60 வயதிலும் நிமிரலாம்.. குனியலாம்! --- உடற்பயிற்சி,

60 வயதிலும் நிமிரலாம்.. குனியலாம்! ''ச் சே! வயசானதும் நாம நாமாளாகவே இருக்க முடியலை... கொஞ்ச நேரம் சேர்ந்தாற்போல நிற்க முடியலை...


60 வயதிலும் நிமிரலாம்.. குனியலாம்!

''ச்சே! வயசானதும் நாம நாமாளாகவே இருக்க முடியலை... கொஞ்ச நேரம் சேர்ந்தாற்போல நிற்க முடியலை, மாடிப்படி ஏறி இறங்க முடியலை... எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கு!'' - இப்படி நம் வீடுகளில் தாத்தா, பாட்டிகள் புலம்புவதைப்  பார்த்து இருப்போம். அவர்களின் சிரமங்களைப் பார்த்து நம் மனமும் சிரமத்துக்கு உள்ளாகும். பெரியவர்களின் இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் உடற்பயிற்சிகளில் தீர்வு இருக்கிறது என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள். 'வயதானவர்களால் உடற்பயிற்சிகள் செய்ய முடியாதே?’ என்று சிலர் கேட்கலாம்! ''அப்படி எல்லாம் எதுவும் இல்லை. வயதானவர்களுக்கு என்றே சில பிரத்யேகமான உடற்பயிற்சிகள் இருக்கின்றன!'' என நம்பிக்கை வார்க்கும் பயிற்சியாளர் மாரியப்பன், அவற்றை எப்படிச் செய்ய வேண்டும் என்று ஒரு செயல்முறை விளக்கமும் கொடுத்தார்.

''உடற்பயிற்சி செய்ய வேண்டிய வயதானவர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒரு வகையினர் இயல்பான நிலையில் பயிற்சிக்கு வருபவர்கள். மற்றொரு வகையினர் உடலின் சில பாகங்களில் பாதிப்பு ஏற்பட்டு, அதைக் குணப்படுத்தும் நோக்கில் பயிற்சி எடுத்துக்கொள்ள வருபவர்கள். எந்த வகையினராக இருந்தாலும் பயிற்சிகளைத் தொடங்கும் முன்னே அவர்களை டாக்டர் மற்றும் ஃபிசியோதெரபிஸ்ட்டிடம் அனுப்பி அவர்களின் உடலை முழுவதும் பரிசோதனை செய்தபின் அவர்களது வழிகாட்டுதல்பேரில்தான் பயிற்சிகளைத் அளிக்கத் தொடங்க வேண்டும்.
முதலில் எளிய வகை வார்ம் - அப் பயிற்சிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் ரத்த ஓட்டம் சீராகி, பயிற்சிக்காகத் தசைநார்கள் தயாராகும். அதன் பின்னர் சில 'ஸ்ட்ரெட்ச்’ வகைப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். மேலும் இவ்வகைப் பயிற்சிகளை மேற்கொள்ளும்போது வலி ஏற்பட்டால் உடனடியாக நிறுத்திவிடுவது நல்லது.
கால்ஃப் முறை (Calf stretch)
 முதலில் ஒரு சுவரின் அருகில் நேராக நிற்கவும்.
  ஒரு காலை நன்றாகத் தரையில் ஊன்றிக் கொண்டு இன்னொரு காலைப் படத்தில் காட்டி உள்ளபடி சுவற்றில் வைக்கவும்.
  சுவரைத் தொட்டபடி இருக்கும் காலுக்கு மெதுவாக அழுத்தம் கொடுத்துப் 10 முதல் 20 வினாடிகள் வரை நிற்கவும்.
பிறகு கால்களை மாற்றி இதேபோல மீண்டும் செய்யவும்.
 இதுபோன்று ஒவ்வொரு முறையும் மூன்று முறை என ஒரு நாளைக்கு நான்கு வேளை செய்ய வேண்டும்.
 பலன்கள்
ரத்த ஓட்டம் சீராகும், பயணங்களின் போது கணுக்கால் மற்றும் பாதங்களைச் சுற்றி ஏற்படும் வீக்கம் குறையும். குதிக்கால் வலி நீங்கும்.
 
