தேங்காய்ப்பால் சாதம்---சமையல் குறிப்புகள்
குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி, லஞ்ச் ரெடி செய்ய ஏற்ற ஒரு ரெஸிபி, தேங்காய்ப்பால் சாதம். இது செய்வதற்கு மிக எளிமையானது. சூடாக சா...
https://pettagum.blogspot.com/2012/02/blog-post_3186.html?m=0
குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி, லஞ்ச் ரெடி செய்ய ஏற்ற ஒரு ரெஸிபி, தேங்காய்ப்பால் சாதம். இது செய்வதற்கு மிக எளிமையானது. சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். செய்முறை இதோ...
தேவையானவை
பாசுமதி அரிசி - 2 கப்
தேங்காய் முற்றியது - 1
சின்ன வெங்காயம் - 10
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 10 பல்
புதினா - 1 சிறுகட்டு
பச்சைமிளகாய் - 6
கரம் மசாலா தூள் - ஒரு டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
ரீபைண்ட் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
* தேங்காயைத் துருவி ஒரு கப் தண்ணீர்விட்டு அரைத்து வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும். பிறகு இன்னொரு கப் தண்ணீர் விட்டு அரைத்து மீண்டும் பால் எடுக்கவும். மீண்டும் ஒரு கப் தண்ணீர் விட்டு மூன்றாம் முறை பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு மூன்றையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை நறுக்கவும்.
* அரிசியை நன்றாக கழுவி நீரை ஒட்ட வடிக்கவும்.
* குக்கரில் எண்ணெய், நெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுதைப்போட்டு பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும். வதங்கியதும் புதினா, கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கவும்.
* முதலில் தேங்காய்ப்பால் எத்தனை கப் உள்ளது என்று அளந்து கொள்ளவும். இந்த அளவு சாதம் செய்ய 4 கப் தேங்காய்ப்பால் தேவை. எனவே தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 4 கப் தேங்காய்ப்பால் எடுத்து குக்கரில் ஊற்றவும். அத்துடன் அரிசி, உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு 2 விசில் வரை மிதமான தீயில் வைத்து இறக்கவும். சுவையான தேங்காய்ப்பால் சாதம் ரெடி.
* இதற்குத் தொட்டுக்கொள்ள வெங்காய தயிர் பச்சடி ஏற்றது.

1 comment
தேங்காய் பால் சாதம் மணக்குது.
Post a Comment