேவையானவை: கடலைப்பருப்பு 100 கிராம், பால் 3 கப், மில்க்மெய்டு, வறுத்த தேங்காய்த் துருவல் தலா அரை கப், ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன், பாதாம் முந்திரி துண்டுகள் 2 டேபிள்ஸ்பூன், நெய் அரை கப்.
செய்முறை: கடலைப்பருப்பை
2 மணி நேரம் ஊறவைக்கவும். இதனை 2 கப் பாலில் வேகவைத்து மிக்ஸியில்
கொரகொரப்பாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றி, அரைத்த
பருப்பு கலவையை சேர்த்து, பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும் அதில்
மில்க்மெய்டை ஊற்றி நன்றாக கிளறி, மீதி உள்ள பாலையும் சேர்த்து மேலும்
கிளறவும். கலவை பாத்திரத்தில் ஒட்டாது வரும்போது வறுத்த தேங்காய்த்
துருவல், பாதாம் முந்திரி துண்டுகள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக
கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.
இன்ஸ்டன்ட் பாதாம் கத்லி
தேவையானவை: பாதாம் பொடி (வெதுவெதுப்பான நீரில் பாதாமை ஊறவைத்து, மேல் தோலை நீக்கி, வெயிலில் காயவைத்து பொடி யாக்கவும்) அரை கப், முந்திரிப் பொடி அரை கப், பால் பவுடர், பொடித்த சர்க்கரை தலா கால் கப்.
செய்முறை: ஒரு
பாத்திரத்தில் தண்ணீரை விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். அந்த
பாத்திரத்தின் உள்ளே வேறு ஒரு பாத்திரத்தை வைத்து... அதில் சர்க்கரை, பால்
பவுடர் கலவையை வைத்து வறுக்கவும் (dry roast). பின்பு ஒரு பாத்திரத்தில்
பாதாம் பொடி, முந்திரிப் பொடி, டிரை ரோஸ்ட் செய்த சர்க்கரை பால் பவுடர்
கலவை எல்லாவற்றையும் சேர்த்துக் கலந்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு
சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையவும். சப்பாத்தி கல்லில் பிளாஸ்டிக்
பேப்பர் வைத்து, அதன் நடுவில் மாவு கலவையை வைத்து, வேறு ஒரு பிளாஸ்டிக்
பேப்பரால் அதை மூடி, குழவியால் (அரை இஞ்ச் கனத்துக்கு) மெல்லியதாக இட்டு,
துண்டுகள் போடவும்.
பட்டர்மில்க் பர்ஃபி
தேவையானவை: சிரோட்டி ரவை (சன்ன ரவை) ஒரு கப், முந்திரி பேஸ்ட் (முந்திரியை தண்ணீரில் ஊற வைத்தது, அரைத்தது) ஒரு கப், பால், கெட்டியான மோர் தலா ஒரு கப், சர்க்கரை மூன்றரை கப், ஜாதிக்காய்த்தூள் கால் டீஸ்பூன், நெய் 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: சிரோட்டி
ரவை, முந்திரி பேஸ்ட், பால், மோர், சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து ரவை கலவையை சேர்த்துக் கிளறிக்கொண்டே
இருக்கவும். வாணலியின் ஓரங்களில் ஒட்டாமல் வரும்போது நெய் மற்றும்
ஜாதிக்காய்த்தூள் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும். இதை நெய் தடவிய
தட்டில் கொட்டி சமப்படுத்தி, ஆறியதும் துண்டுகளாக்கவும்.
தேங்காய் கடலை மாவு பர்ஃபி
தேவையானவை: தேங்காய்த் துருவல், பால், கடலை மாவு, நெய் தலா ஒரு கப், சர்க்கரை 3 கப்.
செய்முறை: அடிகனமான
பாத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் சேர்த்து,
ஒன்றாக கலக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து, இந்தக் கலவையை சேர்த்து,
கைவிடாமல் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்கி,
நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகளாக்கவும்.
