நிலவேம்பு கஷாயத்தை தினந்தோறும் எத்தனை முறை பருக வேண்டும் தெரியுமா?

நிலவேம்பு கஷாயத்தை தினந்தோறும் எத்தனை முறை பருக வேண்டும் தெரியுமா?   வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்படாதவர்கள்  ...

நிலவேம்பு கஷாயத்தை தினந்தோறும் எத்தனை முறை பருக வேண்டும் தெரியுமா?
 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்படாதவர்கள்  நிலவேம்பு கஷாயத்தை தினந்தோறும் எத்தனை முறை பருக வேண்டும் என்பது குறித்து சித்த மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் பிச்சையகுமார்  விளக்கம் அளித்துள்ளார்.  


சித்த மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் பிச்சையகுமார் கூறுகையில், "காய்ச்சல் கண்டவர்கள் தினந்தோறும் 2 முறை 30 மி.லி முதல் 50 மி.லி வரை 5 நாட்களுக்கு நிலவேம்பு குடிநீரினை பருகவேண்டும். மற்றவர்கள் தினந்தோறும் 1 முறை 7 நாட்களுக்கு பருகவேண்டும். நிலவேம்பு குடிநீரானது அனைத்து வைரஸ் காய்ச்சல்களையும் வராமல் கட்டுப்படுத்தவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கவும் உதவுகிறது" எனத் தெரிவித்தார். 


* மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு, உடனடியாக கொடுக்க, நிலவேம்பு கஷாயம் பெஸ்ட். நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது. இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும்.  

Related

ஹெல்த் ஸ்பெஷல் 6174940965028995039

Post a Comment

Post a Comment

emo-but-icon

Contributors

item