சரும ஆரோக்கியமே அழகுக்கு அஸ்திவாரம்.

சருமம்   பியூட்டி ``ச ரும அழகென்பது காஸ்ட்லியான க்ரீம்களிலோ, ஸ்பா சிகிச்சைகளிலோ மட்டும் வந்துவிடுவதில்லை. அடிப்படையான சரும ஆ...

சருமம்

 

பியூட்டி

``சரும அழகென்பது காஸ்ட்லியான க்ரீம்களிலோ, ஸ்பா சிகிச்சைகளிலோ மட்டும் வந்துவிடுவதில்லை. அடிப்படையான சரும ஆரோக்கியமே அழகுக்கு அஸ்திவாரம். அதை எந்த வெளிப்பூச்சாலும் சிகிச்சையாலும் தர முடியாது'' என்கிறார் ஷீபா தேவி

நாள் 1
காலையில் வெறும் வயிற்றில் தேன் சேர்த்த எலுமிச்சைப்பழ ஜூஸ்.

காலை உணவுக்குப் பிறகு ஓர் ஆப்பிள், ஒரு பீட்ரூட், இரண்டு கேரட் சேர்த்து அரைத்த ஏபிசி ஜூஸ்.

மதிய உணவுடன் ஓர் ஆப்பிள்.

இரவு உணவுக்குப் பிறகு சர்க்கரை சேர்க்காத மாதுளை ஜூஸ் ஒரு கப்

தூங்குவதற்கு முன்...

அரை டீஸ்பூன் தேனுடன் அரை டீஸ்பூன் எலுமிச்சைப்பழச்சாறு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவிவிட்டுத் தூங்கச் செல்லவும்.

நாள் 2

தேன் சேர்த்த கிரீன் டீ (வெறும் வயிற்றில்).

காலை உணவுக்குப் பிறகு ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ்.

மதிய உணவுடன் ஒரு கப் சோயா பீன்ஸ் (சுண்டலாகவோ, பொரியலாகவோ).

இரவு உணவுக்குப் பிறகு சர்க்கரை சேர்க்காத பால் ஒரு கப்.

தூங்குவதற்கு முன்...

அரை டீஸ்பூன் அரிசி மாவில் ஒரு டீஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவிவிட்டுத் தூங்கச் செல்லவும்.

நாள் 3

இரண்டு கப் தண்ணீரில் கைப்பிடி அளவு புதினா சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் அரை மூடி எலுமிச்சைச்சாறும் சிறிது தேனும் சேர்த்து வெறும் வயிற்றில்  குடிக்கவும்.

காலை உணவுக்குப் பிறகு ஒரு வாழைப்பழம்.

மதிய உணவுக்குப் பிறகு ஒரு கப் கிவி ஜூஸ்.

இரவு உணவுக்குப் பிறகு ஒரு செவ்வாழைப்பழம்.

தூங்குவதற்கு முன்...

அரை வாழைப்பழத்துடன், ஊறவைத்த  பாதாமின் விழுது அரை டீஸ்பூன் சேர்த்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து மென்மையாக மசாஜ் செய்து கழுவிவிட்டுத் தூங்கச் செல்லவும்.

நாள் 4

ஒரு கேரட், ஐந்து பாதாம், சிறிது தேங்காய் பால் சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில்  குடிக்கவும்.

காலை உணவுக்குப் பிறகு ஒரு டம்ளர் ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் (தேன் சேர்த்தது).

மதிய உணவுக்குப் பிறகு ஓர் ஆரஞ்சுப் பழம்.

இரவு உணவுக்குப் பிறகு நான்கு பாதாம், சிறிது குங்குமப்பூ, கொஞ்சம் ரோஜா இதழ்கள் சேர்த்து அரைத்துப் பாலில் கலந்து குடிக்கவும்.

தூங்குவதற்கு முன்...

ஒரு டீஸ்பூன் பாலில் சிறிது குங்குமப்பூவை ஊற வைத்துக் கரைக்கவும். அத்துடன் இரண்டு துளிகள் ஆலிவ் ஆயில் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும்.

நாள் 5

ஒரு கப் தண்ணீரில் அரை டீஸ்பூன் சோம்பு, ஒரு டீஸ்பூன் கறுப்பு உலர் திராட்சை, ஆல்பகோடா எனப்படுகிற உலர்பழம் மூன்று... இவற்றை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அப்படியே குடிக்கவும்.
காலை உணவுடன் ஒரு தக்காளி யைப் பச்சையாகச் சாப்பிடவும்.

மதிய உணவுடன் டார்க் சாக்லேட் கொஞ்சம் சாப்பிடவும்.

இரவு உணவுக்குப் பின் ஒரு கப் பப்பாளி.

தூங்குவதற்கு முன்...

 ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், கெமிக்கல் கலக்காத பன்னீர் (ரோஸ் வாட்டர்) ஒரு டீஸ்பூன் கலந்து  முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவிவிட்டுத் தூங்கச் செல்லவும்.

நாள் 6

இனிப்பு சேர்க்காத தக்காளி ஜூஸ் (வெறும் வயிற்றில்).

காலை உணவுடன் ஒரு கப் அன்னாசிப் பழம்.

மதிய உணவுக்கு அரிசி உணவு தவிர்த்து கேழ்வரகு அல்லது ஓட்ஸ்.

இரவு உணவுக்குப் பின் மாதுளம் பழம் ஒரு கப்.

தூங்குவதற்கு முன்...

 அரை உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து மூன்று டீஸ்பூன் பால் சேர்த்துக் குழைத்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவிவிட்டுத் தூங்கச் செல்லவும்.

நாள் 7

குங்குமப்பூ, தேன் சேர்த்த பால் ஒரு டம்ளர் (வெறும் வயிற்றில்).

காலை உணவுக்குப் பிறகு ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ்.

மதிய உணவுடன் சர்க்கரை வள்ளிக்கிழங்கு இருக்கட்டும். அதன் பிறகு ஒரு டம்ளர் அவகாடோ ஜூஸ்.

இரவு உணவுக்குப் பின் ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் ஒரு டம்ளர்.

தூங்குவதற்கு முன்...

ஒரு முட்டையின் வெள்ளைக் கருவுடன், ஒரு டீஸ்பூன் தேன்,  இரண்டு துளி எலுமிச்சைச்சாறு சேர்த்துக் குழைத்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவிவிட்டுத் தூங்கச் செல்லவும்.

Related

அழகு குறிப்புகள். 4082646121778015691

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item