 ஹாம்ஸ்டிரிங் (Hamstring)
 தரையில் கால்களை நீட்டியபடி நேராக உட்காரவும்.
 முடிந்தவரை கால் முட்டிகளை மடக்காமல் அதே சமயம் முதுகையும் வளைத்து, கால் கட்டை விரல்களைத் தொடுவதற்கு முயற்சிக்கவும்.
 திரும்பப் பழைய நிலைக்கு வந்து மீண்டும் இதேபோல செய்யவும்.
 பலன்கள்
முதுகுவலி நீங்கும். முதுகுப் பகுதியின் வளைந்துக் கொடுக்கும் தன்மை அதிகமாகும்.
  ஐ.டி பேன்ட் ஸ்ட்ரெட்ச் (IT band stretch)
 நேராக நிற்கவும்.
 கால் முட்டியை நோக்கிக் கைகளை நீட்டிய நிலையில் மெதுவாகக் குனிந்து நிற்கவும்.
 அப்படியே 45 டிகிரி கோணத்தில் படத்தில்காட்டி உள்ளபடி வலது பக்கமாக மெதுவாக உடலை மட்டும் திருப்பவும்.
 இந்த நிலையில் 15 வினாடிகள் நிற்கவும்.
 மெதுவாகப் பழைய நிலைக்குத் திரும்பவும்.
 இப்போது இந்தப் பயிற்சியை இடது பக்கமாக உடலைத் திருப்பிச் செய்யவும்.
 இதுபோன்று ஒவ்வொரு முறையும் மூன்று முறை என ஒரு நாளைக்கு நான்கு வேளை செய்ய வேண்டும்.
 பலன்கள்
மூட்டுப் பகுதியில் இருக்கும் வலி குணமாகும்.

குவாட் ஸ்ட்ரெட்ச் (Quad stretch)
 நேராக நிற்கவும்.
 படத்தில் காட்டி இருப்பது போல வலது காலை வலது கையால் மெதுவாக மடக்கிப் பிடித்துக்கொள்ளவும்.
 இவ்வாறு 15 வினாடிகள் நிற்க வேண்டும்.
 திரும்ப இயல்பு நிலைக்கு வந்து மற்றொரு காலிலும் செய்ய வேண்டும்.
 உடலைச் சிரமப்படுத்தாமல் இப்படி எத்தனை முறை முடிகிறதோ அத்தனை முறை செய்யலாம்.
எந்தவிதமான பிடிமானமும் இல்லாமல் இந்தப் பயிற்சியைச் செய்யச் சிரமமாக இருந்தால் இன்னொரு கையால் பக்கத்தில் இருக்கும் சுவரைப் பிடித்துக் கொள்ளலாம்.
 பலன்கள்
நீண்ட நேரமாக உட்கார்ந்து இருந்ததாலும் நடந்ததாலும் ஏற்படும் மூட்டு வலி குறையும். சிரமப்படாமல் உட்கார்ந்து எழுந்திரிக்கவும், மாடிப்படிகள் ஏறி இறங்கவும் உதவும்.
 க்லூட்டஸ் ஸ்டிரெட்ச் (Glutes stretch)
 கால்களை நீட்டியபடி நேராக அமர்ந்துகொள்ளவும்.
 முடிந்தவரை முதுகை நேராக வைத்துக்கொண்டு படத்தில் காட்டி உள்ளபடி இடது காலை வலது காலுக்கு மறுபக்கமாக வைத்துக்கொள்ளவும்.
 பிறகு கைகளைக் கோர்த்துக்கொண்டு உடலை வலது பக்கமாக சிறிது திருப்பவும்.
 பிறகு மெள்ளப் பழைய நிலைக்குத் திரும்பி மறு பக்கத்துக்கும் இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும்.
 இதுபோன்று ஒவ்வொரு முறையும் மூன்று முறை என ஒரு நாளைக்கு நான்கு வேளை செய்ய வேண்டும்.
 பலன்கள்
    முதுகுப்பகுதி பலம் பெறும்.
 சூப்பர்மேன் நிலை - வலுப்படுத்தும் பயிற்சி (Superman position)
 முதலில் குப்புறப் படுத்துக்கொள்ளவும்.
 படத்தில் காட்டி உள்ளபடி இடது காலை உயர்த்தி, அதேசமயம் வலது கையை நீட்டியபடி உயர்த்தவும்.
 பிறகு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி காலையும் கையையும் மாற்றி இதேபோலச் செய்ய வேண்டும்.
 பலன்கள்
ரத்த ஓட்டம் சீராகும். முதுகுத்தண்டு பலம் பெறும்.
 இங்கு குறிப்பிட்டு இருக்கும் பயிற்சிகள் அனைத்தையும் உரிய மருத்துவ ஆலோசனைகள் பெற்றுதான் மேற்கொள்ள வேண்டும்.

Related

உடற்பயிற்சி 9191029813383173940

Post a Comment

1 comment

MohamedAli said...

welcome and thanks for u

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item