மார்பகப் புற்றுநோய்கான காரணிகளும் சிகிச்சைகளும். அனைத்து பெண்களும் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு!

மார்பக புற்றுநோய் உருவாகுவதற்கான காரணங்கள்: உடம்பை கட்டாக வைத்திருக்க பலவித கட்டுப்பாடுகளை மேற்கொள்ளும் பெண்களுக்கே மார்பக புற்றுநோய...மார்பக புற்றுநோய் உருவாகுவதற்கான காரணங்கள்:

உடம்பை கட்டாக வைத்திருக்க பலவித கட்டுப்பாடுகளை மேற்கொள்ளும் பெண்களுக்கே மார்பக புற்றுநோய் முக்கியமாக ஏற்படுகிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மார்பகப் புற்றுநோய் இன்று  நாட்டில் இளம் பெண் களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் ஒரு கொடிய நோயாக உருவெடுத்துள்ளது. மார்பகப் புற்றுநோய் சம்பந்தப்பட்ட பெண்களின் கவனயீனத்தினால் தான் அதிகமாக ஏற்படுகிறதென்று வைத்தியர்கள் கூறுகின்றார்கள்.

எனவே, மார்பகப் புற்று நோய் தொடர்பான அறிவூட்டுவதற்கான செயற்பாடுகளை பிரதேச மட்டத்தில் முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சு பிரதேச, மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மார்பகப் புற்றுநோயை கண்டு பிடிப்பதற்கு நான்கு வழிகளில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

புற்றுநோய் இருப்பதை தாமாகவே பரிசோதித்து கண்டு கொள்வது, ஆஸ்பத்திரிகளில் கிளினிக் சிகிச்சைக்கு செல்வதன் மூலம் அடை யாளம் கண்டு கொள்ளல், மெமோகிறாம் பரிசோதனை மற்றும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை ஆகியவற்றின் மூலம் கண்டு கொள்ள முடியும். இப்பரிசோதனைகள் அரசாங்க ஆஸ்பத்திரி களில் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன.

புற்றுநோய் ஏற்படுவதற்கு பிரதான காரணம் பிள்ளைகளை ஈன்றெடுக்கும் தாய்மார்களின் சுயநலம் என்று வைத்தியர்கள் கூறுகின்றார்கள். தாயான பின்னரும் பெண்கள் தங்கள் உடலை கட்டாக வைத்திருந்து கவர்ச்சிகரமான தோற்றத்தை பெறுவதற்காக தாங்கள் பெற்றெடுத்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலை ஊட்டுவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள்.

குழந்தை பிறந்த முதல் 10 நாட்களுக்கு தாய்ப் பாலை கொடுத்த பின்னர் சில தாய்மார் தங்கள் குழந்தைகளுக்கு புட்டிப்பாலை பழக்கி புட்டிப்பாலை ஊட்டுவதனால் பெண்களின் மார்பகத்தில் இயற்கையாகவே ஊற்றெடுக்கும் தாய்ப்பால் வெளியேறுவதற்கு இடமின்றி மார்பகங்களிலேயே கண்டிப்போகின்றன.

இதுவும் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு காரணமாகும். சில தாய்மார் தங்கள் மார்பகங்களில் தாய்ப்பால் ஊற்றெடுப்பதை தடுப்பதற்கு சில மருந்து மாத்திரைகளை எடுப்பதும் உண்டு. இதனாலும் இவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தோன்றுகின்றன. தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு சுமார் 3 முதல் 4 வருடங்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு என்றுமே மார்பக புற்றுநோய் ஏற்படாதென்று புற்றுநோய் வைத்திய நிபுணர் கள் கூறுகிறார்கள்.

தெற்காசிய நாடுகளில் நடத்தப்பட்ட மதிப்பீட்டில் இலங்கையே தாய்ப் பால் ஊட்டுவதில் முன்னிலையில் இருக்கின்றது என்ற உண்மை புலனாகி இருக்கின்றது. இந்தத் தகவலை யுனிசெப் அமைப்பின் விசேட போஷாக்கு நிபுணரான ஜூலியா க்ரெசவெக் தெரிவித் துள்ளார்.

எங்கள் நாட்டில் உள்ள கிராமிய மற்றும் மலையகத்தைச் சேர்ந்த வறுமை நிலையில் உள்ள தாய்மார் இன்றும்கூட தங்கள் உடல் அழகையும், ஆரோக்கியத்தையும் பொருட்படுத்தாமல் தங்கள் பிள்ளைகளுக்கு 5 வயது வரை இயற்கை அன்னை மனித குலத்திற்கு அறிமுகம் செய்த பாலூட்டும் பழக்கத்தை தொடர்ந்தும் கடைப்பிடிக்கிறார்கள். அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை

மார்பகப் புற்றுநோயும் பரிகாரமும்
மார்பகத்தின் அமைப்பு:

ஒவ்வொரு மார்பகமும் லோப்ஸ் (lobes) எனப்படும் 6 முதல் 9 அடுக்கடுக்கான மடிப்பு சதைகளானது. ஒவ்வொரு சதையும் லோப்யூல்ஸ் (lobules) எனப்படும் பல சிறு இதழ்களைக் கொண்டு பாலைச் சுரக்கும் சில டஜன் குமிழ்களாக முடியும். இத்தகைய மடிப்புத் தொங்கு சதைகள், சதைகள், சிறு இதழ்கள் முனைப் பகுதி குமிழ்கள் அனைத்தையும் மெல்லிய இழை நாளங்கள் ஒன்றிணைக்கின்றன.