மைதா ரவை தட்டை
தேவையானவை: மைதா, ரவை, அரிசி மாவு தலா ஒரு கப், தேங்காய்த் துருவல் அரை கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை 2 டீஸ்பூன், நெய் (அ) எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன், மிளகுப்பொடி (சற்று கொரகொரப் பாக பொடிக்கவும்) 2 டீஸ்பூன், உப்பு தேவைகேற்ப, எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: பொரிப்பதற்கான
எண்ணெயைத் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, 20 நிமிடம்
ஊறவைக்கவும். பிறகு, வாணலியில் எண்ணெயைக் காயவைக்கவும். ஊற வைத்த மாவுக்
கலவையை துணியில் மெல்லிய தட்டைகளாக தட்டி, 'ஃபோர்க்’கால் (முள்கரண்டி)
குத்தி, காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
பனீர் ஜாமூன்
தேவையானவை: பனீர் 125 கிராம், மைதா 100 கிராம், பேக்கிங் பவுடர் கால் டீஸ்பூன், மில்க்மெய்டு முக்கால் கப், நெய் ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு, சர்க்கரை ஒன்றரை கப்.
செய்முறை: பாத்திரத்தில்
சர்க்கரையை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, பிசுக்கு பதத்தில் பாகு
தயாரிக்கவும். வேறொரு பாத்திரத்தில் (பொரிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெயைத்
தவிர) மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, சப்பாத்தி மாவு மாதிரி
கெட்டியாக பிசையவும். மாவை அதை நீள் உருளை வடிவில் அல்லது உருண்டைகளாக
உருட்டி வைத்துக்கொள்ளவும். உருட்டியவற்றை சூடான எண்ணெயில் போட்டு
பொரித்து, சர்க்கரைப் பாகில் சேர்க்கவும்.
க்ளேஸி அல்வா
தேவையானவை: சோள மாவு 50 கிராம், நெய் 100 கிராம், சர்க்கரை 200 கிராம், ஏலக்காய்தூள் ஒரு டீஸ்பூன், பொடித்த முந்திரி கால் கப், மஞ்சள் ஃபுட் கலர் அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
நான்ஸ்டிக் பாத்திரத்தில் சோள மாவை சேர்த்து, தண்ணீர் விட்டு தோசை மாவு
பதத்துக்கு கரைத்து அதே பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும். வாணலியை
அடுப்பில் வைத்து சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சவும். பிசுக்கு
பதம் வந்தவுடன் பாகை இறக்கிவிடவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு
சேர்க்கவும் (இது பாகு பூத்து போகமல் இருக்க உதவும்). நெய்யை உருக்கி
வைத்துக்கொள்ளவும்.
பிறகு, சோள மாவு கரைசலில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து சர்க் கரை பாகை சிறிதுசிறிதாக விட்டு கலக்கிக்கொண்டே இருக்கவும். (அடுப்பில் வைக்க வேண்டாம்). இதை கட்டி தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பின்பு அடுப்பில் வைத்து உருக்கிய நெய்யை ஊற்றியபடி கிளறிக்கொண்டே இருக்கவும். பாத்திரத்தில் ஒட்டாமல், நெய் பிரிந்து வரும் சமயத்தில்... பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூள் மஞ்சள் ஃபுட் கலர் சேர்த்து, மேலும் கிளறி இறக்கவும்.
