மழை அழகா? கூந்தல் அழகா?

மழை அழகா? கூந்தல் அழகா? உஷா அழகுக்கலை நிபுணர் அழ குக் கூந்தலைக் கார்மேகத்துடன் ஒப்பிடுகிறோம். ஆனால், கார்மேகக் காலத்தில் கூந்தல் தன் இ...

மழை அழகா? கூந்தல் அழகா?

உஷா அழகுக்கலை நிபுணர்
அழகுக் கூந்தலைக் கார்மேகத்துடன் ஒப்பிடுகிறோம். ஆனால், கார்மேகக் காலத்தில் கூந்தல் தன் இயற்கையான அழகையும் பொலிவையும் இழக்கிறது என்பதை அறிவீர்களா? மழை மற்றும் குளிர் நாள்களில் கூந்தல் உதிர்வு, பொடுகு, வறட்சி போன்ற பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.
மற்ற நாள்களைவிடவும் மழைநாள்களில் கூந்தல் பராமரிப்பில் கூடுதல் அக்கறை செலுத்தப்பட வேண்டும். அப்படிச் சில இயற்கை சிகிச்சைகளைப் பார்ப்போமா?




தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்து டபுள் பாய்லிங் முறையில் (தண்ணீரைக் கொதிக்கவைத்து அதன்மேல் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை வைத்துச் சூடாக்கும் முறை) லேசாகச் சூடாக்கவும். கறிவேப்பிலைப் பொடி, நெல்லிக்காய்பொடி, மருதாணிப் பொடி மூன்றையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து, சூடான எண்ணெயில் போட்டு, அடுப்பை அணைத்துவிடவும். இந்த எண்ணெயைத் தலையில் தடவி, மசாஜ் செய்யவும். பின்னர், வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவலால் தலைக்கு ஒத்தடம் கொடுத்து, பிறகு கூந்தலை அலசவும். இது வறட்சியையும் பொடுகையும் நீக்கி, கூந்தலை மிருதுவாக்கும்.



ழை நாள்களில் அடிக்கடி தலைக்குக் குளிக்க முடியாமல் போகலாம். அதனால் வறட்சி, பிசுபிசுப்பு, பொடுகு போன்றவை அதிகரிக்கும். ஒரு மூடி தேங்காயை அரைத்துப் பால் எடுத்துக்கொள்ளவும். அதில் கற்றாழையின் சதைப்பகுதி அல்லது வாசனையோ, கெமிக்கலோ கலக்காத கற்றாழை ஜெல் கலந்துகொள்ளவும். கூந்தலைச் சிறு பகுதிகளாகப் பிரித்து இந்தக் கலவையைத் தடவி, வட்டமாக மசாஜ் செய்யவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் அலசினால் வேர்க்கால்கள் பலப்படும். வறட்சியும் பொடுகும் நீங்கும்.


ம அளவு பாதாம் எண்ணெயும் நெல்லிக்காய்ச் சாறும் கலந்துகொள்ளவும். கூந்தலைப் பகுதிகளாகப் பிரித்து இந்தக் கலவையைத் தடவி, மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊறவைத்து அலசவும். இது கூந்தலுக்கு அழகான தோற்றத்தையும் ஆரோக்கியத்தையும் தரும்.


ரண்டு கைப்பிடி அளவு வேப்பிலையை அரை பக்கெட் தண்ணீரில் போட்டு இரவு முழுக்க ஊறவைக்கவும். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை வடிகட்டி, தலையை அலசவும். இது பொடுகை விரட்டும்.


முட்டையின் வெள்ளைக் கருவுடன், சிறிது விளக்கெண்ணெயும், அரை டீஸ்பூன் கிளிசரினும் கலந்து தலையில் தடவி, ஊறவைத்துக் குளிக்கவும். முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, கூந்தலை வலுப்படுத்தும் சிகிச்சை இது.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 8607487953755372461

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item