மார்பகங்கள் – உடலியல் உண்மைகள்! மகளீர்பக்கம்!! உலகத்தமிழ் மங்கையர் மலர்.

  உலகத்தமிழ் மங்கையர் மலர் ♥ மகளீர்பக்கம் மார்பகங்கள் – உடலியல் உண்மைகள்! ♥ பெண்களின் உடலில் இருக்கும் உறுப்புகளில் அவர்களின்...

மகளீர்பக்கம்
மார்பகங்கள் – உடலியல் உண்மைகள்!
பெண்களின் உடலில் இருக்கும் உறுப்புகளில் அவர்களின் அதிக கவனிப்பிற்குரிய உறுப்பாக இருப்பவை, மார்பகங்கள்.
இவை, பலருக்கு கவலைக்குரிய உறுப்பாகவும் இருக்கிறது. டீன்ஏஜ் பெண்கள் என்றால், ‘சிறிதாக இருக்கிறது என்று ம், ஒன்றுக்கொன்று அளவில் மாறுபாடு இருக்கிறதென்றும்’ நினைக்கிறார்கள்.
திருமணமான பெண்கள் என்றால், ‘சரிந்து, தொங்கி காணப்படுகிறது’ என்று கவலைப்படுகிறார்கள்.
பெண்களின் இத்தகைய கவலைகள் நீங்க வேண்டுமானால் அவர்கள் மார்பகங்கள் பற்றிய உடலியல் உண்மை களைப்புரிந்து கொள்ளவேண்டும்.
மார்பகங்கள் என்பவை கொழுப்பு திசுக்களால் சூழப்பட்ட பால் சுரப்பு நாளங்களை உள்ளடக்கியவை. செடியைப் பிடுங்கிப் பார்த்தால், அதன் அடியில் எவ்வாறு பல கிளைகளாக வேர்கள் பரவிச் செல்லு மோ அதைப் போன்றுதான் மார்பகக் கா ம்பின் அடிப்பகுதியில் பெரி தும், சிறிதுமாக எண்ணற்ற பல கிளை நாளங்கள் உள்ளன.
இவற்றை சூழ்ந்துதான் மார்பகத் தசை பெருகும். மார்பகங்களில் இருக்கும் கொழுப்பை பொறுத்துதான் அதன் அள வும், வடிவமும் அமைகிறது.
மார்பகம் பெரிதாக இருந்தால் அதில் அவரது குழந்தைக்காகளுக்கு நிறைய பால் சுரக்கும் என்பது தவறு,
மார்பகம் சிறியதாக இருந்தால் குறைந்த அளவே பால் சுரக்கும் என்பதும் தவறானது. மார்பக அளவிற்கும், சுரக்கும் பாலின் அளவிற்கும் சம்பந் தம் இல்லை.
டீன்ஏஜ் பெண்களில் பலர் தங்களது மார்பகங்களில் ஒன்று சிறியதாகவும், இன்னொன்று பெரியதாகவும் இருப்பதாக கருதுகிறார்கள். அது உண் மைதான்.
நமது கைகளோ, கால்களோ, கண் புருவங்க ளோகூட இரண்டும் ஒரே அள வில் இருப்பதில்லை. அது போலவே மார்பகங்களிலும் லேசான அளவு வித்தியாசம் இருக்கவே செய்யும். அதற்கு காரணம்,
இரண்டு மார்பகங்களும் ஒரே நேரத்தில் சமமாக வளர்வதில்லை. ஒரு மார்பகம் வளரத் தொடங்கும் காலகட்டத்தில் இன்னொரு மார்பகம் வளர்ச்சியை நிறைவு செய்திருக்கும். அதனால் தான் இந்த சிறிய வித்தியாசம். இதற்கு போய் கவலைப்பட வேண் டிய அவசியம் இல்லை.
அளவு, வடிவத்தில் பெரிய அளவில் வித்தியாசம் இருந்தால் மேடு பள்ளமாக வீக்கமாக காம்பு உள்ளே மடிந்து இருந்தால் மட்டும் டாக்டரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
பொதுவாக இரண்டு மார்பகங்களும் சிறிதாக இருந்தால், அதை பெரிதாக்க ஏதேனும் வழி முறை இருக்கிறதா என்று பல பெண்கள் கேட்கிறார்கள்.
மார்பகங்கள் கொழுப்பு தசைகளால் ஆனவை என்பதால், நிறைய கொழுப்பு சத்துணவு சாப்பிட்டால் இயற்கையாகவே அவை பெரிதாக வாய்ப்பிருக்கிறது.