ஃப்ரைடு ஐஸ்க்ரீம் லட்டு
தேவையானவை: வெனிலா ஐஸ்க்ரீம் தேவைக்கேற்ப, மைதா மாவு அரை கப், பொடித்த ஹனி கார்ன்ஃப்ளேக்ஸ் அல்லது பிரெட் தூள் தேவையான அளவு, எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: வெனிலா
ஐஸ்க்ரீமை ஒரு ஸ்கூப் எடுத்து, பொடித்த கார்ன் ப்ளேக்ஸ் அல்லது பிரெட்
தூளில் புரட்டி, தனியே வைக்கவும். இதேபோல் ஒவ்வொரு ஸ்கூப்பாக எடுத்து
பிரெட் தூள் அல்லது பொடித்த கார்ன் ப்ளேக்ஸில் புரட்டி ஒரு தட்டில் அடுக்கி
ஃப்ரீசரில் இரண்டு மணி நேரம் வைக்கவும். பின்பு மைதா மாவை தேவையான அளவு
தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும். ஃப்ரீசரில் வைத்து எடுத்த லட்டுகளை மைதா
மாவில் தோய்த்து எடுத்து தட்டில் அடுக்கி, மறுபடியும் செட்டாகும் வரை
ஃப்ரீசரில் வைக்கவும் (குறைந்தது ஒரு மணி நேரம்). வாணலியில் எண்ணெய் ஊற்றி
காய்ந்ததும், மைதா மாவில் தோய்த்த லட்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து
எடுக்கவும்.
மிகவும் ருசியான இந்த லட்டை பொரித்த எடுத்த உடனேயே சாப்பிட வேண்டும்.
கிருக்குப்பட்டு
தேவையானவை: மேல்மாவுக்கு: மைதா ஒரு கப், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், ரவை 3 டீஸ்பூன், உப்பு கால் டீஸ்பூன், எண்ணெய் 3 டீஸ்பூன்.
பூரணத்துக்கு: வறுத்த கடலை மாவு ஒரு கப், சர்க்கரை ஒன்றரை கப், முந்திரி பாதாம் துண்டுகள் திராட்சை (சேர்த்து) கால் கப், ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் கால் கப்.
பொரிப்பதற்கு: எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: மேல்
மாவுக்கு கொடுத்துள்ளவற்றை தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து, 20
நிமிடம் ஊறவைக்கவும். பூரணத்துக்கு கொடுத்துள்ளவற்றை ஒன்றாக கலந்து
வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவைக்கவும். மேல் மாவிலிருந்து சிறிய உருண்டை எடுத்து சொப்பு போல் செய்து, அதன் உள்ளே பூரணக் கலவையை சிறிதளவு வைத்து, நன்றாக மூடி, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).
மனோகரம்
தேவையானவை: கடலை மாவு 2 கப், அரிசி மாவு ஒரு கப், பொடித்த வெல்லம் 2 கப், ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன், எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு, உப்பு அரை டீஸ்பூன், வெண்ணெய் கால் கப்.
செய்முறை: கடலை
மாவு, அரிசி மாவு, வெண்ணெய், உப்பு ஆகியவற்றை சேர்த்து, தண்ணீர் விட்டுப்
பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பிசைந்த மாவை ஒரு கண்
துளையுள்ள அச்சில் போட்டு, எண்ணெயில் பிழிந்து எடுத்து வைக்கவும். பிறகு,
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து
கொத்திக்கவிட்டு வடிகட்ட வும். இதை மீண்டும் அடுப்பிலேற்றி பாகு காய்ச்சி
(தக்காளி பதம்), ஏலக்காய்த்தூள் சேர்த்து, பொரித்து வைத்துள்ளவற்றில்
ஊற்றிக் கலந்து வைக்கவும்.
ஸ்வீட் நட்ஸ் பீடா
தேவையானவை: அரிசி 4 டேபிள்ஸ்பூன் (ஊறவைத்து அரைக்கவும்), மைதா ஒரு கப், சமையல் சோடா ஒரு சிட்டிகை, நெய் தேவையான அளவு
பூரணத்துக்கு: துருவிய தேங்காய் ஒன்று அல்லது ஒன்றரை கப், உலர்திராட்சை 2 டேபிள்ஸ்பூன், மில்க்மெய்டு ஒரு கப், முந்திரித் துண்டுகள் 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பூரணத்துக்கு
கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்க்கவும். அரைத்த அரிசி மாவுடன்,
மைதா, சமையல் சோடா சேர்த்துக் கலந்து தேவையான தண்ணீர் விட்டு தோசை மாவு
பதத்துக்கு கலந்துகொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி மாவை மெல்லிய தோசைகளாக
வார்த்து, நெய் விட்டு, சிறிது சிவக்க சுட்டெடுக்கவும். தோசையின் ஒரு
ஓரத்தில் கொஞ்சம் பூரணத்தை வைத்து பாய் போல் சுருட்டி, சிறு சிறு
துண்டுகளாக கட் செய்து பரிமாறவும்.
