உடல் பருமன் குறைய சில வழிமுறைகள்!!! --2--ஹெல்த் ஸ்பெஷல்,
சோம்புவை எடுத்து சுத்தம் செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி அந்த நீரை அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும். கேரட்டை நன்றாக து...
https://pettagum.blogspot.com/2012/07/2_27.html?m=0
சோம்புவை எடுத்து சுத்தம் செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி அந்த நீரை அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
கேரட்டை நன்றாக துருவி போட்டு அதில் தேன் சேர்த்து நன்கு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்.
நெல்லிக்காயை எடுத்து சுத்தம் செய்து கொட்டையை நீக்கி விட்டு நன்கு அரைத்து பிழிந்து சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவைகளை எடுத்து நன்றாக பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
நான்கு அவுன்சு வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.
ஆமணக்கின் வேரை நன்றாக இடித்துத் தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து,நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.
வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.
அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.
கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும்.
பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
1 comment
nice like me goog
Post a Comment