இந்த இழை நாளங்கள் மார்பகத்தின் நடுவிலுள்ள ஆரியோலா (areole) எனப்படும் கரும் வட்டத்தின் நடுவிலுள்ள முலைக்காம்பில் ஒன்றிணைகின்றன. சிறு இதழ்களுக்கும் நாளங்களுக்கும் இடையேயுள்ள இடைப்பகுதியைக் கொழுப்புப் பொருட்கள் நிறைக்கின்றன. மார்பகத்தில் சதைப்பற்று ஏதும் இருக்காது. ஆனால் மார்பகத்தின் அடிப்பகுதியில் சதைப்பற்று இருந்து விலா எலும்புகளை மறைக்கின்றன.

ஒவ்வொரு மார்பகமும் இரத்த நாளங்களையும் லிம்ப் (lymph) எனப்படும் வர்ணமற்ற நிணநீர் திரவத்தை எடுத்துச் செல்லும் நாளங்களையும் கொண்டுள்ளது. இந்த லிம்ப் நாளங்கள் அவரை விதை வடிவிலுள்ள லிம்ப் நோட்ஸ் (Nodes )எனப்படும் முடிச்சுகளில் செல்லுகின்றன. இத்தகைய லிம்ப் நோட்ஸ்கள் கூட்டங் கூட்டமாக அக்குழ்களின் மேலேயும் தோற்பட்டை எலும்புகளின் மேலும் மார்பகங்களிலும் உள்ளன. இத்தகைய லிம்ப் நோட்ஸ் உடலின் மற்ற பல பாகங்களிலும் உள்ளன.

மார்பக புற்று நோய் என்றால் என்ன?

மார்பக புற்று நோய் என்றால், மார்பகத்தில் உள்ள சில செல்கள் அளவுக்கதிகமாக வளர்வதாகும். புற்று நோய் செல்கள் மற்ற செல்களைக் காட்டிலும் பல வகைகளில் வேறுபட்டிருக்கும். அவை வேகமாகப் பிரிந்து வளர்ந்து சுற்றிலுமுள்ள திசுக்களை ஆக்கிரமிக்கும்

மார்பக புற்று நோயின் அறிகுறிகள் என்ன?

துவக்க நிலை மார்பக புற்றுநோய் சாதாரணமாக வலியை உண்டாக்காது. மார்பக புற்றுநோய் வளரத் தொடங்கும் போது எந்தவித அடையாளமும் அறிகுறியும் இருக்காது. புற்றுநோய் வளர வளர கீழ்க்கண்ட அறிகுறிகள் ஏற்படும்.
  • 1, வீக்கம் அல்லது மார்பகம் அல்லது அக்குள் பகுதி தடிக்கும்.
  • 2. மார்பகத்தின் அளவும் வடிவும் மாறுபடும்
  • 3. முலைக் காம்பிலிருந்த இரத்தமோ வேறு திரவமோ கசியும்.
  • 4. மார்பகத்தின் தோல், கருப்பு வளையம், முலைக்காம்பு முதலியவற்றின் வண்ணம் மாறும். (குழிவிழுதல், மடிப்பு விழுதல், சொரசொரத்தல்)
  • 5. சமீப காலமாக முலைக்காம்பு உள்ளிழுத்துக் கொள்ளும்.
மேற்கண்ட மாறுதல்களில் ஏதேனும் தென்பட்டால் உடனே உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

எவ்வாறு மார்பகப் புற்றுநோய் கண்டறியப் படுகிறது?

மார்பகப் புற்றுநோயைக் கீழ்க்கண்ட முறைகளில் கண்டறியலாம்
மார்பக சுய பரிசோதனை:

மாதந்தோறும் மாதவிடாய் முடிந்த ஏழு நாட்களுக்குப் பிறகு உங்கள் மார்பகங்களை நீங்களே தடவிப் பார்த்து மார்பகத்தில் கட்டியோ அல்லது தோலில் தடிப்புகளோ தட்டுப்படுகிறதா எனப் பார்க்கலாம். வருடந்தோறும் மேமோகிராம் பரிசோதனை செய்து கொள்ளலாம். இதனால் ஆரம்பத்திலேயே மார்பகக் கேன்சரை கண்டுபிடித்து முழுதாக குணமாக்கிவிட முடியும்!
மார்பக சுய பரிசோதனை செய்வது முப்பது வயதைத் தாண்டிய ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்லது. இந்தப் பரிசோதனையை கண்ணாடி முன் நின்றும் செய்யலாம். படுத்துக்கொண்டும் சுய பரிசோதனை செய்யலாம்.

முதலில் கண்ணாடி முன் நின்று இரண்டு மார்பகங்களையும் நிதானமாக கூர்ந்து கவனிக்கவேண்டும். மார்பகங்களின் அளவிலோ, உருவிலோ மாற்றங்கள் தெரிகிறதா என்பது பார்க்கவேண்டும்.

அடுத்ததாக மார்புக் காம்பிலிருந்து நீர் அல்லது இரத்தம் கலந்த நீர் வடிகிறதா, மார்புக் காம்பைச் சுற்றியுள்ள கருமையான பகுதியில் புண் ஏதும் இருக்கிறதா, மார்புக் காம்பு உள்ளிழுக்கப்பட்டு இருக்கிறதா, மார்பகங்களில் மேலாகத் தோலின் நிறத்தில் மாறுபாடு தெரிகிறதா, அல்லது அந்த இடத்தில் சொரசொரப்பாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

பின்பு கைகளை தலைக்கு மேலாகத் தூக்கிக்கொண்டு இடது மார்பகத்தை (கடிகாரச் சுற்றில்) வட்ட வடிவில் லேசாக அழுத்தித் தடவி கட்டியோ, தடிப்போ தட்டுப்படுகிறதா என்று ஆராயவேண்டும்.

அதேபோல் இடது கையால் வலதுபுற மார்பகத்தை ஆராயவேண்டும். இப்படி செய்யும்போது, மார்பகத்தை ஒட்டிய அக்குள் பகுதிகளையும் தொட்டுப் பரிசோதனை செய்யவேண்டும்.

