ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 18 மாதவிடாய் பிரச்னைக்கு...தீர்வாகும் துவர்ப்பு சுவை!
ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 18 மாதவிடாய் பிரச்னைக்கு...தீர்வாகும் துவர்ப்பு சுவை! 'காலேஜ் கட் அடிச்சிட்டியா ஷாலு, இத்தனை ...
https://pettagum.blogspot.com/2014/11/18.html?m=0
ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 18
மாதவிடாய் பிரச்னைக்கு...தீர்வாகும் துவர்ப்பு சுவை!
'காலேஜ் கட் அடிச்சிட்டியா ஷாலு, இத்தனை சீக்கிரம் வந்திட்ட?''
''எரிச்சலைக் கிளப்பாத பாட்டி, பீரியட்ஸ்னால எனக்கு
வயிறு வலிக்குது. ப்ளீடிங்கும் அதிகமா இருக்கு. எதாவது வைத்தியம் இருந்தா,
உடனே சொல்லு பாட்டி.'
'அந்தக் காலத்துல மாதவிடாயின் போது வர்ற வலியை சூதக
வலி, சூதக வாய்வுன்னு சொல்லுவாங்க. வலியைக் குறைக்கணும்னா, முதலில் உணவுல
கவனமா இருக்கணும். பொதுவா பித்த உடம்பு, மெலிஞ்ச தேகம் உள்ளவங்க, உடல் சூடு
உள்ளவங்களுக்கு இந்த வலி அதிகமாவே இருக்கும். இவங்க துவர்ப்பு சுவையுள்ள
உணவுகளை அதிகமா எடுத்துக்கணும். கோழிக்கறி, கொள்ளுப்பயறு மாதிரி உணவுகள்
சூடுங்கிறதால தவிர்த்திடணும்.'
'துவர்ப்புச் சுவைக்கு அப்படி என்ன மகிமை பாட்டி?'
'ஆறு சுவையில் துவர்ப்புச் சுவைக்கு மருத்துவக் குணம்
அதிகம். பொதுவா, துவர்ப்புச் சுவையுள்ள உணவுகள், மூலிகைகள் எல்லாமே
ரத்தப்போக்கைக் குறைக்கும். துவர்ப்புன்னா, வாழைப்
பூவுக்குதான் முதல் இடம். அப்புறம், வாழைத்தண்டு, பெரிய நெல்லிக்காய், நாவல் பழம், அத்திப்பழம், இலந்தப்
பழம், மங்குஸ்தான் பழம் இதெல்லாமே துவர்ப்புச் சுவை மிகுந்த உணவுகள்தான். அதிகமான உதிரப் போக்கை நிறுத்திடும்.'
'இதை எப்படிப் பயன்படுத்தணும்.?'
'பெரிய நெல்லிக்காயை சாறா செஞ்சு குடிக்கலாம். மாங்காய் சாதம் போல, நெல்லிக்காய் சாதம் செய்து
சாப்பிடலாம். நாவல், இலந்தையை அப்படியே சாப்பிடலாம்.
மங்குஸ்தான் பழத்தின் உலர்ந்த பொடியோட வேலம்பட்டை, வால்மிளகு சமபங்கு
சேர்த்துப் பொடிச்சு, அதில் கால் ஸ்பூன் அளவுக்கு எடுத்து, தேன் கலந்து
சாப்பிடலாம்.'
'வாழைப்பூல என்னவெல்லாம் செய்யலாம்?'
'பொரியல் செய்யலாம். ஆவியில் வேகவெச்சு பனங்கற்கண்டு
சேர்த்து புட்டு, பருப்பு சேர்த்து உசிலின்னு விதவிதமா செஞ்சு
சாப்பிடலாம்.
இனிப்பும் துவர்ப்புமா அத்திப்பழத்தோட பிஞ்சுல அதிகத் துவர்ப்பு இருக்கும்.
ரத்த
சோகையையும் மூல நோயையும் போக்கும்.
சோம்புப் பொடியுடன் சேர்த்து
சாப்பிட்டாலும் வலி மறையும். அதேபோல, கருஞ்சீரகமும் வலியைக் குறைக்கும்.