தேங்காய் அப்பம்
தேவையானவை: தேங்காய்த் துருவல் அரை கப், சர்க்கரை ஒரு கப், எண்ணெய் தேவையான அளவு, ரவை அரை கப், ஏலக்காய்த்தூள் சிறிதளவு, மைதா 2 கப்.
செய்முறை: தேங்காய், சர்க்கரை, ரவை, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து
தண்ணீர் விடாமல் பிசைந்து வைக்கவும். மைதா மாவுடன் சிறிதளவு எண்ணெய்
சேர்த்து, தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்துக்கு பிசைந்து, அரை மணி நேரம்
ஊறவைக்கவும். ஊறிய மாவிலிருந்து சிறு உருண்டைகளாக எடுத்து, வாழை இலையில்
வைத்து தட்டி, அதனுள் பூரணத்தை நடுவில் வைத்து மூடி, மறுபடியும் தட்டி...
சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
பிரெட் பர்ஃபி
தேவையானவை: வெள்ளை பிரெட் தூள் 2 கப், சர்க்கரை ஒரு கப், தேங்காய்த் துருவல் ஒரு கப், பால் ஒரு கப், முந்திரித் துண்டுகள் 2 டேபிள்ஸ்பூன், ரோஸ் எசன்ஸ் (விருப்பப்பட்டால்) 2 சொட்டு, நெய் சிறிதளவு.
செய்முறை: பிரெட்
தூளை வெதுவெதுப்பான பாலில் ஊற வைக்கவும். கடாயில் தேங்காய் துருவல்,
சர்க்கரையை சேர்த்து வதக்கவும். சிறிது கெட்டியானவுடன் பாலில் ஊற வைத்த
பிரெட் தூளை சேர்த்துக் கிளறி, முந்திரித் துண்டுகள், எசன்ஸ் சேர்த்து...
நெய் தடவிய தட்டில் கொட்டி ஃப்ரிட் ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்து,
துண்டுகள் போடவும் (ஃப்ரீசரில் வைக்க வேண்டாம்).
அரிசிப்பொரி பாதாம் பருப்பு ஸ்வீட்
தேவையானவை: அரிசிப்பொரி அரை கப், வறுத்த வேர்க்கடலை முக்கால் கப், பொட்டுக்கடலை முக்கால் கப், பொடித்த வெல்லம் ஒரு கப், பாதாம் பருப்பு கால் கப், ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன், நெய் 2 டீஸ்பூன்.
செய்முறை:
அரிசிப்பொரி, பாதாம் பருப்பு, வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை
ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் பவுடராக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து, வெல்லத்தை போட்டு தண்ணீர் சேர்த்து
கொதிக்கவிட்டு, வடிகட்டவும். இதை மீண்டும் அடுப்பிலேற்றி ஏலக்காய்த்தூள்
சேர்க்கவும். கொதிக்கும் வெல்லக் கரைசலில், அரைத்து வைத்த பவுடரை
சேர்த்துக் கிளறி, இறக்குவதற்கு முன் நெய் சேர்த்து, தட்டில் கொட்டி,
ஆறியவுடன் துண்டுகள் போடவும்.
தீபாவளி லேகியம்
தேவையானவை: சுக்கு 50 கிராம், சித்தரத்தை 25 கிராம், ஓமம் 10 கிராம், சீரகம் 25 கிராம், கண்டதிப்பிலி 25 கிராம், அரிசி திப்பிலி 25 கிராம் (இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்), வெல்லம் கால் கிலோ, இஞ்சி ஒரு பெரிய துண்டு, நல்லெண்ணெய் 50 மில்லி, நெய் 50 கிராம்.