இப்படித் தடவி பரிசோதனை செய்யும்போது, விரலின் நுனிப் பகுதியைப் பயன்படுத்தக்கூடாது. பட்டையான விரல் பகுதியைத்தான் பயன்படுத்தவேண்டும்.

இப்படி தன்னைத்தானே மாதந்தோறும் பரிசோதித்துக் கொள்ளும்போது, சின்னதாக மிளகு சைஸில் ஒரு கட்டி இருந்தால்கூட கண்டுபிடித்துவிட முடியும்! அதனால் உடனடியாக ட்ரீட்மெண்டும் மேற்கொண்டு குணமாகும் வாய்ப்பும் உள்ளது!

ஆனால், எப்போதாவது தன்னை சுயப் பரிசோதனை செய்யும் பெண்கள் கொண்டைக் கடலை அளவுக்குப் பெரிய கட்டியைத்தான் தடவி கண்டுபிடிக்க முடியும்! எப்போதுமே சுய பரிசோதனை செய்யாத பெண்கள் காலங் கடந்தே அதாவது கட்டி நாலணா அளவிற்குப் பெரிதான பின்பே பெரும்பாலும் கண்டுபிடிக்கிறார்கள்.

வருடத்திற்கு ஒருமுறை மேமோகிராம் சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் ஆரம்பநிலையிலேயே மார்பகக் கேன்சரை கண்டுபிடிக்க முடியும்!
பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் வருடந்தோறும் மேமோகிராம் செய்து கொள்ள வேண்டும். 40 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த பரிசோதனை செய்தால், மார்பகச் சதை அடர்த்தியாக இருப்பதால் துல்லியமாக கண்டுபிடிக்கமுடியாது. அதனால் அந்த வயதினருக்கு சுய பரிசோதனை மிகவும் அவசியம்.

மார்பக கேன்சரால் பாதிக்கப்படும் பெண்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்த பின்பே மருத்துவரால் அதற்கேற்றபடி சிகிச்சை கொடுக்க முடியும்.

மருத்துவ வரலாறு

உங்களுக்கு மார்பக புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறிய மருத்துவ வரலாறு உதவும். உங்கள் குடும்பத்தில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருந்ததா? இருக்கிறதா என்று கேட்டறிவார். உங்களுடைய மாத விலக்கு விவரங்கள், உங்கள் மார்பகக் கட்டியின் புறத் தன்மைகள் குறித்து உங்களிடம் கேட்பார்.
மார்பகக் கட்டியைத் தொட்டுப் பார்த்தல்:

உங்கள் மருத்துவர் உங்கள் மார்பகத்தைத் தொட்டுப் பரிசீலனை செய்து மார்பகக் கட்டியின் இருப்பிடம், அளவு, மார்பக லிம்ப் மற்றும் லிம்ப நோட்ஸ்களின் பொதுத்தன்மையைக் கண்டறிவார்.

மம்மோ கிராம் (mammo gram)

உங்கள் மருத்துவர் மம்மோகிராம் சோதனையைச் செய்து கொள்ளுமாறு உங்களிடம் கூறலாம். மார்பகக் கட்டிகளை, அதிலும் மிகச் சிறியவற்றைக் கண்டு பிடிக்க உதவும் ஒருவகை பயன்மிக்க மார்பகத்தை எக்ஸ்ரே பிடிக்கும் தொழில் நுட்பமாகும் இது. ஒரு தட்டு போன்ற கருவியால் உங்கள் மார்பகத்தைத் தட்டையாக அழுத்தி மார்பகத்தின் தெள்ளிய வடிவத்தை அறிய முயலப்படும்.

உங்கள் மார்பகக் கட்டியின் முக்கிய விவரங்களை மம்மோகிராம் உங்கள் மருத்துவருக்கு அளிக்கும் றிப்போட்டில் மம்மோ கிராமில் ஏதேனும் ஒரு பகுதியில் ஐயம் உண்டாக்கினாலும், தெளிவாக இல்லாவிட்டாலும் மற்றொரு எக்ஸ்-ரே எடுக்க வேண்டியிருக்கும்

அதிரொலி (Ultra sound)

அதிர்ரொலி என்பது அதிக அதிர்வுடன் கூடிய ஒலியலைகளை மார்ப்கத்தின் மீது செலுத்தி மார்பகத்தின் கட்டி கெட்டியாக (திடமாக) உள்ளதா அல்லது திரவம் நிறைந்துள்ளதா என்று கண்டறியலாம். மம்மோ கிராபியுடனும் இந்தப் பரிசீலனையைச் செய்யலாம்.

நீடில் பயோப்சி (Needle Biopsy)

உங்கள் மருத்துவர் ஒரு மெல்லிய ஊசியால் உங்கள் மார்பகக் கட்டியிலிருந்து ஒரு சில செல்களை எடுத்து நுண்ணோக்கியில் பரிசீலித்து மார்பக புற்றுநோய் உள்ளதா இல்லையா என்று கண்டறிவார். சில சமயங்களில் ஒரு பெரிய ஊசியை கெட்டியான கட்டியின் மைய செல்களை எடுக்கப் பயன் படுத்துவார்.

மார்பகப் புற்று நோயின் வகைகள்:-

மார்பகப் புற்று நோயில் பல வகைகளுண்டு. எளிய வகைகள் கிழே தரப்பட்டுள்ளன

1. நாளப்புற்று நோய் (Ductoal carcinome)

இது மிகச் சாதாரணமாக வரும் மார்பகப் புற்றுநோய் வகையாகும். நாளங்கள் தடிப்பதின் வழி இது துவங்கும்.

