புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ!

புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ! புரட்சியின் மூலம் 1959ஆம் ஆண்டு கியூபா நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற ஃபிடல் காஸ்ட்ரோ 1976ம் ஆண்டுவரை...


புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ!

புரட்சியின் மூலம் 1959ஆம் ஆண்டு கியூபா நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற ஃபிடல் காஸ்ட்ரோ 1976ம் ஆண்டுவரை அப்பதவியில் இருந்தார். 1976ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் நாளில் இருந்து அதிபர் பதவியே நாட்டின் உயரியது என மாற்றியமைக்கப்பட்டது. அப்போதில் இருந்து 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி வரை கியூபாவின் அதிபர் பதவியில் ஃபிடல் காஸ்ட்ரோ இருந்தார்.

ஸ்பெயின் நாட்டின் குடியேற்ற நாடாக இருந்த கியூபாவில் இருந்து அமெரிக்காவின் ஆதரவு பெற்ற பாடிஸ்டாவின் ஆட்சியை அகற்றுவதற்கு வழக்கறிஞரான ஃபிடல் காஸ்ட்ரோவும், அர்ஜெண்டினாவின் மருத்துவரான சே குவேராவும் இணைந்து மக்களைத் திரட்டிச் செய்த புரட்சியே காரணமாகும்.1954ஆம் ஆண்டு புரட்சியின் மூலம் நாட்டைக் கைப்பற்றிய ஃபிடல் காஸ்ட்ரோ அந்நாட்டின் பிரதமராக இருந்து பண்ணையார்களிடம் இருந்த நிலங்களை ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுத்தார். ஃபிடலின் தந்தை 1940 ஏக்கர் கரும்புத் தோட்டத்தை வைத்திருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

நாட்டைப் பொதுவுடைமைப் பாதையில் வழிநடத்தி அனைவருக்கும் இலவசமாகக் கல்வி அளிக்க ஏற்பாடு செய்தார் ஃபிடல். தொழிற்சாலைகள் அனைத்தையும் அரசுடைமையாக்கி மக்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தினார். தன் நாட்டு வளங்களைக் கைப்பற்ற முயன்ற அமெரிக்காவுக்குத் தன் வாழ்நாள் முழுவதும் சிம்ம சொப்பனமாக விளங்கினார் பிடல் காஸ்ட்ரோ.

கியூபாவின் வளர்ச்சியைப் பொறுக்காத அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தபோதும் பொதுவுடைமை சோவியத் ஒன்றியத்துடன் வணிக, பொருளாதார, ராணுவத் துறைகளில் ஒத்துழைப்பை வளர்த்துக்கொண்டு கியூபாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசென்றார். வேளாண்மை மற்றும் சர்க்கரைத் துறை வளர்ச்சியால் கியூபா உலகின் சர்க்கரைக் கிண்ணம் என்றழைக்கப்படுகிறது. மக்களின் நலவாழ்வில் அக்கறையுடைய காஸ்ட்ரோ, உலகத்திலேயே மக்கள் மருத்துவர் விகிதத்தில் கியூபாவை முதலிடத்தில் இடம்பெறச் செய்தார்.

பிரதமர், அதிபர் என ஐம்பதாண்டுகள் நாட்டுக்குத் தலைவராக இருந்த ஃபிடல் காஸ்ட்ரோவை முதலாளித்துவ நாடுகள் சர்வாதிகாரி என்று அழைத்தன.தான் சர்வாதிகாரி அல்ல என்றும் மக்கள் நலனே முதன்மையானது என்று உணர்த்தும் வகையில் உடல்நலக் குறைவு, முதுமை ஆகியவற்றின் காரணமாக 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி அதிபர் பதவியில் இருந்து விலகி உலகுக்கே எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். அன்று முதல் ஃபிடலின் தம்பி ரவுல் காஸ்ட்ரோ கியூபாவின் அதிபராகப் பதவியில் உள்ளார். அமெரிக்காவின் உளவுப்படையான சிஐஏ திட்டமிட்டுச் செயல்படுத்திய 638 கொலைமுயற்சிகளில் இருந்து உயிர்தப்பிய ஃபிடல் காஸ்ட்ரோ தனது 90ஆவது வயதில் காலமானார்.

கியூபாவைப் பொதுவுடைமைப் பாதையில் வளர்ச்சி பெறச் செய்த இந்தச் சிற்பி அணிசேரா நாடுகள் இயக்கத்தின் தலைவராகவும் இருமுறை இருந்திருப்பது குறிப்பிடத் தக்கது.

Related

இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! 8832957632483375750

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item