தேங்காய்ப்பால் அதிகமாக உணவில் சேர்ப்பவர்களுக்கு சாதாரணமாகவே பெரிதாக இருக்கும்.
விசேஷ பயிற்சிகள் செய்து மார்பகங்களை பெரிதாக்க முடியாது. ஏனென்றால் அதற்கான தனி தசைகள் எதுவும் மார்ப கத்தில் இல்லை.
ஹார்மோன் மருந்து மாத்திரைகளால் மார்பகங்களை பெரிதாக்க முடியும். ஆனால் அவை அளவுக்கு மீறி பெருத்து விடும். வலி வரக் கூடும். சீரான அளவில் மார்பகங்கள் இருப்பதுதான் அழகு.
சில பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்கிறார்கள். இந்த அறுவை சிகிச்சையின்போது மார்பகத்தின் அடிப்பகுதியில் திறப்பை உருவாக்கி, அதன் வழியாக சிலிக்கான் பையை செலுத்தி உள்ளே வைத்து தைத்து விடுவார்கள். அதனால் மார்பகங்கள் தொய்வின்றியும், பெரிதாகவும் காணப்படும்.
ஆனால் குழந்தைகளுக்கு பாலூட்ட முடியாது.
இயற்கையாகவே மார்பகங்கள் மிக பெரிதாக அமையப்பெற்ற பெண்கள், அத னால் பெரும் அவஸ்தைப்படுவதுண்டு. சிறிதாக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். சிறிதாக்கும் அறுவை சிகிச்சைகள் உள்ளன. முது குவலியை உருவாக்கும் அளவிற்கு மார்பகங்கள் பெரிதாக இருந்தால், சிறிதாக்கும் முயற்சியில் ஈடுபடலாம்.
இல்லா விட்டால் பொருத்தமான பிராக்களை அணிந்து, அவஸ்தைகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.
இளம் பெண்களில் பலரும் மார்பகங்கள் விரைத்த நிலையிலே இரு க்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அவை கீழ் நோக்கி சரிந்து விடுகின்றன. இப்படி சரிவதுதான் இயற்கை.
கொழுப்பு அடிப்பகுதியில் சேருவதால்தான் மார்பகங்கள் கீழ்நோக்கி இழுக்கப்பட்டு சரிகின்றன. காம்புகள் மேல் நோக்கி நிற்கும் அளவிற்கு தோன் றினால், அது சரியாத விரைப்பு மார்பகமாய் காட்சியளிக்கும்.
மாடலிங் தொழில் செய்யும் பெண்கள்
பொதுவாக தங்கள் கைகளை தூக்கியவாறும், தோள்பட்டையை பின்னோக்கி இழுத்த நிலையிலும் காட்சி தருவார்கள். அதற்கு காரணம், அவர்கள் மார்பகங்கள் விரைத்த நிலையில் சரியாமல் காட்சி தர வே ண்டும் என்பதுதான்!
‘சில மாடல் அழகிகளின் போட்டோக்களை பார்க்கும்போது அவர்களது மார்பக காம்பு கள் விரைப்பாக இருக்கிறதே, எங்களுக்கு அப்படி யில்லையே’ என்று சில பெண்கள் கேட்கிறார்கள்.
அந்த போ ட்டோக்கள் எடுக்கப்படுவதற்கு முன்பு மாடல் அழகிகள் காம்புகளில் ஐஸ் துண்டுகளை வைத்து விடுவார்கள். குளிரில் அது சுருங்கி, விரைத்து நிற்கும். அந்த விரைப்பு அதிக நேரம் நிலைக்காது. புகைப்படம் எடுக்க மட்டுமே
மார்பகங்கள் தாய்மையின் சின்னங்கள். அதனால் அவை ஆரோக்கியமாய் பராமரிக்கத் தகுந்தவை செய்யுங்கள்.
இது பெண்கள் தெரிந்துகொள்ளவே. பதிவு செய்யப்படுகிறது .
தேவையற்ற அநாகரீகமாக கருத்து பதிவு செயபவர்கள் தடை செய்யப்படுவார்கள்.
சியாமளா
உலகத்தமிழ் மங்கையர் மலர்

Related

ஹெல்த் ஸ்பெஷல் 7093153628486420150

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item