ஹெல்த் இன்ஷூரன்ஸ்... பாலிசி எடுக்கும் முன்னும், எடுத்தபின்பும்!

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... பாலிசி எடுக்கும் முன்னும், எடுத்தபின்பும்! ஜி.அண்ணாதுரை குமார் நிதி ஆலோசகர் கா ர் பயணத்தின்போது, சீட் பெல்ட் அணிவத...

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... பாலிசி எடுக்கும் முன்னும், எடுத்தபின்பும்!

ஜி.அண்ணாதுரை குமார் நிதி ஆலோசகர்
கார் பயணத்தின்போது, சீட் பெல்ட் அணிவது எவ்வளவு முக்கியமோ, பைக் ஓட்டும்போது தலைக்கவசம் எப்படி முக்கியமோ, அதுபோலதான் நம் முதலீட்டிற்கு ஒரு பாதுகாப்புக் கவசம் அவசியம் தேவை. அந்தப் பாதுகாப்புக் கவசம்தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ்.ஒரு குடும்பத்தையே, நிலைகுலையச் செய்யும் எதிர்பாராத செலவு என்றால், அது திடீரென்று ஏற்படும் மருத்துவச் செலவு மட்டுமே.

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள் 

மருத்துவச் செலவுகள் ஆண்டுக்குச் சுமாராக 10-15% உயர்கிறது. அதேநேரத்தில், சாமானியனின் ஆண்டு வருமானம் சில சதவிகிதம்கூட உயரவில்லை. உடல்நலம் இல்லாமல், மருத்துவமனையில் சேர்ந்து பலரால் லட்சக் கணக்கில் செலவு செய்ய முடியாத நிலை.அப்படியே செய்வதாக இருந்தாலும், நிச்சயம் கடன் வாங்கித்தான் ஆகவேண்டும். இந்த நிலையில்தான், ஹெல்த் இன்ஷூரன்ஸின் தேவை வருகிறது.

பாலிசி எடுக்கும்முன் கவனிக்க வேண்டியவை

1. பாலிசி எடுக்கப்போகும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடுகள்

2.  க்ளெய்ம் செட்டில்மென்ட் சராசரி விகிதம்

3. நிறுவனத்தின் மருத்துவமனைத் தொடர்புகளில் (Network), உங்கள் பகுதியில் சிறந்த மருத்துவமனைகள் இருக்கின்றனவா?

4. காத்திருப்புக் கால நிபந்தனைகள்

5. எந்தெந்த நோய்களுக்கு உடனடி விதிவிலக்கு

6. மூத்த குடிமக்களுக்கான பாலிசியில் கோ-பேமென்ட் எத்தனை சதவிகிதம்?

7. எந்த நோய்களுக்கெல்லாம் க்ளெய்ம் உண்டு, எதற்குக் கிடையாது..?

8. இப்போது எடுக்கப்போகும் கவரேஜ் தொகையானது நம் குடும்பத்துக்குப் போதுமா?

9. க்ளெய்ம் செய்யவில்லை என்றால், அதற்கு ‘‘நோ க்ளெய்ம் போனஸ் உண்டா?

10. நிறுவனத்தின் செயல்பாடு பிடிக்கவில்லை என்றால், வேறு நிறுவனத்துக்கு பாலிசியை மாற்றிக்கொள்ளும் போர்டபி லிட்டி (Portability) வசதி உள்ளதா என்பன போன்றவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கெனவே ஏதேனும் நோய்கள் இருந்தால், அறுவை சிகிச்சை செய்திருந்தால், அதனை மறக்காமல் தெரிவிக்கவேண்டும்

பாலிசி எடுத்தபின்...

1. ஒவ்வொரு வருடமும், பாலிசியைத் தவறாமல் புதுப்பிக்க வேண்டும்; தேவையற்ற காலதாமதம், பாலிசியை முழுமையாக முடங்க செய்துவிடும்.

2. சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டால், 24 மணி நேரத்துக்குள், இன்ஷூ ரன்ஸ் நிறுவனத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

3. சிகிச்சை முடிந்த 15 நாள்களுக்குள் க்ளெய்ம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

4. மருத்துவமனையில் தங்கி, சிகிச்சை எடுத்ததற்கான ஒரிஜினல் பில், ஸ்கேன் ரிப்போர்ட், மருந்து, மாத்திரை வாங்கிய பில், மருத்துவமனையின் ரிப்போர்ட் போன்றவற்றைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
‘ஒவ்வொரு வருடமும், பாலிசியை பிரீமியம் கட்டி புதுப் பித்து வருகிறேன். இதுவரை ஒருநாளும் மருத்துவமனை பக்கம் போனது கிடையாது. மருத்துவக் காப்பீடு வசதியைப் பயன்படுத்தியதே கிடையாது. அப்படியென்றால் எனக்கு, இது வீண் செலவுதானே?’ என்று சிலர் நினைக்கலாம்.

சிகிச்சை எதுவும் பெரிதாகத் தேவைப்படாத அளவுக்கு, உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் நல்ல உடல் நலம் இருப்பது பெரிய வரம். ஆனால், ஆரோக்கியமாக இருக்கும்போதே பாலிசி எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் தேவைப்படும்போது, உடனடி யாக மருத்துவக் காப்பீடு எடுத்து, பலன் பெற முடியாது.

இன்றைய சூழலில், பணத்தைச் சேர்ப்பதே கடினம் என்கிறபோது, மருத்துவச் செலவுகள் என்னும் கரையான், நமது சேமிப்பை அரிக்காமல் இருக்க, ஹெல்த் இன்ஷூரன்ஸ் என்கிற பாதுகாப்புக் கவசத்தை உடனடியாக எடுத்து, நம் சேமிப்பையும், குடும்பத்தையும் காத்துக்கொள்வது அவசியம்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 4586933613217196738

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item