செய்முறை: சுக்கு,
சித்தரத்தை, ஓமம், சீரகம், கண்டதிப்பிலி, அரிசி திப்பிலி ஆகியவற்றை
வெயிலில் உலர்த்தி மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக்கொள்ளவும். இஞ்சியை
தோல் சீவி மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, சாறு எடுக்கவும். இதனுடன் பொடித்த
வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்து கரையவிட்டு, அரைத்து வைத்திருக்கும்
பொடியை தூவிக் கிளறி, இறுகியதும் அடுப்பை நிறுத்திவிடவும். கொஞ்சம்
ஆறியதும் நெய்யும், நல்லெண்ணெயும் சேர்த்துக் கிளறி எடுத்து வைக்கவும்.
தேவைப்படும்போது, இதிலிருந்து நெல்லிக்காய் அளவு எடுத்து சாப்பிடவும்.
சக்கர் பாரா
தேவையானவை: மைதா மாவு 2 கப், நெய் கால் கப், சர்க்கரை 2 கப், எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: நெய்யுடன்
மைதா மாவை சேர்த்து, தேவையான நீர் விட்டு, சப்பாத்தி மாவு பதத்தில்
பிசைந்து, 20 நிமிடம் ஊறவைக்கவும். மாவை மெல்லிய சப்பாத்தியாக இட்டு,
டைமண்ட் ஷேப்பில் கட் செய்து சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து
எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து, அது மூழ்கும் அளவு
தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும்.
பொரித்த துண்டுகளை பாகில் அமிழ்த்தி நன்றாக கலந்து தட்டில் பரப்பி
வைக்கவும்.
கோதுமை மாவு மினி தட்டை
தேவையானவை: கோதுமை மாவு ஒரு கப், பாசிப்பருப்பு ஒரு கைப்பிடி அளவு, மிளகுப்பொடி 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, நெய் 2 டீஸ்பூன், எண்ணெய் பொரிப்பதற்குத் தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை
மலர வேகவைக்கவும் (குழையக் கூடாது). கோதுமை மாவை லேசாக வறுத்துக்கொண்டு,
அதனுடன் வேகவைத்த பாசிப்பருப்பு, மிளகுப்பொடி, உப்பு, பெருங்காயத்தூள்,
நெய் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். இந்த மாவை சீடை போல் சிறிதாக உருட்டி,
கட்டை விரலால் அழுத்தி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
பட்டர் பர்ஃபி
தேவையானவை: வெண்ணெய், சர்க்கரை, பால் பவுடர் தலா ஒரு கப், நெய் சிறிதளவு.
செய்முறை: அடிகனமான
வாணலியில் சர்க்கரையைச் சேர்த்து, அரை கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
சர்க்கரை கரைந்ததும் வெண்ணையை சேர்க்கவும். வெண்ணெய் உருகிய தும் பால்
பவுடர் சேர்த்துக் கிளறி, பார்த்திரத்தின் ஓரத்தில் ஒட்டாமல் வரும்போது,
நெய் தடவிய தட்டில் கொட்டி. சமப்படுத்தி, துண்டுகள் போடவும்.
பனீர் பர்ஃபி
தேவையானவை: மில்க்மெய்ட் அரை டின், துருவிய பனீர் 200 கிராம், பால் பவுடர் ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை ஒரு டேபிள்ஸ்பூன், மைதா அரை டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள
பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்து,
நெய் தடவிய தட்டில் கொட்டி, சமப்படுத்தி, வில்லைகளாக்கவும்.
ஓட்ஸ் பேரீச்சை பர்ஃபி
தேவையானவை: ஓட்ஸ் ஒரு கப், காய்ந்த திராட்சை, பேரீச்சை (விதை நீக்கியது) தலா கால் கப், டார்க் சாக்லேட் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) தேவையான அளவு.
டேட்ஸ் வால்நட் பர்ஃபி
தேவையானவை: விதை நீக்கிய பேரீச்சை கால் கிலோ, பால் 100 மில்லி, வால்நட் (அக்ரூட்) 50 கிராம், நெய் ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை 2 டேபிள்ஸ்பூன், டெஸிகேட்டட் கோகனட் (உலந்த தேங்காய்த் துருவல் டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) 3 டேபிள்ஸ்பூன்.
