மாத விலக்கு பிரச்சனை தீர மாதுளை பூ சாப்பிடுங்க
மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மாதுளம் பூச்சாறு, அருகம...
https://pettagum.blogspot.com/2013/02/blog-post_1955.html?m=0
மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.
மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.
மாதுளம்பழத் தோலின் பயன்கள்
மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் நன்கு மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.
2 comments
வறட்டு இருமல் என்னை கடந்த இருபத்தி ஐந்து நாட்களாக அசாத்ய தொந்தரவு தருகிறதே என
விசனப்பட்டு வேதனைப்பட்டு கதறி கண்ணீர் விட்டு ஒரு வலைப்பதிவு இங்கே நான் எழுதியிருந்தேன்.
அதற்கு பதிலாக தங்கள் வாசகி திருமதி கோமதி அரசு அவர்கள் உங்கள் பதிவிலே பூண்டு தரும் நன்மைகளைப்படிக்குமாறு
என்னை அறிவுரித்தினார்கள்.
அவர்களுக்கும் உங்களது அறிவுசார் வலைப்பதிவுக்கும் எனது நன்றி. பூண்டை தான் மிகவும் அதிகமாகவே என் உணவில்
சேர்த்துக்கொள்கிறேன். கடந்த பத்து ஆண்டுகளாக. என்னுடைய கொலாஸ்ட்ரல், ட்ரிகளிசரைட்ஸ் அதிக பயமுறுத்தும் நிலை
வெகுவாக குறைந்தது என்றால் அதற்க்கு காரணம் பூண்டு மட்டுமே.
வறட்டு இருமலுக்கு உங்களது ஸ்பெசிஃபிக் மருந்து இருந்தால் சொல்லவும். அதற்கு முன்னே நீங்கள் விவரித்திருந்த
பீட் ரூட் அல்வாவை இப்போது செய்து கொண்டு இருக்கிறேன்.
அதையும் சாப்பிட்டு பார்ப்போம்.
நன்றி.
சுப்பு தாத்தா.
வறட்டு இருமலுக்கு பனங்கர்கண்டில் மிளகு பொடி சேர்த்து 1/2 மணி நேரத்துக்கு ஒரு முறை சாப்பிடவும். சரிஆகிடும் by pettagum A.S. Mohamed Ali
Post a Comment