2. மடிப்பு சதை புற்றுநோய் (lobuler carcinome)

இது மார்பகத்தின் மடிப்புச் சதைகளில் உண்டாகும்.

3. முற்றிலும் பரவிய புற்றுநோய் (metastatic)

மார்பகத்தின் வெளிப்பகுதியில் புற்றுநோய் முற்றிலும் பரவிய பின்னர் புற்றுநோய் அணுக்கள் அக்குளின் கீழேயுள்ள லிம்ப் நோட்களில் அதிகமாகப் பரவும். எப்போது இத்தகைய முடிச்சுகளில் புற்று நோய் பரவுகிறதோ, புற்றுநோய் அணுக்கள் உடலின் மற்ற எல்லா பாகங்களிலும் பரவும் அபாயம் உருவாகிறது.

மார்பகப் புற்றுநோயின் படி நிலைகள் (stages)

மார்பகப் புற்று நோயில் நான்கு படி நிலைகள் உள்ளன.

1. முதல் படி நிலை:-
முதல்படிநிலை என்றால் புற்று நோய் அணுக்கள் இன்னம் மார்பகத்தைத் தவிர வேறெங்கும் பரவில்லை என்றும், கட்டியின் சுற்றளவு 2,5 செ,மீட்டரைக் காட்டிலும் அதிகமில்லை என்று பொருள்.

2. இரண்டாம் படி நிலை:-
அக்குளின் கீழேயுள்ள நெறிக்கட்டி (நிணநீர்கட்டி) களில் புற்று நோய் பரவி விட்டது என்றும் மார்பகக் கட்டியின் சற்றளவு 2..5 செ.மீட்டரைக் கடந்து விட்டது என்றும் பொருள்.

3. மூன்றாம் படி நிலை:-
பொதுவாக மூன்றாம் படிநிலையை முதிர்ந்த புற்றுநோய் என்பார்கள். மார்பகக் கட்டியின் சுற்றளவு 5 செ.மீட்டரை கடந்து விட்டது என்றும் மார்பகச் சுவர் அல்லது மேல் தோலில் இதில் ஈடுபட்டுள்ளது என்றும் பொருள். இந்நிலையில் அக்குளின் கீழே உள்ள லிம்ப் நோட்களில் புற்றுநோய் அணுக்கள் முற்றிலும் பரவி விடும்.

4. நான்காம் படி நிலை:-
இந்த நான்காம் படி நிலை முற்றிலும் பரவி விட்ட புற்றுநோயாகும். புற்றுநோநய் மார்பகத்திலிருந்து உடலின் மற்ற பாகங்களான நுரையீரல், ஈரல், மூளை, எலும்புகள் மற்ற எல்லா லிம்ப் நோட்(நெரிகட்டிகள்)கள் அனைத்திலும் பரவி விட்டது என்று பொருள்.

மீண்டும் வரும் புற்று நோய் (Recurrent Cancer)
மீண்டும் வரும் புற்றுநோய் என்றால் துவக்க மருத்துவத்திற்குப் பின்னரும் மீண்டு வரும் நோயாகும். மார்பகத்தில் உள்ள கட்டி முற்றிலும் அறுத்து அகற்றப் பட்ட பின்னரும் அல்லது அழிக்கப் பட்ட பின்னரும் சில நேரங்களில் கண்டு பிடிக்க முடியாத சில சிறு புற்றுநோயணுக்கள் மருத்துவத்திற்குப் பின்னரும் உடலில் விடுபட்டு இருந்தால் அல்லது மருத்துவத்திற்கு முன்னரே புற்றுநோய் பரவி விட்டிருந்தால் புற்றுநோய் மீண்டும் வரும்.

அறுவை மருத்துவம் என்றால் என்ன?
கட்டியின் அளவு, இருப்பிடம், பரிசோதனை காலையில் நடந்த பரிசோதனையின் முடிவுகள், நோய் உள்ள படி நிலை அல்லது அளவு இவற்றைப் பொறுத்து மார்பகப் புற்று நோய்க்கான மருத்துவம் நடைபெறம். இந்த மருத்துவம் மார்பகத்தில் மட்டும் அல்லது சிஸ்டமிக்( முழு உடலுக்கும்) கொடுக்கும் முறையில் இருக்கும். ஒருவர் ஒன்று அல்லது பல மருத்துவங்களை பெறுவார்.

மார்பகப் புற்று நோய்க்கு மருத்துவம் என்ன?
மார்பகப் புற்று நோயின் மருத்துவம், கட்டியின் அளவு, இருப்பிடத்தைப் பொறுத்து, பரிசோதனை சாலையின் பரிசோதனை முடிவுகளையும், நோயுள்ள படி நிலையையும், நோயின் தன்மையைப் பொறுத்தும் அமையும் மருத்துவம் என்பது தனிப்பட்டது அல்லது முழு உடல் சார்ந்தது

மார்பு பகுதிக்கு மட்டும் மருத்துவம்
ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள புற்றுநோய் அணுக்களை நீக்கவோ, அழித்தலோ கட்டுபடுத்துதலோ இந்த வகை மருத்துவத்தின் தன்மையாகும். அறுவை மருத்துவம், அதிரொலி பாய்ச்ச மருத்துவங்கள் இந்த வகை மருத்துவத்துக்குட்பட்ட மருத்துவமாகும்.

அறுவை மருத்துவம்
அறுவை மருத்துவம் என்பது மார்பகக் புற்று நோய்க்கான மிகச் சாதாரணமான மருத்துவ முறையாகும்.

அறுவை மருத்துவத்தின் வகைகள்:-
1. லம்பாக்டமி (Lumpectomy)
இந்த வகை அறுவை மருத்துவத்தில் மார்பகம் அப்படியே இருக்கும் மார்பகக் கட்டியும், அதைச் சுற்றியுள்ள சாதாரண இழைமங்கள் சிலவும் அறுத்து அகற்றப்படும்.