கொள்ளவும். அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து, பேரீச்சை விழுது, பொடித்த வால்நட் தூள், சர்க்கரை சேர்த்து, நெய் விட்டு கெட்டியாக வரும் வரை கிளறி இறக்கவும். ஒரு தட்டில் உலர்ந்த தேங்காய்த் துருவலை பரப்பவும். பேரீச்சை கலவை ஆறியவுடன், சிறிய சிறிய உருளைகளாக செய்து, அவற்றை தட்டில் வைத்திருக்கும் தேங்காய்த் துருவலில் நன்றாக புரட்டி எடுத்து வைக்கவும்.
கோவா ஜிலேபி
தேவையானவை: சர்க்கரை இல்லாத கோவா 200 கிராம், மைதா மாவு கால் கப் (3 4 டேபிள்ஸ்பூன்), சர்க்கரை 300 கிராம், பால், மஞ்சள் ஃபுட்கலர் சிறிதளவு, ரோஸ் எசன்ஸ் (விருப்பப்பட்டால்) சில துளிகள்.
ரிப்பன் பக்கோடா
தேவையானவை: கடலை மாவு 2 கப், அரிசி மாவு ஒரு கப், நெய் 3 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு.
உருளைக்கிழங்கு கார முறுக்கு
தேவையானவை: வேகவைத்து, தோல் உரித்து, மசித்த உருளைக்கிழங்கு ஒரு கப், கடலை மாவு, அரிசி மாவு தலா ஒரு கப், நெய் 3 டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு.
மில்க் கேஷ்யூ ஸ்வீட்
தேவையானவை: பால் 2 கப், சர்க்கரை ஒரு கப், ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன், பொடித்த முந்திரி 2 டீஸ்பூன், நெய் ஒரு டீஸ்பூன்.
கோதுமை மாவு பர்ஃபி
தேவையானவை: கோதுமை மாவு, சர்க்கரை தலா ஒரு கப், நெய், சர்க்கரை இல்லாத கோவா தலா அரை கப், தண்ணீர் அரை கப்.
வெல்ல அதிரசம்
தேவையானவை: பதப்படுத்திய பச்சரி மாவு (பச்சரிசியை தண்ணீரில் கழுவி, நிழலில் உலர்த்தி அரைத்த மாவு) ஒரு கப், வெல்லம் முக்கால் கப், ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன், எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு.
சர்க்கரை அதிரசம்
தேவையானவை: பதப்படுத்திய பச்சரிசி மாவு (பச்சரிசியை தண்ணீரில் கழுவி, நிழலில் உலர்த்தி அரைத்த மாவு) 2 கப், சர்க்கரை ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன், எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு.
முந்திரி மூங்தால் ஸ்வீட்
தேவையானவை: பொட்டுக்கடலை மாவு, வறுத்து அரைத்த பயத்தம்பருப்பு மாவு தலா ஒரு கப், முந்திரி பவுடர், பால் பவுடர் தலா கால் கப், நெய் ஒரு கப்பில் இருந்து ஒன்றரை கப் வரை, சர்க்கரைத் தூள் இரண்டரை கப், ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன், வறுத்த முந்திரி திராட்சை 2 டேபிள்ஸ்பூன்.
தக்காளி பர்ஃபி
தேவையானவை: தக்காளி விழுது 2 கப், மைதா பேஸ்ட் (சிறிது தண்ணீரில் குழைக்கவும்) ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை ஒன்றரை கப், நெய் ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன்.
கடலைப்பருப்பு டிலைட்
தேவையானவை: கடலைப்பருப்பு 100 கிராம், பால் 3 கப், மில்க்மெய்டு, வறுத்த தேங்காய்த் துருவல் தலா அரை கப், ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன், பாதாம் முந்திரி துண்டுகள் 2 டேபிள்ஸ்பூன், நெய் அரை கப்.