கைக்குழந்தைக்கு, தாய்ப்பாலில் உரசிக் கொடுப்பாங்களே மாசிக்காய், அதுவும்
கூட ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தி, மாதவிடாய் வலியைக் குறைக்கக்கூடிய
மருந்துதான்.'
'ரத்தப்போக்கை நிறுத்தறதுக்கு மூலிகை வைத்தியத்துல வேற ஏதாவது இருக்கா பாட்டி?'
'பஞ்சதுவர்ப்பி, திரிபலா மூலிகைக் கூட்டணியை, இந்தப் பிரச்னைக்கு தீர்வா சொல்லுது சித்த மருத்துவம்.'
'அது என்ன கூட்டணி பாட்டி?'
'ஐந்து வகை துவர்ப்பிகளான ஆல், அரசு, அத்தி, இத்தி,
நாவல் மரப்பட்டை களையும் இடிச்ச கஷாயம்தான் பஞ்ச துவர்ப்பி. இந்தக் கஷாயம்
அதிக ரத்தப் போக்கை மட்டும் நிறுத்தாது. சர்க்கரை நோயையையும் கட்டுப்ப
டுத்தும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இந்த மூன்றின்
கூட்டணிதான் திரிபலா. மூன்று மூலிகைகளோட விதைகளை நீக்கி, தோலை மட்டும்
உலர்த்திப் பொடிச்சு, தேன் அல்லது வெந்நீரில் கொடுக்கலாம். ரத்தப்போக்கு
நிக்கிறதோட, மலச்சிக்கலுக்கும் நல்ல மருந்து.'
'பாட்டி பேசிட்டே இருக்காத... வலிக்குது எனக்கு. எதாவது பண்ணு.''
'இந்த வலிக்கு வெந்தயமும் நல்ல மருந்துதான்.
வெந்தயத்துல இருக்கிற நார்ச்சத்தும், அதில் உள்ள மூலிகை நுண்சத்துகளும்
நவீன மருந்து போல வேலை செய்யும். மாதவிடாய் பிரச்னைகள் அத்தனைக்கும்
அருமருந்து.'
'நிறையப் பேர் கற்றாழை ஜூஸ் குடிக்கிறாங்களே, அது நல்லதா?'
'கற்றாழைக்கு இன்னொரு பெயரே குமரிதான். அதனால
தாராளமா சாப்பிடலாம். ரத்தச்சோகையாலும், கருப்பை உட்சுவர் நல்ல வளர்ச்சி
இல்லாமப்போனாலும், மாதவிடாய் சமயத்துல வலி இருக்கும். இரும்புச்சத்தை உயர்த்தற மாதுளை ரசமோ, கற்றாழை ரசமோ அருந்தலாம்.
இல்லேன்னா கற்றாழையை லேகியமாவும் எடுத்துக்கலாம். வலி வராம இருக்கிறதோட,
வலிக்கான காரணத்தையும் போக்கும்.'
'சரி பாட்டி, கை வைத்தியத்திலேயே சரிசெஞ்சிடலாமா? மேல்சிகிச்சை எதுவும் தேவை இல்லையா?'
''கருப்பை உட்சுவர் அதிகமாவது, சினைப்பைப் பாதைத்
தடிச்சு வளர்றது போன்ற பிரச்னைகளாலும், வலியும், ரத்தப்போக்கும்
இருக்கலாம். மாதவிடாய் முடியறப்ப, இதுபோல் அதிக ரத்தப்போக்கு இருந்தா,
கருப்பை நார்க்கட்டியோ, சினைப்பை கட்டியாகவோகூட இருக்கலாம்.
அலட்சியப்படுத்தாம, குடும்ப வைத்தியரைப் பார்த்து, எதனால இப்படி அதிகமா
ரத்தப் போக்கு ஏற்படுதுனு தெரிஞ்சு, அதுக்கு சிகிச்சை எடுத்துக்கணும்.'
'வலிக்குப் பின்னால, இத்தனை வைத்தியமுறையா. சூப்பர் பாட்டி'
மருந்து மணக்கும்..
2 comments
நல்ல சித்த மருத்துவப் பகிர்வு...
தங்களின் வருகைக்கு வாழ்த்துக்கள்!BY pettagum A.S. Mohamed Ali
Post a Comment