2. மாஸ்டெக்லொமி (Mastectomy)
இதில் பல வகைகள் உள்ளன. அவையாவன சாதாரண மாஸ்டெக்டமி (Simple mastectomy)
இந்த முறையில் அக்குளிலுள்ள லிம்ப் நோட்களைச் சுத்தப்படுத்தி, பத்திரப்படுத்தி விட்டு மார்பகத்தை அறுத்து முழுவதும் அகற்றப்படும்
ரேடிகல் மாஸ்டெக்டமி:-

இந்த முறையில் மார்பகம் முழுவதும் அக்குளுக்குரிய லிம்ப் நோட்களும் சிறிது மார்பக சுற்று சதையும் அறுத்து அகற்றப்படும். புற்றுநோய் மார்பக சுற்றுச்சதையில் பரவியிருந்தால் மட்டுமே இந்த அறுவை நடத்தப்படும். பெரும்பாலான மாஸ்டெக்டமி நோயாளிகளுக்கு அந்த அறுவை மருத்துவத்தின் போதோ அல்லது சில மாதங்களுக்குப் பிறகோ மார்பக மீட்டுருவாக்கம் (re constriction) செய்யப்படும்

மாடிபைட் ரேடிகல் மாஸ்டெக்டமி (Modified)
இந்த முறையில் மார்பகமும் கை அக்குளின் கீழுள்ள சில லிம்ப் நோட்களும் அறுத்து அகற்றப் படும். மார்பு சதைகளும், அப்படியே பத்திரமாக விட்டு வைக்கப் படுவதால் மார்பகச் சுற்று வெளித் தோற்றமும், கையின் ஆற்றலும் பாதிக்கப் படாது. எளிதில் சீராகி விடும். இதுதான் தரமான மாஸ்டெக்டமி முறையாகும். இதில் அக்குளின் கீழுள்ள லிம்ப் நோட்கள் அகற்றுவதுடன் கூடிய சாதாரண மாஸ்டெக்டமியும் அடங்கும்

கதிர்பாய்ச்சு மருத்துவ முறை (Radiation therapy)
ரேடியேஷன் தெரபியில் (இதை ரேடியோ தெரபி என்றும் கூறுவார்கள்) புற்றுநோய் அணுக்களை அழித்து அவை மேலும் வளராமல் தடுப்பதற்கு ஆற்றல் வாய்ந்த எக்ஸ்-ரேக்களைப் பயன் படுத்துவார்கள். இந்தக் கதிர்கள் சாதாரணமாக வெளியிலுள்ள ரேடியோ பொருட்களிலிருந்து வெளிவந்து இயந்திரத்தின் உதவியால் மார்பகத்தை நோக்கிப் பாய்ச்சப் படுவதால் வெளிபுற கதிர்வீச்சு (External rerdiction) என்று கூறப்படும்.

சிஸ்டமிக் டிரீட்மெண்ட்:-
உடலமைப்பு முழுதும் சார்ந்த இந்த மருத்துவத்தில் கீழ்க்கண்டவை அடங்கும்

1. கீமோ தெரபி
புற்று அணுக்களை அழிக்க மருந்துகளைப் பயன்படுத்துவது இம்முறை மருத்துவமாகும். இது வழக்கமாக மருந்துகளின் கலவையாகும். இம்மருந்துகளின் வாய் வழியாகவோ, ஊசியின் மூலமோ தரப்படும். கீமோ தெரபி உடலமைப்பு முழுதும் சார்ந்த மருத்துவ முறையாகும். ஏனென்றால் தரப்படும் மருந்துகள் இரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுதும் பயணம் செய்யும். இது சுழற்சியாக தரப்படும். அதாவது மருத்துவ காலம், தேறும் காலம் மீண்டும் மருத்துவ காலம் என்று விட்டு விட்டு ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும்

2. ஹார்மோனல் தெரபி
புற்றுநோய் அணுக்கள் தாங்கள் வளர தேவையான ஹார்மோன்களிடமிருந்து தள்ளி வைக்கும் மருத்துவ முறையாகும். இந்த மருத்துவத்தில் ஹார்மோன்கள் பணி செய்யும் முறையை மாற்றும் மருந்துகள் பயன் படுத்தப்படும். இதில் பெண் ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் கருப்பையை அகற்றும் அறுவை மருத்துவமும் அடங்கும். அது உடலமைப்பு முழுதும் சார்ந்த மருத்துவ முறையாதலால் உடல் முழுதுமுள்ள புற்று நோய் அணுக்களை பாதிக்கும்

மருத்துவ மனையில் என்ன நடக்கும்?
கீழ்க்கண்டவை நீங்கள் மாஸ்டெக்டமி செய்து கொள்ளப் கொள்ளபவராக இருப்பின் நீங்கள் பெறப் போகும் குறிப்புகள் விவரம்
  • உங்களுடைய மருத்துவர் உங்கள் நோய் வரலாற்றைக் கேட்டறிவார். அறுவை மருத்துவத்தின் தன்மையையும் அதிலுள்ள சிக்கல்களையும் உங்களுக்கு விளக்குவார்.
  • நீங்கள் அறுவை மருத்துவத்திற்குத் தகுதியானவர் தானா என்பதைக் கண்டறிய உங்களின் இரத்தம் சிறிது பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளப்படும்.
  • நீங்கள் 40 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருப்பின் கிழ்க்கண்ட பரிசோதனைகள் நடைபெறும். உங்கள் இதயத்துடிப்பைப் பரிசீலிக்க எலக்ட்ரோ கார்டியோகிராம் (ஈ.சி.ஜி.) பரிசோதனையும், உங்களுடைய நுரையீரல், சரியாக உள்ளனவா என்பதை உறுதிப் படுத்த மார்புற எக்ஸ்-ரேவும் எடுக்கப்படும்
அனுமதி பெறும் நாளில்
நீங்கள் படுக்கைத் தொகுதிக்குள் (Ward) வந்ததும் வசதியாக தங்க செவிலியர் ஏற்பாடுகள் செய்து தருவார். பின்னர் உங்களுடைய எடை, உடல் வெப்பநிலை, நாடித் துடிப்பு, சுவாசிக்கும் அளவு, இரத்த அழுத்தம் முதலியவற்றைப் பரிசீலிப்பார்