இன்ஸ்டன்ட் பாதாம் கத்லி
தேவையானவை: பாதாம் பொடி (வெதுவெதுப்பான நீரில் பாதாமை ஊறவைத்து, மேல் தோலை நீக்கி, வெயிலில் காயவைத்து பொடி யாக்கவும்) அரை கப், முந்திரிப் பொடி அரை கப், பால் பவுடர், பொடித்த சர்க்கரை தலா கால் கப்.
பட்டர்மில்க் பர்ஃபி
தேவையானவை: சிரோட்டி ரவை (சன்ன ரவை) ஒரு கப், முந்திரி பேஸ்ட் (முந்திரியை தண்ணீரில் ஊற வைத்தது, அரைத்தது) ஒரு கப், பால், கெட்டியான மோர் தலா ஒரு கப், சர்க்கரை மூன்றரை கப், ஜாதிக்காய்த்தூள் கால் டீஸ்பூன், நெய் 3 டேபிள்ஸ்பூன்.
தேங்காய் கடலை மாவு பர்ஃபி
தேவையானவை: தேங்காய்த் துருவல், பால், கடலை மாவு, நெய் தலா ஒரு கப், சர்க்கரை 3 கப்.
மைதா ரவை தட்டை
தேவையானவை: மைதா, ரவை, அரிசி மாவு தலா ஒரு கப், தேங்காய்த் துருவல் அரை கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை 2 டீஸ்பூன், நெய் (அ) எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன், மிளகுப்பொடி (சற்று கொரகொரப் பாக பொடிக்கவும்) 2 டீஸ்பூன், உப்பு தேவைகேற்ப, எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.
பனீர் ஜாமூன்
தேவையானவை: பனீர் 125 கிராம், மைதா 100 கிராம், பேக்கிங் பவுடர் கால் டீஸ்பூன், மில்க்மெய்டு முக்கால் கப், நெய் ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு, சர்க்கரை ஒன்றரை கப்.
க்ளேஸி அல்வா
தேவையானவை: சோள மாவு 50 கிராம், நெய் 100 கிராம், சர்க்கரை 200 கிராம், ஏலக்காய்தூள் ஒரு டீஸ்பூன், பொடித்த முந்திரி கால் கப், மஞ்சள் ஃபுட் கலர் அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு ஒரு டீஸ்பூன்.
பிறகு, சோள மாவு கரைசலில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து சர்க் கரை பாகை சிறிதுசிறிதாக விட்டு கலக்கிக்கொண்டே இருக்கவும். (அடுப்பில் வைக்க வேண்டாம்). இதை கட்டி தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பின்பு அடுப்பில் வைத்து உருக்கிய நெய்யை ஊற்றியபடி கிளறிக்கொண்டே இருக்கவும். பாத்திரத்தில் ஒட்டாமல், நெய் பிரிந்து வரும் சமயத்தில்... பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூள் மஞ்சள் ஃபுட் கலர் சேர்த்து, மேலும் கிளறி இறக்கவும்.
ஃப்ரைடு ஐஸ்க்ரீம் லட்டு
தேவையானவை: வெனிலா ஐஸ்க்ரீம் தேவைக்கேற்ப, மைதா மாவு அரை கப், பொடித்த ஹனி கார்ன்ஃப்ளேக்ஸ் அல்லது பிரெட் தூள் தேவையான அளவு, எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.
மிகவும் ருசியான இந்த லட்டை பொரித்த எடுத்த உடனேயே சாப்பிட வேண்டும்.
கிருக்குப்பட்டு
தேவையானவை: மேல்மாவுக்கு: மைதா ஒரு கப், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், ரவை 3 டீஸ்பூன், உப்பு கால் டீஸ்பூன், எண்ணெய் 3 டீஸ்பூன்.
பூரணத்துக்கு: வறுத்த கடலை மாவு ஒரு கப், சர்க்கரை ஒன்றரை கப், முந்திரி பாதாம் துண்டுகள் திராட்சை (சேர்த்து) கால் கப், ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் கால் கப்.
