ஓய்வுக்காலத் தேவைக்கென மூன்று ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு
?என் மாதச் சம்பளம் 2 லட்சம் ரூபாய். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். குழந்தைகளின் எதிர்கால தேவைகளான திருமணம், உயர்கல்வி மற்றும் என் ஓய்வுக...
https://pettagum.blogspot.com/2013/10/blog-post_5028.html?m=0
?என் மாதச்
சம்பளம் 2 லட்சம் ரூபாய். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். குழந்தைகளின்
எதிர்கால தேவைகளான திருமணம், உயர்கல்வி மற்றும் என் ஓய்வுக்காலத் தேவைக்கென
மூன்று ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்து வருகிறேன். இதில்
குழந்தையின் உயர்கல்விக்காக ஐ.டி.எஃப்.சி. பிரீமியர் ஈக்விட்டி ஃபண்ட்
குரோத்தில் 20 ஆயிரம் ரூபாய், திருமணத்திற்காக யூ.டி.ஐ. ஆப்பர்ச்சூனிட்டீஸ்
ஃபண்ட் குரோத்தில் 10 ஆயிரம் ரூபாய், ஓய்வுக்காலத்திற்காக ஃப்ராங்க்ளின்
இந்தியா புளூசிப் குரோத்தில் 20 ஆயிரம் ரூபாய் என மொத்தமாக மாதத்திற்கு 50
ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து வருகிறேன். 7-ம் தேதியை எஸ்.ஐ.பி. தேதியாகத்
தேர்ந்தெடுத்துள்ளேன். இது சரியான தேதியா?, நான் தேர்வு செய்த ஃபண்ட்
சரியானவைதானா? ஆலோசனை வழங்கவும்.
@- நரேந்திரன், துபாய். சொக்கலிங்கம் பழனியப்பன், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட்.
''நீங்கள் தேர்வு செய்துள்ள ஃபண்ட் அனைத்துமே கடந்த
காலத்தில் நல்ல வருமானத்தைத் தந்துள்ளன. இனிவரும் காலங்களிலும் இதுபோலவே
இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இதில் எந்தவிதமான மாற்றமும் செய்ய
தேவையில்லை. 7-ம் தேதி உங்களால் தொடர்ந்து பணம் கட்ட முடியும் என்றால்
தேதியை மாற்றத் தேவையில்லை.''
2 comments
கொஞ்சம் தங்கத்திலும் கொஞ்சம் ரியல் எஸ்டேட்டிலும் போட்டால் நல்லது.
Hello, my dear Plani kandhasamy thanks for your kinds of comment by A.S. Mohamed Ali
Post a Comment