மருத்துவர் உங்கள் நோய் வரலாற்றைக் கேட்டறிந்து உங்களைப் பரிசோதிப்பார். அவர் உங்களுக்குச் செய்ய வேண்டிய சிகிச்சையின் தன்மை, சிக்கல்களை விளக்கி உங்கள் அனுமதியைப் பெறுவார்
மயக்க மருந்து வல்லுநர் நீங்கள் அறுவை மருத்துவத்திற்கு தகதியானவர் தானா என்று மதிப்பீடு செய்வார்.

பொதுவாக இரவு 12 மணிக்குமேல் நீங்கள் எதையும் உண்ணவோ, குடிக்கவோ கூடாது என அறிவுறுத்தப் படுவீர்கள்.

அறுவை பெறும் நாள்
அறுவை மருத்துவத்திற்கு முன்னர் நீங்கள் உணவோ, நீரோ எடுத்துக் கொள்ளக் கூடாதென்று நினைவுறுத்தப் படுவீர்கள.
அறுவை மருத்துவ அறைக்குள் நீங்கள் போகுமுன்னர் அதற்குரிய கவுனை எடுத்து அணியுமாறு கேட்டுக் கொகள்ளப் படுவீர்கள்.
மருத்துவ பணியாளர் உங்களை உங்கள் படுக்கையிலிருந்து ஒரு தள்ளுவண்டியில் படுக்க வைத்து அறவை மருத்துவ அறைக்குள் தள்ளிச்செல்வார்.

அறுவை மருத்துவத்திப் பின்னால்
படுக்கை பகுதியில் நீங்கள் கூர்ந்து கவனிக்கப் படுவீர்கள்.
அதிகமாக வடியும் இரத்தத்தை அல்லது நிணநீரை வடிக்க அறுவை நடக்கும் இடத்தில் ஒரு குழல் (Tube) உள்ளே வைக்கப்படும்.
மயக்க மருந்தின் பக்க விளைவாக நீங்கள் வாந்தியெடுக்கலாம் அல்லது அந்த் இடத்தில் வலியை உணரலாம். அவற்றை உங்கள் செவிலியரிடம் தெரிவியுங்கள்.

மயக்க மருந்து தீருவதற்காக அறுவை மருத்துவம் நடந்து முடிந்த 6 மணி நேரம் வரை நீங்கள் படுக்கையில் படுத்திருக்க வேண்டும். எனினும் நீங்கள் நன்கு இருப்பதாக உணர்ந்தால் எழுந்து உட்காரவோ படுக்கையைச் சுற்றி மெல்ல நடக்கவோ நீங்கள் ஊக்கிவிக்கப்படுவீர்கள்.
உங்கள் மருத்துவரின் குறிப்பின் படி உங்களுக்கு பானமோ, உணவோ தரப்படும்.

அறுவை மருத்துவம் நடந்து முடிந்த 1-6 நாட்களில்
அறுவை மருத்துவம் நடந்த இடத்தில் அளவான இயக்கம் இருப்பதை உணர்வீர்கள்.

குப்பியில் 20 மி,லி,க்கும் குறைவான அளவு வடிநீர் இருந்தால் அது அகற்றப்படும்.
அறுவை நடந்த பக்கத்தில் உள்ள தோளும், கையும் ஆற்றலைப் பெறவும், அசைவைப் பெறவும் மார்பக ஆலோசகரோ அல்லது பிசியோ தெரபிஸ்டோ உங்களுக்குச் சில எளிய பயிற்சிகளைச் சொல்லிக் கொடுப்பார்.
அறுவை நடந்த இடத்தில் வலியிருந்தால் உங்கள் செவிலியர்க்கு சொல்லுங்கள். அந்த வலிக்கு காரணம் அறிந்து உங்களுக்கு ஊசி போடக் கூடும்.இல்லையென்றால் மருத்துவரை அழைக்க கூடும்.
புற்று அணுக்கள் பரவியுள்ளனவா எனப்பதைப் பரிசீலிக்கக ஒரு எலும்பு ஸ்கேன் எடுக்கவும், ஈரலில் அதிரொலி பரிசோதனைக்கும் நீங்கள் அனுப்பபடுவீர்கள்.

மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பும் நாள்
உங்கள் மருத்துவர் உங்களைப் பரிசீலித்து நீங்கள் நலமாக இருந்தால் வீட்டிற்கு அனப்புவார்.

உங்களுக்குத் தேவையான மருந்துகளை மருத்துவர் எழுதித்தருவார். அம்மருந்துகளை எப்படி பயன் படுத்த வேண்டுமென்பதை மருத்துவமனையில் விளக்குவார்.

உங்கள் செவிலியர் மருத்துவ சான்றிதழும், மறுமுறை மருத்துவரை எந்த நாளில் சந்திக்க வேண்டும் என்ற விவரத்தையும், மருத்துவ மனையிலிருந்து நீங்கள் போகுமுன்னர் தருவார்.