பொரிப்பதற்கு: எண்ணெய் தேவையான அளவு.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவைக்கவும். மேல் மாவிலிருந்து சிறிய உருண்டை எடுத்து சொப்பு போல் செய்து, அதன் உள்ளே பூரணக் கலவையை சிறிதளவு வைத்து, நன்றாக மூடி, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).
மனோகரம்
தேவையானவை: கடலை மாவு 2 கப், அரிசி மாவு ஒரு கப், பொடித்த வெல்லம் 2 கப், ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன், எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு, உப்பு அரை டீஸ்பூன், வெண்ணெய் கால் கப்.
ஸ்வீட் நட்ஸ் பீடா
தேவையானவை: அரிசி 4 டேபிள்ஸ்பூன் (ஊறவைத்து அரைக்கவும்), மைதா ஒரு கப், சமையல் சோடா ஒரு சிட்டிகை, நெய் தேவையான அளவு
பூரணத்துக்கு: துருவிய தேங்காய் ஒன்று அல்லது ஒன்றரை கப், உலர்திராட்சை 2 டேபிள்ஸ்பூன், மில்க்மெய்டு ஒரு கப், முந்திரித் துண்டுகள் 2 டேபிள்ஸ்பூன்.
தேங்காய் அப்பம்
தேவையானவை: தேங்காய்த் துருவல் அரை கப், சர்க்கரை ஒரு கப், எண்ணெய் தேவையான அளவு, ரவை அரை கப், ஏலக்காய்த்தூள் சிறிதளவு, மைதா 2 கப்.
பிரெட் பர்ஃபி
தேவையானவை: வெள்ளை பிரெட் தூள் 2 கப், சர்க்கரை ஒரு கப், தேங்காய்த் துருவல் ஒரு கப், பால் ஒரு கப், முந்திரித் துண்டுகள் 2 டேபிள்ஸ்பூன், ரோஸ் எசன்ஸ் (விருப்பப்பட்டால்) 2 சொட்டு, நெய் சிறிதளவு.
அரிசிப்பொரி பாதாம் பருப்பு ஸ்வீட்
தேவையானவை: அரிசிப்பொரி அரை கப், வறுத்த வேர்க்கடலை முக்கால் கப், பொட்டுக்கடலை முக்கால் கப், பொடித்த வெல்லம் ஒரு கப், பாதாம் பருப்பு கால் கப், ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன், நெய் 2 டீஸ்பூன்.
தீபாவளி லேகியம்
தேவையானவை: சுக்கு 50 கிராம், சித்தரத்தை 25 கிராம், ஓமம் 10 கிராம், சீரகம் 25 கிராம், கண்டதிப்பிலி 25 கிராம், அரிசி திப்பிலி 25 கிராம் (இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்), வெல்லம் கால் கிலோ, இஞ்சி ஒரு பெரிய துண்டு, நல்லெண்ணெய் 50 மில்லி, நெய் 50 கிராம்.
சக்கர் பாரா
தேவையானவை: மைதா மாவு 2 கப், நெய் கால் கப், சர்க்கரை 2 கப், எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.
கோதுமை மாவு மினி தட்டை
தேவையானவை: கோதுமை மாவு ஒரு கப், பாசிப்பருப்பு ஒரு கைப்பிடி அளவு, மிளகுப்பொடி 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, நெய் 2 டீஸ்பூன், எண்ணெய் பொரிப்பதற்குத் தேவையான அளவு.
பட்டர் பர்ஃபி
தேவையானவை: வெண்ணெய், சர்க்கரை, பால் பவுடர் தலா ஒரு கப், நெய் சிறிதளவு.
பனீர் பர்ஃபி
தேவையானவை: மில்க்மெய்ட் அரை டின், துருவிய பனீர் 200 கிராம், பால் பவுடர் ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை ஒரு டேபிள்ஸ்பூன், மைதா அரை டேபிள்ஸ்பூன்.
3 comments
Thank you sir....
Can you please post 30 வகை பிரெட் சமையல் Jun 07 2011
Today posted by pettagum A.S.Mohamed Ali
Post a Comment