கோதுமை நீரிழிவிற்கு சிறந்த தீர்வா? உணவு விழிப்புணர்வு !

உணவு விழிப்புணர்வு கோதுமை நீரிழிவிற்கு சிறந்த தீர்வா?? அரிசிக்கு பதில் கோதுமை சாப்பிட்டால் சர்க்கரை குறையும் என்பதே இந்த நூற்றாண்ட...

உணவு விழிப்புணர்வு

கோதுமை நீரிழிவிற்கு சிறந்த தீர்வா??

அரிசிக்கு பதில் கோதுமை சாப்பிட்டால் சர்க்கரை குறையும் என்பதே இந்த நூற்றாண்டின் சிறந்த ஜோக் 

கோதுமை Vs அரிசி

எதில் அதிக மாவுச்சத்து (carbohydrate) இருக்கிறது ?

100 கிராம் கோதுமையில் 71 கிராம் கார்ப்ஸ் இருக்கிறது
அதே
100 கிராம் அரிசியில் 79 கிராம் கார்ப்ஸ் இருக்கிறது
சரி கலோரி வகையில் கோதுமை
எப்படி என்று பார்ப்போம்
100 கிராம் அரிசியில் 358 கிலோ கலோரி கிடைக்கிறது
100 கிராம் கோதுமையில் 339 கிலோ கலோரி கிடைக்கிறது.
ஆக கலோரி கணக்கிலும் மாவுச்சத்து கணக்கிலும் அரிசிக்கு கோதுமை சிறிதும் இளைத்ததல்ல.

பிறகு ஏன் கோதுமை பரிந்துரைக்கப்படுகிறது???

தமிழர்களுக்கு அரிசி பிடிக்கும்
ஆனால் கோதுமை அவ்வளவாக பிடிக்காது.
அரிசியை விட கோதுமையை சாப்பிடச் சொன்னால் குறைவாக சாப்பிடுவார்கள். அதனால் சர்க்கரை கன்ட்ரோல் ஆகும் என்ற நினைப்பில் "கோதுமை" பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால் நடந்தது என்ன?

அரிசி சாப்பிடுவதும் குறைந்தபாடில்லை.
சராசரி தமிழன் ஒரு வருடத்திற்கு 127 கிலோ அரிசி சாப்பிடுகிறான்.
இது இந்திய சராசரி அளவை விட மிக அதிகம்( இந்திய சராசரி 77 கிலோ/வருடத்துக்கு)

சரி கோதுமையை அதிகமாக உண்ணும் மாநிலங்களாவது நல்லா இருக்கா??

ஒரு எட்டு நம்ம சிங்குகளின் பூமிக்கு போய் பார்ப்போம்.
பஞ்சாப் தான் நம் நாட்டிலேயே குண்டாவனவர்கள் அதிகம் இருப்பவர்களில் முதல் ரேங்க்.

ஆகவே கோதுமையினால் பெரிய ப்ரயோஜனம் கிடையாது என்பது திண்ணம்

இன்னும் கோதுமையில் உள்ள
"க்ளூடன்" (gluten) ஒவ்வாமையை உருவாக்கவல்லது.
இதற்குப் பெயர் க்ளூடன் ஒவ்வாமை(gluten intolerance)
நமது இந்திய மக்கள் தொகையில் 10 சதவிகித மக்களுக்கு இந்த ஒவ்வாமை இருக்கிறது என்கிறது ஒரு ஆய்வு.

இந்த ஒவ்வாமை நமக்கு குடல் சார்ந்த தன்எதிர்ப்பு நோய்களையும்(celiac disease) இதய நோய்களையும் உருவாக்க வல்லது.

அதுவும் நமது பாரம்பரிய கோதுமைகளை விட்டுவிட்டு தற்போது இந்தியா முழுமைக்கும் பயிரிடப்படும் குட்டை கோதுமை, ஆறு க்ரோமோசோம்களை கொண்ட Hexaploid ரகமாகும்(hexa= ஆறு) .

நமது பாரம்பரிய கோதுமை இரண்டு க்ரோமோசோம்கள் கொண்ட diploid ரகமாகும் (di = இரண்டு) .

இந்த Hexaploid க்ரோமோசோம் உள்ள கோதுமை க்ளூடன் அலர்ஜியை உருவாக்க வல்லது என்கிறது ஒரு ஆய்வு.

கோதுமையை பிரதான உணவாக உண்ணும் பஞ்சாபின் நகரமான லூதியானாவில் 310 இல் ஒருவருக்கு க்ளூடன் ஒவ்வாமை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 110 இல் ஒருவருக்கு இந்த ஒவ்வாமை இருக்கிறது.
எனவே கோதுமையை உண்ணும் முன் பல முறை யோசிக்க வேண்டியிருக்கிறது.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 9141679073220787197

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item