நீங்கள் மருத்துவ மனையில் இருக்கம் போது செய்யப்படாததிருந்தால் ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டிய நாளையும் பிற விவரங்களையும் உங்களுக்குத் தெரிவிப்பார்

அறுவை மருத்துவரை நீங்கள் காண வேண்டிய நாள் விவரமும் தரப்படும்.
குறிப்பு:
வடிகால் குப்பி விலக்கப் படுவதைப் பொறுத்து நீங்கள் மருத்துவ மனையிலிருந்து அனுப்பப்படும் நாள் அமையும். நீங்கள் நலமாக இருந்தால் நீங்கள் வடிகால் குப்பியுடனேயே நீங்கள் வீட்டிற்குப் போகலாம். அதை எவ்வாறு கவனித்துக் கொள்வது என்பது குறித்து செவிலியர் உங்களுக்கு கற்றுக் கொடுப்பார். சிறப்பு மருத்துவர் அவற்றை நீக்கலாமா என்பதையும் நிர்ணயிப்பார்.

மார்பகப் புற்றுநோயும் சில காரணிகளும்
மார்பகப் புற்றுநோய் வருவதைத் தடுக்கவும், வந்தபின் அது பரவுவதைத் தடுக்கவும் இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன.
முதல் நிலை தடுப்புமுறை: முதல் நிலை தடுப்பு முறை (Primary prevention) மார்பகப் புற்று நோய் வளருவதையும், அது உருவாகுவதற்கான அபாய காரணிகளைத் தடுக்கவும் உதவுகிறது. அறுவை சிகிச்சை மூலம் மார்பகங்களை நீக்குவது மட்டுமே 95% சதவிகிதம் நல்ல பலனைத் தரும். டாமாக்சிஃபென் என்ற மருந்து புற்று நோய் பரவுவதைத் தடுக்க வல்லது. மார்பகங்களை அகற்றுவதும், செயற்கை முறையில் மார்பங்களை ஏற்படுத்துவதையும், மரபணு வகையில் குறை இருந்து புற்றுநோய் இருந்து, பரவும் அபாயம் இருந்தால் மட்டுமே மருத்துவர்கள் செய்கிறார்கள் அல்லது பரிந்துரைக்கிறார்கள்.

இரண்டாம் நிலை தடுப்பு முறை: இந்நிலையில் மார்பகப் புற்று நோய் வரும் முன்னே அதை கண்டறிதலும், அதை தடுப்பதற்கான ஏற்பாடுகளை, பழக்கங்களை கைக்கொள்ளுதலும் கடைபிடிக்கப்படுகிறது.
மார்பக சுய பரிசோதனை: மாதாமாதம் செய்து கொள்ளும் மார்பகச் சுய பரிசோதனை ஆரம்ப நிலையிலேயே புற்று நோயை கண்டறிய மிகவும் உதவுகிறது. ஆரம்ப நிலையில் கண்டறியப்படும் புற்று நோய் 85% குணமடைய வாய்ப்புள்ளது. ஒரு நெல்லிக்காயளவு இருக்கும் கட்டியினைக்கூட சுய பரிசோதனையில் கண்டறியலாம். இவ்வாறு ஆரம்ப நிலையிலே கண்டறியப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்ல லிம்ஃப் நோடுகளில், இந்நோய் பரவுவதைத் தடுக்க முடியும்.

மார்பக நிழற்படம்: சுய பரிசோதனையில் ஏதேனும் ஐயப்பாடு வருமானால் மருத்துவர்கள் மார்பக நிழற்பட ஆய்வு செய்ய பரிந்துரைப்பர். சாதாரண நிலையில் மார்பகம் எப்படி இருக்கிறது என்பதையும் நிழற்படம் எடுத்து வைத்துக்கொள்ளுவது அவசியம்.

மருத்துவப் பரிசோதனை; பெண்கள் அதிலும் 50 வயதை கடந்தவர்கள் வருடம் ஒருமுறை மருத்துவரிடம் பரிசோதனைக்குச் செல்வது மிகவும் சிறந்தது. குழந்தைகள் பெறுவது, மாத சுழற்சி மாற்றங்கள் என ஹார்மோன்களின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்தப் பரிசோதனைகள் மிகவும் அவசியமாகும்.

ஹார்மோன் அடங்கிய மருந்துகள்: ஈஸ்ட்ரோஜனின் எதிர் வினை புரியக்கூடிய டாம்க்சிஃபென் இப்போது அதிகமாக உபயோகப் படுத்தப்படுகிறது. இம்மருந்து, புற்றுநோய் பரவுவதைத் தடுப்பதில் மிகவும் சக்தி வாய்ந்தது. ஆனாலும் இவ்வகை மருந்துகள் குறுகிய காலத்துக்குள்ளேயே மாதசுழற்சியை நிறுத்துவதும் அதற்கான அறிகுறிகளை தரக்கூடியதாக இருப்பதும் பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதனால் எலும்பு முறிவுகள் ஏற்படும் சாத்தியங்கள், எலும்பின் சக்தி குறைய காரணங்கள் அதிகமாகும். இப்போது பிராக்கோலி போன்ற காய்கறிகளில் உள்ள இண்டோல் 3 சார்பினால், மஞ்சளில் உள்ள சுர்சுமின் போன்ற வேதிப்பொருட்கள், காக்ஸ் எனப்படும் மரபணுவில் புற்று நோய்க்கு காரணமான பகுதியை தடுப்பதால், நோயை பரவ விடாமல் தடுப்பது சாத்தியம் என தெரிய வந்திருக்கிறது. இதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வைட்டமின் A யின் ஒரு வடிவமான ஃபென்ரெடினைட் இத்தாலியில் அதிகம் பயன் படுத்தப்படுகிறது. இம்மருந்து மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால் அதே சமயம் வைட்டமின் A எடுத்துக்கொள்வதால் இந்த பலன்கள் ஏற்படுவதில்லை. வைட்டமின் Aயின் இந்த வடிவத்திற்கு புற்றுநோய் செல்களை பழைய நிலைக்கு மாற்றும் சக்தி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

உணவு பொருட்கள் மூலம் மார்பக புற்று நோய் பரவுவதை தடுக்கும் வழிகள்:
தொடர்ந்து நடக்கும் ஆராய்ச்சிகளின் மூலம் உணவுப்பொருட்கள் மூலம் தடுப்பதே மிக சிறந்ததாகவும் அதிக பயனுள்ளதாகவும் தெரிய வந்திருக்கிறது. இது போன்ற உணவு பொருட்களால் மார்பகப் புற்று நோயை எந்த அளவிற்கு குறைக்க முடியும் என்பதை திட்டவட்டமாக கூற முடியாதென்றாலும், பலனிருப்பது தெரிய வந்துள்ளது.

