திரிபலா சூரணம்!

திரிபலா சூரணம்! ரேச்சல் ரெபெக்கா ஆயுர்வேத மருத்துவர் சி த்த, ஆயுர்வேத, இயற்கை மருத்துவ முறைகளில் அமிர்தமாகக் கொண்டாடப்படுவது...

திரிபலா சூரணம்!
ரேச்சல் ரெபெக்கா
ஆயுர்வேத மருத்துவர்
சித்த, ஆயுர்வேத, இயற்கை மருத்துவ முறைகளில் அமிர்தமாகக் கொண்டாடப்படுவது திரிபலா சூரணம். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் எனும் மூன்று பொருட்களின் கூட்டமைப்பு. நாட்டு மருந்துக்கடைகளில் எளிதாகக் கிடைக்கும்.

திரிபலா சூரணம் தினமும் சாப்பிட்டுவர, வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும். அஜீரணக் கோளாறு நீங்கும். ரத்தம் சுத்திகரிக்கப்படும். ரத்த ஓட்டம் சீராகும். கல்லீரல், நுரையீரலில் புண்கள் வராமல் பாதுகாக்கும். ஆஸ்துமா, மஞ்சள் காமாலை இருப்பவர்களுக்கு ஏற்றது.
தோலில் அரிப்பு, கருமை, சிவப்புப் புள்ளிகள் இருந்தால், இந்த சூரணத்தைத் தடவிவர, விரைவில் சரியாகும். தொடர்ந்து, திரிபலா சாப்பிட்டு வருபவர்
களுக்கு, தோல் மினுமினுப்பு அடையும். உடல் வலுவாகும், நோய்கள் அண்டாது.

உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஏற்றது.

காலில் வெடிப்பு இருந்தால், இரவு படுக்கைக்குப் போகும் முன்பு, சுடுநீரில் திரிபலா சூரணத்தைக் கலந்து, வெதுவெதுப்பான சூட்டில் பாதத்தை 20 நிமிடங்கள் ஊறவைத்து எடுக்கலாம்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி திரிபலா சூரணம் கலந்து, காலை நேரத்தில் சாப்பிட, சில மணி நேரத்தில் மலச்சிக்கல் பிரச்னை சரியாகும்.
இளமையிலேயே முதுமைத் தோற்றம் வந்துவிட்டதாகக் கவலைப்படுபவர்கள், தினமும் இரவு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில், அரை டீஸ்பூன் திரிபலா சூரணம் கலந்து குடித்துவந்தால், இளமைத் தோற்றம் கிடைக்கும்.

வயிற்றுப்போக்கு உள்ளவர்கள், ‘இரிடபிள் பவுல் சின்ட்ரோம்’ எனப்படும் சாப்பிட்டவுடன் வயிற்றுப்போக்கு பிரச்னையால் அவதிப்படுபவர்கள், கர்ப்பிணிகள் திரிபலா சூரணம் சாப்பிட வேண்டாம்.

திரிபலா சூரணம் செய்முறை: கடுக்காய் ஒரு பங்கு,  நெல்லிக்காய் நான்கு பங்கு, தான்றிக்காய் இரண்டு பங்கு எடுத்து நன்றாக நிழலில் உலர்த்தி காயவைக்கவும். காய்ந்த மூன்றையும் அரைத்துப் பயன்படுத்தவும்.

Related

சூரணம் 4084723902823489784

Post a Comment

Post a Comment

emo-but-icon

Contributors

item