உணவில் உள்ள கொழுப்பு சக்திகளின் தாக்கம்: உணவில் உள்ள கொழுப்பு சக்தி மார்பகப் புற்று நோய்க்கு எந்த வகையில் காரணமாக இருக்க முடியும் என தெளிவாகத் தெரியவில்லை. அமெரிக்க மக்களின் உணவில் சராசரியாக 40% கொழுப்பு இருக்கிறது. இது 20% ஆக குறைந்தால் பலன் இருக்க கூடும். கொழுப்பின் அளவு என்பது மட்டும் இல்லாமல் எந்த வகையான கொழுப்பு என்பதும் முக்கியம். உதாரணமாக poly unsaturated கொழுப்பு மார்பக புற்று நோயை ஊக்குவிப்பதாக, மிருகங்களில் பரிசோதனை செய்யப்பட்டபோது அறிய முடிந்தது.

சூரிய காந்தி விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் கெடுதலைத் தரும். அதே சமயம் சில எண்ணெய் வகைகள் உதாரணமாக ஆலிவ் எண்ணெய், போன்றவை நல்ல பலன் தருகின்றன. கனோலா எண்ணெய், சல்மன் என்ற மீனில் இருந்து வரும் எண்ணெய் ஆகியவை நல்ல பலனைத் தரும். நார் சத்து உணவில் அதிகம் இருப்பதும் நன்மை பயக்கும். பொதுவாக கைக்குத்தல் அரிசி, நன்றாக சுத்திகரிக்கப்படாத கோதுமை மாவு (unprocessed wheat) உமியுடன் கூடிய தானியங்கள் சிலவகை காய்கறிகள் இவற்றில் அதிக நார்ச்சத்து உள்ளது. முழுதானியங்கள் கூடிய சீரியல்களை அல்லது ரொட்டித் துண்டுகளை காலை உணவில் சேர்த்து கொள்வதும் மார்ப்க புற்று நோய் வருவதை தடுக்கும்.

பலவகைப் புற்று நோயை தடுக்கவல்ல சில அருமையான உணவு தயாரிக்கும் வழிமுறைகள் தலை சிறந்த சமயற்கலை வல்லுனர்கள் உதவியுடன், ஸ்ட்ரங் கார்னெல் மருத்துவமனை மார்பக ஆராய்ச்சி நிலையத்தால் தொகுக்கப்பட்டு விற்பனைக்கு இருக்கிறது. விரும்புவர்கள் அதனை அமேசான் அல்லது B&N தளத்தில் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.

பிராக்கோலி, பிரஸ்ஸல் ஸ்ப்ரொர்ஸ், கேல், மற்றும் முட்டை கோசு போன்ற பலவகை காய்கறிகளில் உள்ள இண்டோல் 3 கார்பினால் புற்று நோய்க்கு காரணமான மரபணுவை அடக்குவதாலும் (suppress), ஈஸ்ட்ரோஜனின் பலவகை மாற்றங்களைக் கட்டுப்படுத்துவதாலும், இவை மார்பகப் புற்று நோய் வருவதைத் தடுக்க மிக உதவுகின்றன.

இக்கட்டுரையில் சொல்லப்பட்ட பல செய்திகள் ஒரு சாதாரண வாசகனை கருத்தில் கொண்டே எளிமையாக சொல்ல பட்டிருக்கின்றன. எந்த ஒரு நோய்க்கான அறிகுறிகள் தெரியும் போதும் அல்லது நமக்கு அந்நோய் உள்ளதென ஐயப்பாடு இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவதே நன்மை பயக்கும். மேலும் பெண்கள் அதிலும் நிறைய குழந்தைகள் உள்ள பெண்கள், கருத்தடை மாத்திரைகள் எடுத்துகொள்ளும் பெண்கள், தங்களுக்கு இயல்பாக நிகழும் மத விலக்குச் சுழற்சியை மாற்றுவதாலும், பலவித ஹார்மோன் பிரச்சினைக்கு ஆளாக வாய்ப்புண்டு. வந்த பின் அல்லலுறுவதைக் காட்டிலும், வரும்முன் காப்பதும், கண்டறிவதும் நல்ல பலன்களைத் தருமென்பதில் ஐயம் இல்லை.

கேன்சர் பற்றி வைத்திய நிபுணர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:
1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.

3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர் (tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.
4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து

குறைபாடு (nutritional deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது.

5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது

7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது.

8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.

9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.

10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.

11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.

12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக் கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.

13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body’s own killer cells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.

14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body’s own killer cells) மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட, தேவையற்ற செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body’s normal method of disposing of damaged, unwanted, or unneeded cells)

15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது. எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், ஆசுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!

16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.

உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-
1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg’s amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal) பகுதியில். சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.
3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது. எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள்,
ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது..

4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15 நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40 degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.

5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it.
அனைவருக்கும் பகிருங்கள்!

 இது போல பயனுள்ள அழகு, மருத்துவ குறிப்புகள் பெற எங்கள் பக்கத்தை லைக் செய்யவும். மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…

Related

பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் 6408851429544462319

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item